இடுகைகள்

சமூகசேவை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தீக்குச்சியை எரித்தே வெளிச்சம் - கடிதங்கள் - கதிரவன்

படம்
  பிக்பாக்கெட் டூ ரட்சகர் ! அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமா ? வீட்டில் உள்ளோரை கேட்டதாக சொல்லவும் . எங்கள் நாளிதழை டிஜிட்டலாக ஐந்து பக்கங்களில் உருவாக்கி பள்ளிகளுக்கு அனுப்புகிறேன் என்று எடிட்டர் சொன்னார் . அதாவது , தினசரி எங்களுக்கு வேலை உண்டு . இன்று மருத்துவர் ஜீவா பசுமை விருது பெற்ற சமஸ் , டி . எம் . கிருஷ்ணா ஆகியோரது வீடியோ பார்த்தேன் . ஊக்கமூட்டும்படி இருந்தது . சமஸ் செயலூக்கம் பற்றியும் , ஜீவா ஏற்படுத்திய தாக்கம் பற்றியும் பேசினார் . வாய்ப்பாட்டு கலைஞர் கிருஷ்ணா தனது செயல்பாடு , நம்பிக்கை பற்றி உறுதியாக பேசினார் . கலை எப்படி மனிதனை மாற்றுகிறது , அதை கலைஞன் எப்படி சாத்தியப்படுத்துகிறான் என்பதை பேசியது அருமை . இன்றைய நாள் இனிதானது இவர்களால்தான் . காலையில் கவிதா அக்கா பேசினார் . தற்போது ஓமனில் வாழ்கிறார் . எப்போதும் உற்சாகமாக இருக்கும் நபர்களில் ஒருவர் . அவருக்குப் பிடித்த நூல்கள் , வாசிப்பு என சிறிது நேரம் பேசினோம் . விரைவில் ஈரோட்டுக்கு வருகிறேன் என்றார் . இவர் எனக்கு நண்பரல்ல . அண்ணனின் தோழி . உறவினர் . தி ஆர்க் மிஷன் அமைப்பை நடத்தும் ஆட்டோ ராஜா என்பவரைப் பற்றி படித

ஆர்எஸ்எஸ்ஸின் நிழலுடன்தான் எதிர்க்கட்சிகள் போரிட்டு வருகின்றன! - பத்ரி நாராயணன், சமூக வரலாற்று அறிஞர்

படம்
            பத்ரி நாராயணன் சமூக வரலாற்று அறிவியலாளர் பத்ரி நாராயணன் , ஆதி திராவிடர் மற்றும் இந்துத்துவா பற்றி பல்வேறு கட்டுரைகளை நூல்களை எழுதியுள்ளார் . அண்மையில் ரீபப்ளிக் ஆப் இந்துத்துவா என்ற நூலை எழுதியுள்ளார் . இதில் எப்படி இந்துத்துவா தன்னை மறுகட்டமைப்பு செய்து உலகம் முழுவதும் பரவி வருகிறது என்பதைக் கூறியுள்ளார் . இன்று ஆர்எஸ்எஸ் அமைப்பை எதிர்ப்பவர்கள் , அதன் நிழலுடன்தான் போரிடுகிறார்கள் . இந்துத்துவ தத்துவத்தின் கர்ப்பகிரகம் என ஆர்எ்ஸ்எஸை நீங்கள் கூறியுள்ளீர்களே ? தொண்ணூறுகளுக்குப் பிறகு உலகமயமாக்கம் , தாராளமயமாக்கம் அறிமுகமானது . அப்போதிலிருந்தே ஆர்எஸ்எஸ் அமைப்பை நவீன காலகட்டத்திற்கு ஏற்றபடி தனது கொள்கைகளையும் செயல்களையும் சிந்தனைகளையும் மாற்றி அமைத்து வருகிறது . இன்று ஒருவர் பல்வேறு சமூக பிரச்னைகள் சார்ந்து ஆர்எஸ்எ்ஸ் அமைப்பை கேள்விகள் கேட்டாலும் அதனிடம் அதற்கான பதில்கள் உள்ளன . அண்மையில் கூட அதன் தலைவர் மோகன் பகவத் , கோல்வால்கரின் பேச்சுகள் அடங்கிய தொகுதியில் கூற்ப்பட்ட சில கருத்துகளை நாம் மறக்க வேண்டும் என்று கூறியுள்ளார் . காலமும் , மக்களும் ம