இடுகைகள்

தேர்தல் 2020 லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஜோபைடன் வெற்றி பெற்றதற்கான காரணங்கள் என்ன?

படம்
              அமெரிக்க தேர்தலை முழு உலகமே உன்னிப்பாக கவனித்து வந்தது. காரணம், வல்லரசு நாடு என்பதும் ராணுவ பலம் பொருந்தியதும் என்பதுதான். அதையும் தாண்டி இனவெறியை அதிகரித்து அதிபர் டிரம்ப் செய்த செயல்களை அமெரிக்கர்கள் மட்டுமல்ல அந்நாட்டை எதிர்க்கும் நாடுகள் கூட ரசிக்கவில்லை. டிரம்ப் தனது ஆட்சிகாலத்தில் செய்த உபகாரம், பெரு நிறுவனங்களுக்கான வரிச்சலுகைதான். பொருளாதாரம் பெரியளவு சிக்கலை சந்திக்கவில்லை. ஆனால் மற்ற அனைத்து விஷயங்களிலும் அமெரிக்கா தனது இடத்தை இழந்தது. குறிப்பாக ஆப்கானிஸ்தானுக்கு ராணுவத்தை அனுப்பிய விவகாரம், பிற நாடுகளுடனான உறவு, பாரிஸ் சூழல் ஒப்பந்தத்திலிருந்து விலகியது, பொருளாதார போர் ஏற்படும்படியான பல்வேறு தடைகளை பிற நாடுகளுக்கு விதித்தது. மேலும் இந்தியர்கள், சீனர்கள் உள்ளிட்ட பிற நாட்டினரால் பெற்ற பயன்களை மறந்து அவர்களுக்கு விசா கெடுபிடிகளை இறுக்கியது என ஏகத்துக்கும் அமெரிக்கா கண்டனங்களை சந்தித்து வந்தது. மேலும் இனவெறியாக நடந்துகொண்டதால் உள்நாட்டில் ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் போராட்டங்களையும் காவல்துறை சந்திக்கவேண்டியிருந்தது. இப்போது டிரம்ப் தான் செய்த அனைத்து விஷயங்களுக்கு

பீகார் அரசியல், சாதியிலிருந்து விலகி மேம்படவேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம்! - முகேஷ் சாஹ்னி

படம்
          நேர்காணல் முகேஷ் சாஹ்னி விகாஷீல் இன்சான் கட்சி உங்கள் சாதி சார்ந்த சமூகம் பெரிதாக இல்லாத நிலையில் நீங்கள் அதிக சீட்டுகளை கேட்பது எப்படி சரியாக இருக்கமுடியும்? பொதுவான நம்பிக்கையாக குறிப்பிட்ட சாதி சார்ந்த ஆதரவு இருந்தால்தான் ஒருவர் பதவியில் இருக்க முடியும் என நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மையல்ல. 1990களுக்குப் பிறகுதான் இந்த எண்ணம் அதிகரித்துள்ளது. லாலுபிரசாத் யாதவ், ராம்விலாஸ் பாஸ்வான், நிதிஷ்குமார் ஆகியோர் இப்படி வென்று வந்தவர்கள்தான்.  என்னைப் பொறுத்தவரை அரசியல் என்பது விபத்துதான். நிதிஷ்குமார் ஆட்சியை நீங்கள் எப்படி மதிப்பிடுகிறீர்கள்? இன்னும் இந்த மாநிலத்திற்கு செய்யவேண்டிய வேலைகள் அதிகம் உள்ளன. பிற மாநிலங்களை ஒப்பீடு செய்தால் பீகார் இன்னும் கீழேதான் உள்ளது. தேஜஸ்வி யாதவை விட நிதிஷ்குமார் தெளிவான திட்டங்களை உடையவர். முதல்வர் பதவிக்கு சரியான தேர்வாகவும் இருப்பார். பீகாருக்கான உங்கள் பார்வை என்ன? 2015ஆம் ஆண்டு நான நிஷாத் என்ற எங்கள் இனம் சார்ந்து குரலை எழுப்பினேன். நாங்கள் அதிகாரத்திற்கு வந்தால், எங்கள் இனம் சார்ந்து பல்வேறு கோரிக்கைகளை தீர்க்க முயல்வேன். நீண்டகால நோக்கில்

இலங்கையின் வளர்ச்சிக்காக மகிந்தா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்!

படம்
இலங்கையில் அதிபர் தேர்தலில் மகிந்தா ராஜபக்சே தேர்வாகியுள்ளார். விடுதலைப்புலிகளுக்கு எதிராக போராடி வென்று சிங்கள இனவாத த்திற்கு உறுதுணையாக நின்றவர் இவர். இவரின் வெற்றி பற்றி இலங்கையில் தேசிய பாதுகாப்பு ஆய்வுகள் நிறுவனத்தின் இயக்குநர்  அசங்கா அபேயாகூனசேகராவிடம் கேட்டோம். இலங்கையில் மகிந்தா அதிபராகியுள்ளார். இந்நிலையில் டெல்லி - கொழும்பு உறவு எப்படி இருக்கும் என நினைக்கிறீர்கள்? மகிந்தா, டெல்லியுடன் சிறப்பான உறவைப் பேணுவதாக முன்னமே கூறிவிட்டார். அதிபரான நிலையில் இதில் சில மாறுபாடுகள் நடக்கலாம். மகிந்தா முன்னமே இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகளுடன் பணிபுரிந்திருக்கிறார். ஆனால் இது தென்னிந்தியாவுக்குப் பொருந்தாது. மொத்தமாக இந்தியா - இலங்கை உறவுகள் சிறப்பாகவும் உறுதியாகவும் இருக்கும் என கூறலாம். மகிந்தா வெற்றி பெற்றதை இலங்கையில் எப்படி பார்க்கிறார்கள்? மக்கள் அவரை வரவேற்கிறார்கள். காரணம் நாட்டின் பொருளாதார நிலைமை படுமோசமாக இருக்கிறது.அதனை சரிசெய்ய மகிந்தாவினால் முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள். அவர் தான் செய்யப்போகும் செயல்களைப் பற்றி முன்னமே கூறிவிட்டார். இப்போது அவர் எப