கல்வி ஆராய்ச்சி நிறுவனங்களும் இனி ஜிஎஸ்டி கட்ட தயாராக இருக்கவேண்டும்! - வரித் தீவிரவாதத்தின் அடுத்த கட்டம்
ஆராய்ச்சிகளை நிலைகுலைய வைக்கும் வரி தீவிரவாதம் மாத சம்பளம் வாங்குபவர்களை வரி என்ற பெயரில் கொள்ளை அடிப்பது மட்டுமின்றி இப்போது ஆராய்ச்சி பல்கலைக்கழகங்களையும் வலதுசாரி மதவாதிகள் குறிவைக்கத் தொடங்கிவிட்டனர். அந்த வகையில் நாட்டிலுள்ள அனைத்து ஆராய்ச்சி நிறுவனங்கள், அமைப்புகளுக்கும் நோட்டீஸ் அனுப்பி அதுவரை பெற்ற மானியங்களுக்கான ஜிஎஸ்டி வரியை நிதி அமைச்சகம் கேட்டு நச்சரிக்க தொடங்கியுள்ளது. 2017 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை நிலுவையில் உள்ள வரியைக் கட்டியே ஆகவேண்டுமாம். ஏற்கெனவே பணவீக்க நிலையில், ஆராய்ச்சிக்கு கிடைக்கும் நிதி உதவிகள் பெரியளவில் உயரவில்லை. அந்த நிலையிலும் கிடைக்கும் பணத்தை வைத்து ஆராய்ச்சிகளை மாணவர்கள் செய்து வந்தனர். மதவாத அரசு, நிதிநிலை அறிக்கையை அறிவிக்கும் போதெல்லாம் கல்விக்கான நிதியை குறைத்துக்கொண்டே வந்தனர். பொது நுழைவுத்தேர்வு என்று வைத்து, பயிற்சி மைய நிறுவனங்களுடன் சேர்ந்து மாணவர்களை கொள்ளையடித்து சம்பாதித்து வருகின்றனர். இத்தனைக்கும் பயிற்சி மையங்களின் வணிகம் ஆண்டுக்கு ஐம்பத்தெட்டாயிரம் கோடி என்ற எண்ணிக்கையைத் தொட்டு...