இடுகைகள்

மனிதம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஐந்து ஆண்டுகளில் ஐம்பது லட்சம் சம்பாதித்தால் ஹாரிகா பரிசு! - பணம் - எண்டமூரி வீரேந்திரநாத்

படம்
  பணம்  எண்டமூரி வீரேந்திரநாத் தமிழில் கௌரி கிருபானந்தன் அல்லயன்ஸ் வெளியீடு நூலின் அட்டையைப் பார்த்து அதனை பற்றி முடிவெடுக்க கூடாது என்பதற்கு இந்த நூல் சாலப் பொருத்தமானது. அட்டை கண்ணாடிக்கல் மாறி தெரிந்தாலும் கதை வைரம்தான். நாவலின் தொடக்க காட்சியை வாசித்துவிட்டாலே உங்களால் அதனை கீழே வைக்கமுடியாது. இத்தனைக்கும் இது தெலுங்கில் எழுதப்பட்டு தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. இந்த நாவல் ஒரு மொழிபெயர்ப்பு என்பதையே உங்களால் நினைவில் வைத்திருக்க முடியாது. அந்தளவு வேகம்.  நாவலின் முதல்காட்சியே காந்தி, மருந்துக்கடையை தேடுவதும். அவனது அவசரத்தை பயன்படுத்தி ஆட்டோக்காரர், மருந்துக்கடைக்காரர்  ஆகிய இருவரும் பணத்தை சுரண்ட நினைப்பதுதான். மருந்தை வாங்கிக்கொண்டு போயும் கூட அதற்கான பயன் இருக்காது. அவனது அம்மா இறந்துபோய்விடுவார். அப்போது காந்தி கேட்கும் கேள்வி, மனதை அறுக்க கூடியது. அவனைப் பார்க்கும் நர்ஸ் கூட சற்று கலங்கிப்போய்விடுவாள். எண்டமூரி வீரேந்திரநாத்தின் சிறப்பே எழுதும் எழுத்துகள் உங்களுக்கு அப்படியே மனக்கண்ணில் காட்சியாக ஓடுவதுதான். இதனால் நாவலை உணர்வுப்பூர்வமாக வாசிக்கத் தொடங்கிவிடுகிறோம்.  க