இடுகைகள்

இயக்கம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மனிதர்களின் உடலில் எத்தனை விதமான மூட்டுகள் உள்ளன தெரியுமா?

படம்
   மூட்டுகள் பற்றி அறிவோம்... மனிதர்களின் உடலில் 206 எலும்புகள் உள்ளன. இவை, உடலிலிருந்து நழுவாமல் இயங்க மூட்டுகள் உதவுகின்றன. இவற்றில் அசையும் மூட்டு, அசையா மூட்டு என இருவகை உண்டு. அசையும் மூட்டுகளுக்கு தோள்மூட்டு, இடுப்பு மூட்டு எடுத்துக்காட்டாகும். அசையா மூட்டுக்கு மண்டையோட்டு எலும்புகள் சான்று.    முழங்கால், முழங்கை ஆகியவை  கீல் மூட்டு இணைப்பைக் கொண்டவை. இவை கதவைப் போல திறந்து மூடுபவை. எலும்புகளை உறுதியான வளையும் தன்மை கொண்ட குருத்தெலும்பு (Cartilage) பாதுகாக்கிறது. முதுகுத்தண்டிலுள்ள எலும்புகளை குருத்தெலும்பு இணைக்கிறது. இதன் வளையும் தன்மை, அதிர்ச்சியை தாங்கும் ஆற்றலைத் தருகிறது. முதுகுத்தண்டில் ஏற்படும் அதிர்ச்சியை அதன் முள்ளெலும்புகளை இணைத்துள்ள குருத்தெலும்பு தாங்குகிறது.   முளை மூட்டு (Pivot Joint) மனிதர்கள் திரும்புவதற்கு உதவும் தாடைக்கு கீழுள்ள மூட்டு. ஆனால், இவை பக்கவாட்டில், முன், பின்பக்க இயக்கம் கொண்டவை அல்ல.  கீல் மூட்டு (Hinge joint) மணிக்கட்டு, முழங்கால் மூட்டுகள் முன்னே, பின்னே நகரும். ஆனால் பக்கவாட்டில் நகராது.  தகட்டு மூட்டு (Gliding joint) தட்டை எலும்புகளுக்கு இடைய

உறவுகளையும் உணர்ச்சிகளையும் நிலப்பரப்பு வழியாக இணைக்கும் சிறுகதைகள்! - உறவுப்பாலம் - இலங்கை சிறுகதைகள்(சிங்களம், ஆங்கிலம்)

படம்
                    உறவுப்பாலம் இலங்கை சிறுகதைகள் மொழிபெயர்ப்பு கண்ணையன் தட்சிணாமூர்த்தி நேஷனல் புக் டிரஸ்ட் விலை 150 பக்கம் 254 நூலில் மூன்று பகுதிகள் உள்ளன சிங்களச் சிறுகதைகள் , தமிழ் சிறுகதைகள் , ஆங்கிலச் சிறுகதைகள் . இதில் உருப்படியாக இருக்கும் கதைகள் அனைத்தும் சிங்களம் , ஆங்கிலத்தில்தான் உள்ளன என்பதை கவனிப்பது அவசியம் . மொத்த கதைகள் இருபத்தைந்து அதில் , 18 கதைகளை நம்பிக்கையோடு படிக்கலாம் . மோசமில்லை . சிங்களச் சிறுகதைகளில் மறுபடியும் , இன்று என் மகன் வீடு திரும்புகிறான் , அக்கா ஆகிய கதைகள் சிறப்பாக உள்ளன . முதல்கதையான மறுபடியும் எழுத்தாளர் குணதாச அமரசேகர எழுதியது . பணியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்ட ஆசிரியை ஒருவர் தனது பள்ளியை சென்று மீண்டும் பார்ப்பதுதான் கதை . இதற்குள் , அங்கு நடைபெறும் பிரச்னைகள் , அதனை இளைஞர்கள் எப்படி பார்க்கிறார்கள் , உணர்ச்சிப்பூர்வமாக பள்ளி என்பதை பார்க்கும் ஆசிரியையின் கோணம் என பல்வேறு உணர்ச்சிகளின் கதம்பமாக கதை ரசிக்க வைக்கிறது . இன்று என் மகன் வீடு வருகிறான் - கருணா பெரைரா எழுதியது . இக்கதையை அங்கு நட

மூளையை அப்கிரேட் செய்ய முடியுமா?

