இடுகைகள்

முத்தாரம் நேர்காணல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

எழுத்தாளராக பாக்.கில் வாழ்வது கடினம்!

படம்
நேர்காணல்! “பாகிஸ்தானில் எழுத்தாளராக உயிர்வாழ்வது கடினம்!” முகமது ஹனிஃப், பாகிஸ்தானிய எழுத்தாளர் தமிழில்: ச.அன்பரசு பாகிஸ்தான் அரசியலைப் பற்றி வெளியே இருந்துதான் எழுதமுடியும் என தி கார்டியன் நாளிதழில் எழுதியுள்ளீர்கள். அப்படியென்ன பிரச்னையை சந்தித்தீர்கள்? பாகிஸ்தானில் பத்திரிகையாளர்கள் பலருக்கும் மூச்சுவிடமுடியாத சூழல்தான் உள்ளது. Dawn நாளிதழில் நான் சென்றாண்டு எழுதிய கட்டுரைக்காக அதன் துணை ஆசிரியர் ராஜதுரோக குற்றச்சாட்டுக்கு ஆளானார். என்னால் பிறரின் வாழ்க்கை அபாயத்தில் சிக்குவதை நான் விரும்பவில்லை. பாகிஸ்தானிலிருந்து வெளிநாட்டு பத்திரிகைகளில் எழுதினாலும் தேசதுரோகி என சித்தரிக்கப்படும் அபாயம் அங்கு நிலவுகிறது. எ கேஸ் ஆஃப் எக்ஸ்ப்ளோடிங் மேங்கோஸ் நூலில் இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு வந்த வழி பற்றி விவரித்திருந்தீர்கள். புதிய நூலான ரெட் பேர்ட்ஸ் எழுதுவதற்கு எளிதாக இருந்ததா? நாவல் எழுதுவதிலுள்ள ஆபத்து, உங்களுக்கு சலிப்பு ஏற்படாமல் எழுதுவதோடு வாசகருக்கும் அந்த அனுபவம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதே. தொடங்கிய நாவலை வெற்றிகரமாக முடிக்கவேண்டும

நேர்காணல்: காற்று மாசு புற்றுநோய் ஏற்படுத்துமா?

படம்
முத்தாரம் நேர்காணல் காற்று மாசுபாடு நிச்சயமாக நுரையீரல் புற்றுநோயை ஏற்படுத்தும் ! நேர்காணல் : டாக்டர் ஜே . சி . சூரி , நுரையீரல் சிகிச்சை வல்லுநர் . தமிழில் : ச . அன்பரசு . நியூ டெல்லியின் சப்தர்ஜங் மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர் சூரி , காற்று மாசுபாட்டால் இதயம் மற்றும் நுரையீரலில் கடுமையான பாதிப்புகள் ஏற்படும் என எச்சரிக்கிறார் . காற்று மாசுபாடு நீண்டகால நோக்கில் என்ன பிரச்னைகளை ஏற்படுத்தும் ? நுரையீரல் புற்றுநோய் ஏற்படவும் வாய்ப்புள்ளதா ? நிச்சயம் ஏற்படுத்தும் . காற்று மாசுபாட்டால் காற்றில் உயரும் நைட்ரஜன் , கார்பன் ஆகிய வேதிப்பொருட்கள் மெல்ல மனிதர்களின் நுரையீரலைத் தாக்கி புற்றுநோயை உருவாக்கும் . இது இறுதி அபாயம் எனக்கொண்டால் , இதயம் தொடர்பான நோய்கள் உப விளைவாக ஏற்படும் . காற்று மாசுபாட்டால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது . இதன் விளைவாக ஏற்படும் ஆஸ்துமா உள்ளிட்ட பிரச்னைகள் ஆபத்தானதா ? ஆரோக்கியமாக உள்ளவர்களையும் அதிகம் தாக்குமா ? நுரையீரல் புற்றுநோய் என்பது எக்ஸ்ட்ரீம் நிலை . ஆனால் அதற்கு முன்பே நாள்பட்ட ஆஸ்துமா , நுரையீரல் அடைப்பு நோய் (CO

"இந்துத்துவாவின் அடுத்த குறி நான்தான்" நேர்காணல்: காஞ்சா அய்லய்யா!

