சர்வதேச மொழிபெயர்ப்பு தினம் - மொழிபெயர்ப்பில் இணையத்தின் தாக்கம், பல்வேறு பிரச்னைகள் பற்றி கவனம் கொள்ளவேண்டும்!
சர்வதேச மொழிபெயர்ப்பு தினம் உலகளவில் ஆக்ஸ்போர்ட் பிரஸ் பதிப்பு நிறுவனம் முக்கியமானது. இந்த நிறுவனம், தனது நூல்களை பல்வேறு உலக மொழிகளில் பதிப்பித்து வருகிறது. பழைய இந்தியாவில் முதல் பிரதமரான நேருவால் தொடங்கப்பட்ட சாகித்திய அகாதெமி நிறுவனம், பத்துக்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் படைப்புகளை மொழிபெயர்த்து வெளியிட்டது. இந்து பேரினவாத அரசியலில் சாகித்திய அகாதெமி, நேஷனல் புக் ட்ரஸ்ட் ஆகிய நிறுவனங்கள் சிக்கி, தங்களது ஆக்கப்பூர்வத் திறனை எப்போதோ இழந்துவிட்டன. இணையத்தில் ஆங்கில வழியாக மொழிபெயர்ப்பவர்கள் அதிகம் உள்ளனர். குறிப்பிட்ட மொழியைக் கற்று அதன் வழியாக தமிழுக்கு மொழிபெயர்ப்பவர்கள் அல்லது உள்ளூர் மொழியில் மொழிபெயர்ப்பு செய்வது குறைந்துவிட்டது. இதுபோல மொழிபெயர்ப்பை செய்வதை குறிப்பிட்ட மொழியை திணிக்க முயலும் ஒன்றிய அரசு ஊக்குவிப்பதில்லை. தாய்மொழியை வளர்க்க வேண்டுமெனில் குறிப்பிட்ட மாநில அரசுகள்தான களத்தில் இறங்கி பணியாற்ற வேண்டும். தெற்காசியாவில் சால்ட் என்ற மொழிபெயர்ப்பு திட்டம் உருவானது. திட்டமாக இப்படி உருவானாலும் அமைப்பு ரீதியாக ஐஎல்டி கொரியா அல்லது கோத்தே இன்ஸ்டிடியூட...