படம்
pixabay மூளையின் திறன்களைப் பற்றி நாம் நிறைய பெருமை கொள்கிறோம். ஆனால் சிறு சிப்களில் அதிக தகவல்களை அடக்கி வைக்கத் தொடங்கிவிட்டோம். மேலும் கணினி அளவுக்கு கணக்குகளைப் போட்டு நம்மால் செயல்பட முடியவில்லை. அதுவே மனித மூளையின் முதல் தோல்வி. இனிமேலும் பல்வேறு டெக் நிறுவனங்களின் ஆராய்ச்சி மனித மூளையை பல்வேறு துறை சார்ந்து வெல்வதாகவே இருக்கும். மூளையிலுள்ள தகவல்களை கணினியில் இணைப்பது பற்றிய ஆராய்ச்சிகள் உலகமெங்கும் நடந்து வருகின்றன. அவற்றில் புதுவரவு எலன் மஸ்கின், நியூராலிங்க். 1973 ஆம் ஆண்டு உலகில் முதன்முதலாக மனிதர்களின் மூளை -கணினி  இடைமுகம் உருவாக்கப்பட்டது. கலிஃபோர்னியா பல்கலையைச் சேர்ந்த ஜாக்யூஸ் விடல் என்பவர் இதனை உருவாக்கினார். மூளையின் மின் துடிப்புகளை எலக்ட்ரோபாலோகிராம் கருவி மூலம் அறிந்து கணினியில் பதிவு செய்தார். அதனை இயங்க வைத்தார். 1988 ஆம் ஆண்டு யூகோஸ்லேவியா ஆராய்ச்சியாளர்கள், இசிஜி சிக்னல்களை மூளையிடமிருந்து பெற்று, கணினியின் இணைப்பிலுள்ள ரோபோ ஒன்றை இயங்க வைத்தனர். கண்களை மூடவும் திறக்கவும் வைத்தனர். அவ்வளவேதான். 1991 ஆம் ஆண்டு நூறு எலக்ட்ரோடுகளைக் கொண்ட

மூளையில் மின்னல் வெட்டுதா?

படம்
Pexels.com பொதுவாக மூளை தொடர்பான ஆராய்ச்சிகளும் அதன் உண்மைத்தன்மையும் மிகச்சிக்கலான தன்மை கொண்டவை. விளக்கப்புகுந்தால் அதை கூறுபவருக்கு மட்டுமல்ல; புரிந்துகொள்ள நினைப்பவருக்கும் பூமி வலமிருந்து இடமாக சுற்றி பொறி கலங்கும். நாம் தெரிந்துகொள்ள வேண்டியது, நியூரான்கள் எப்படி தொடர்பு கொள்கின்றன. மின் துடிப்புகளாக செய்திகள் அனுப்பப்படுகின்றன. இதுதொடர்பான செய்திகளை அறிய முற்படுவதற்கு முக்கியக் காரணம், பார்கின்சன் மற்றும் அல்சீமர் தொடர்பான நோய்களுக்கு இவை உதவுமே என்பதுதான். மனித மூளையின் எடை 1.4 கி.கி மூளையிலுள்ள நியூரான்களின் எண்ணிக்கை - 100 பில்லியன் உடலின் இருபது சதவீத ஆற்றல் மூளையின் பயன்பாட்டிற்கு செல்கிறது. இதுவே மின்தூண்டுதலுக்கு ஆதாரம். ஒரு நியூரானிலிருந்து 70 மில்லிவோல்ட் மின்சாரம் உருவாகிறது. இசிடி சிகிச்சையில் 450 வோல்ட் மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. கடல் உயிரினமான ஈல், இரண்டு மில்லி செகண்டுகளில் 860 வோல்ட் மின்சாரத்தை உருவாக்குகிறது. நன்றி: க்வார்ட்ஸ்