நேர்காணல்: காற்று மாசு புற்றுநோய் ஏற்படுத்துமா?


Image result for delhi air pollution
முத்தாரம் நேர்காணல்
காற்று மாசுபாடு நிச்சயமாக நுரையீரல் புற்றுநோயை ஏற்படுத்தும்!
நேர்காணல்: டாக்டர் ஜே.சி.சூரி, நுரையீரல் சிகிச்சை வல்லுநர்.
தமிழில்:.அன்பரசு.

நியூ டெல்லியின் சப்தர்ஜங் மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர் சூரி, காற்று மாசுபாட்டால் இதயம் மற்றும் நுரையீரலில் கடுமையான பாதிப்புகள் ஏற்படும் என எச்சரிக்கிறார்.
காற்று மாசுபாடு நீண்டகால நோக்கில் என்ன பிரச்னைகளை ஏற்படுத்தும்? நுரையீரல் புற்றுநோய் ஏற்படவும் வாய்ப்புள்ளதா?
நிச்சயம் ஏற்படுத்தும். காற்று மாசுபாட்டால் காற்றில் உயரும் நைட்ரஜன், கார்பன் ஆகிய வேதிப்பொருட்கள் மெல்ல மனிதர்களின் நுரையீரலைத் தாக்கி புற்றுநோயை உருவாக்கும். இது இறுதி அபாயம் எனக்கொண்டால், இதயம் தொடர்பான நோய்கள் உப விளைவாக ஏற்படும். காற்று மாசுபாட்டால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
இதன் விளைவாக ஏற்படும் ஆஸ்துமா உள்ளிட்ட பிரச்னைகள் ஆபத்தானதா? ஆரோக்கியமாக உள்ளவர்களையும் அதிகம் தாக்குமா?
நுரையீரல் புற்றுநோய் என்பது எக்ஸ்ட்ரீம் நிலை. ஆனால் அதற்கு முன்பே நாள்பட்ட ஆஸ்துமா, நுரையீரல் அடைப்பு நோய்(COPD) உள்ளிட்டவை ஏற்படும். வயதானவர்களுக்கு ஹைப்பர் டென்ஷன், நீரிழிவு ஆகியவை ஏற்படுவதோடு கர்ப்பிணிகளுக்கும் சர்வ நிச்சய பாதிப்பு உண்டு. சிறுவர்களுக்கு நுரையீரல் வளர்ச்சி பெறும் நிலையில் காற்று மாசுபாடு அவ்வளர்ச்சியை தடுத்து மெல்ல அவர்களை சுவாச நோயாளிகளாக மாற்றுகிறது. ஏறத்தாழ இன்று இந்தியாவில் 10% சிறுவர்கள் நுரையீரல் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்
பனிக்காலங்களில் காற்று மாசுபாடு என்பது அதிகரிக்கிறதா? சூழல் என்பது காற்று மாசில் முக்கிய பங்கு வகிக்கிறதா?
நமது காற்று மண்டலத்தில் 20 கி.மீ. தொலைவுக்கு ஓசான் படலம் புற ஊதாக்கதிர்களிலிருந்து நம்மை பாதுகாக்கிறது. ஆனால் நிலப்பரப்பில் ஏற்படும் மாசுக்களை தடுக்க நமக்கு எந்த கவசமும் கிடையாது. carbon monoxide, sulfur dioxide, nitrogen dioxide  ஆகியவை காற்றில் எக்கச்சக்கமாக அதிகரிப்பதால் நாம் சுவாசிப்பதற்கு அவசியமான ஆக்சிஜனின் அளவு குறைகிறது. வாகனங்களின் கரிம எரிபொருட்களால் உருவாகும் கார்பன் மோனாக்ஸைடு நம் உடலின் ஹீமோகுளோபினில் கலக்கும்போது உடல் இயங்குவதற்கான ஆக்சிஜன் கிடைக்காமல் போகிறது இந்நிலையில் மாரடைப்பு,நெஞ்சுவலி ஆகியற்றினால் பாதிக்கப்படுவார்கள்.
காற்று விஷமாவதற்கு முக்கிய காரணம் என்ன?
பயிர்கள்,மரங்களை எரிப்பது, வாகனங்களின் பெருக்கம், நிலக்கரி சார்ந்த தொழில்கள் என அனைத்துமே இதற்கு காரணம். குறிப்பிட்ட காரணம் என ஒன்றை மட்டும் சொல்லி இதனை சுருக்கிவிட முடியாது. மாசுபாட்டை குறைப்பதற்கான தீர்வை நோக்கி நாம் நகரவேண்டிய அவசியமிருக்கிறது. டெல்லியை விட்டு இடம்பெயர்வது இதற்கு தீர்வல்ல. கடற்புர நகரங்களில் காற்று மாசுபாடு சிறிது குறைவாக இருக்க சான்ஸ் உண்டு. பனிக்காலங்களில் சுவாச நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
காற்று மாசுபாட்டிலிருந்து தப்பிக்க ஏர் ப்யூரிஃபையர்கள் உதவுமா?
வெளியில் 48 டிகிரி செல்சியஸ் என்றால் வீட்டில் ஏசியை கூட்டி வைத்துக்கொண்டு இருக்கிறீர்கள். ஏர் ப்யூரிஃபையரின் பணியும் அப்படித்தான். காற்று அனைவருக்கும் பொதுவானதுதான்.காற்றின் மாசுபாட்டு அளவை குறைத்து உங்களுக்கு வழங்கும் திறன் அவற்றுக்கு உண்டு என்பதை உணர்ந்து பயன்படுத்துங்கள்.
நன்றி:Lola Nayar,Outlook
தொகுப்பு: ஷியாம் பானர்ஜி, இந்தர்சிங்


பிரபலமான இடுகைகள்