படம்
" இந்துத்துவாவின் அடுத்த குறி நான்தான் " நேர்காணல் : எழுத்தாளர் காஞ்சா அய்லய்யா , எழுத்தாளர் . தமிழில் : ச . அன்பரசு கன்னடத்தின் முக்கிய எழுத்தாளரான காஞ்சா அய்லய்யா , ஹைதராபாத்திலுள்ள மௌலானா ஆசாத் உருது பல்கலைக்கழகத்தின் சமூககொள்கை ஆய்வு மையத்தின் இயக்குநர் . 2009 இல் இவர் எழுதிய 'Post Hindu India' என்ற நூலில் பிராமணர்கள் , பனியாக்களைப் பற்றி ' சமூக கடத்தல்வாதிகள் ' என்று கூறிய கருத்துகள் கொலைமிரட்டல்கள் வரை புகழ் சம்பாதித்து கொடுத்திருக்கின்றன . அவரின் படைப்பு , கொலைமிரட்டல்கள் , நூலின் சர்ச்சைக்குரிய பகுதி குறித்து அவரிடம் பேசினோம் . " போஸ்ட் இந்து இந்தியா " பற்றி ஏகப்பட்ட சர்சைகள் . இதுகுறித்து கூறுங்களேன் .   ஆர்ய வைசியர்களின் சங்கம் உருவாக்கிய புக்லெட்தான் சர்ச்சைக்கு காரணம் . ஆங்கிலத்தில் வெளியான நூலின் தெலுங்கு மொழிபெயர்ப்பின் (2011) குறிப்பிட்ட பகுதியை நூலாக்கி பிரச்னை செய்கிறார்கள் . இந்தி , மராத்தியில் வெளியாகியுள்ள இந்நூலின் மையம் , தனியார்துறையில் ரிசர்வேஷன் தோல்வி அடைந்ததற்கான காரணங்களை பேசுகிறத

முத்தாரம் நேர்காணல்: மனிஷ் சிசோடியா

படம்
முத்தாரம் நேர்காணல் " நாட்டை வணிக சக்திகளிடம் ஒப்படைத்ததுதான் நமது தவறு " நேர்காணல் : மனிஷ் சிசோடியா , துணைமுதல்வர் டெல்லி . தமிழில் : ச . அன்பரசு அண்மையில் ஹரியானாவின் குர்கானில் தனியார் பள்ளியில் படித்துவந்த ஏழுவயது சிறுவன் பள்ளியில் மர்ம முறையில் இறந்து கிடந்தது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது . அரசுப்பள்ளிகளின் மேம்பாடு , பள்ளிகளுக்கான பட்ஜெட் , ஆசிரியர்கள் குறித்து டெல்லி துணை முதல்வரும் , கல்வி அமைச்சருமான மனிஷ் சிசோடியாவிடம் பேசினோம் . அரசு பள்ளிகளைவிட வசதிகள் குறைவு என்றாலும் புதிதாக தொடங்கும் தனியார் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைச் சேர்த்து படிக்க வைக்கவே பெற்றோர்கள் முண்டியடிக்கின்றனர் . இந்த ட்ரெண்டை எப்படி பார்க்கிறீர்கள் ? எழுபதாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தனியாரின பட்ஜெட் பள்ளிகளில் படித்து வருகின்றனர் . என்னுடைய அட்வைஸ் , பெற்றோர்கள் அங்கீகாரமற்ற தனியார் பள்ளிகளை தவிர்ப்பதே நல்லது . இதற்கு தீர்வாக அரசு பள்ளிகளை முன்வைக்கலாம் . 20 புதிய அரசு பள்ளிகளைத் தொடங்கி , 8 ஆயிரம் கூடுதல் அறைகளை உருவாக்கும் தேவையுள்ளது . அடுத்த ஆண

முத்தாரம் நேர்காணல்: மெலிண்டா கேட்ஸ்

படம்
முத்தாரம் நேர்காணல் " உலகின் ரோல்மாடல் இந்தியா மட்டுமே !" நேர்காணல்: மெலிண்டா கேட்ஸ் , கேட்ஸ் பவுண்டேஷன் தமிழில் : ச . அன்பரசு உலகநாடுகளிடையே தடுப்பூசி , வறுமை ஒழிப்பு என கேட்ஸ் பவுண்டேஷனில் செயல்பாடுகள் வெகு பிரபலம் . கேட்ஸ் பவுண்டேஷனின் துணை நிறுவனரான மெலிண்டா கேட்ஸ் , தொழில்நுட்பங்கள் எப்படி உயிர்களை காக்க உதவுகிறது , இந்தியாவின் மருத்துவசிகிச்சைகளின் நிலை ஆகியவற்றைக் குறித்து நம்மிடம் பேசினார் . வறுமை ஒழிப்பு என்பது ஐ . நாவின் முக்கிய மேம்பாட்டு திட்டம் . இந்தியாவின் உத்தரப்பிரதேசம் , பீகார் ஆகிய இடங்களில் கேட்ஸ் பவுண்டேஷன் பல்வேறு செயல்பாடுகளை வறுமை ஒழிப்புக்கு ஆதரவாக மேற்கொண்டு வருகிறது . மத்திய , மாநில அரசுகளிடம் நீங்கள் சமர்ப்பித்துள்ள திட்டம் பற்றி கூறுங்கள் . மக்கள் எந்த சமூகத்தின் எந்தநிலையைச் சேர்ந்தவராக இருந்தாலும் ஆரோக்கியமான உடல்நிலை அவசியம் . கல்வி அறிவைப் பெற குறிப்பிட்ட தொகையை அவர்கள் முதலீடு செய்வது காலத்தின் அவசியம் . அடுத்து , வங்கியற்ற