இடுகைகள்

காஷ்மீர் |ஃபைல்ஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இஸ்ரேலிய அரச பயங்கரவாதம், தேசியவாதத்திற்கு எதிராக நிற்கும் இயக்குநர் - நாடவ் லாபிட்

படம்
  கலக இயக்குநர்   இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர் நாடவ் லாபிட். இப்படி அறிமுகப்படுத்துவதை விட விவேக் அக்னிகோத்ரி என வலதுசாரி இயக்குநர் எடுத்த காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தை குப்பை, வக்கிரம் என சொன்னவர் என்றால் எளிதாக புரியும். உலகத் திரைப்பட திருவிழாவில் தங்க மயிலுக்கான பரிசுப்போட்டியில் காஷ்மீர் ஃபைல்ஸ் எப்படி இடம்பெற்றது. வக்கிரமான குறிப்பிட நோக்கத்தை அடிப்படையாக கொண்டபடம் என வெளிப்படையாக விமர்சித்தார் இயக்குநர் நாடவ் லாபிட்.   உண்மையில் யூதர்கள் பற்றி இப்படியொரு படத்தை யாரேனும் எடுத்தால் கூட எனக்கும் பீதியாகிவிடும். உண்மையில் இது கௌரவமான செயல் அல்ல. முக்கியமான பிரச்னைகளை பேச வேண்டுமெனில் அதற்கான தன்மையில் இயல்பில்தான் பேசவேண்டும்.   47 வயதான சினிமா இயக்குநர் பாரிஸ் நகரில் வாழ்கிறார். ஒன்றை செய்வதை விட அதைப்பற்றி பேசுவது எளிது. அப்படித்தான் நிறையப் பேர் சொல்லுவார்கள். இஸ்ரேலிய இயக்குநரான நாடவ் எடுத்த சினானிம்ஸ் என்ற படம் 2019ஆம் ஆண்டு தங்க கரடி விருது வென்ற படமாகும். 2021இல் எடுத்த அஹெட்ஸ் நீ என்ற படம், கேன்ஸ் திரைப்பட விருதில் ஜூரிவிருதை வென்றது. இந்த படம் இஸ்ரேல் நாட்ட