ஜாலி பக்கங்கள்!




ஆண்டவன் பரிசு!

கிறிஸ்துமசிற்கு ஒரு மாதம் இருக்கும் நிலையில் பலரும் வாழ்த்துக்களையும், க்ரீட்டிங் கார்டுகளையும் பிரிய உள்ளங்களுக்கு அனுப்பத் தொடங்கிவிட்டார்கள். ஆஸ்திரேலியாவின் கிளாரே வெய்ன்ரைட்டுக்கும் சூப்பர் கிஃப்ட் வந்தது. எங்கிருந்து? வங்கியிலிருந்து.


ஆஸ்திரேலியா தேசிய வங்கியில் வந்த லெட்டரைப் படித்து கிளாரேவுக்கு ஹார்ட் அட்டாக் வராததுதான் குறை. உங்கள் அக்கவுண்டில் 25,102,107 டாலர்கள் உள்ளது என சொன்னால் மனம் கொக்கோகோலாவாய் பொங்காதா? லெட்டர் வந்தவுடன் நேர்மையாக செயின்ட்ஜார்ஜ் பேங்கை தொடர்புகொண்டாலும் அவர்கள் சரியான பதில் அளிக்கவில்லை. அக்கவுண்டை செக் செய்தால் பணம் லெட்டரியில் காட்டிய அமௌண்ட் அப்படியே டிட்டோ. 2,500 டாலர்களை அனுப்புவதற்கு பதில் குளறுபடியாக கைமாறிய பணத்தை ரிவர்ஸ் பண்ணி கருவூலத்திற்கு மீட்ட தேசியவங்கி, நடந்த தவறுக்கு வருந்துகிறோம் என்று சொல்லியுள்ளது. ஹானஸ்ட் லேடி!

2

 கேரளாவின் ஷேரிங் பிளான்!

பல மக்கள்நல திட்டங்களுக்கு இந்தியாவின் முன்னோடி தான்தான் என்பதை கேரளா மீண்டும் நிரூபித்திருக்கிறது தனது ஷேர் மீல் திட்டத்தின் மூலம். கோழிக்கோடு ஜெயில் வார்டன் அனில்குமாரின் ஐடியா இது. தான் மாற்றாலாகி போகும்போதும் பிளானைத் தொடங்கிவிட்டு  சென்றிருக்கிறார் அனில்.

பிளான் இதுதான். சிறைக்கைதிகளின் கேண்டீனில் 'Food for Freedom’ கவுண்டரில் 25 ரூபாய் கொடுத்தால் ஐந்து சப்பாத்தி வித் வெஜ்-நான்வெஜ் கிரேவி சாப்பிட டோக்கன் கிடைக்கும். அந்த டோக்கனை வாங்கி குறிப்பிட்ட இடத்தில் வைத்துவிட்டால், ஏழை, வறுமையுள்ளவர்களுக்கு வழங்க இருக்கும் இடத்தில் குத்தி வைத்துவிட்டால் தேவைப்படுபவர்கள் அதனை பயன்படுத்திக்கொள்வார்கள். "அக்.23 அமலான திட்டம் மாஸ் வெற்றி. பல்வேறு அமைப்புகள் பல்க் ஆர்டரில் டோக்கன்களை அள்ளிச்செல்கிறார்கள்.தொடங்கிய அன்று மட்டும் 25 ஆயிரம் ரூபாய்க்கு டோக்கன் சேல்ஸ் ஆனது" என்கிறார் இத்திட்டத்தின் சூபர்வைசரான ராஜேஷ்குமார். கடவுளின்தேசம் ஜொலிக்கிறது!
 3
சிகரெட் ஹாலிடே!

நுரையீரல் கெட்டுப்போன முகேஷ் லைவில் வந்து தியேட்டரில் பாடம் எடுத்தாலும்  சிகரெட்டை விடாதவர்கள், இனி கண்டிப்பாக சிகரெட் பிடிக்க இருமுறை யோசிப்பார்கள். எப்படி? ஜப்பான் கம்பெனியின் ஆச்சர்ய ரூல்ஸ் அப்படி.

ஜப்பானின் டோக்கியோவைச் சேர்ந்த ஆன்லைன் நிறுவனமான பியாலா, சிகரெட் பிடிக்காத ஊழியர்களுக்கு 6 நாட்கள் பெய்டு லீவ் தந்து அசத்தியுள்ளது. 29 ஆம் மாடியிலுள்ள நிறுவனத்தில் தரைதளத்தில் புகைப்பிடிப்பதற்கான தனி ரூம் உண்டு. அடிக்கடி அங்கு செல்வதால் வேலை கெடுகிறது என புகார் சொன்ன ஊழியரின் ஒப்பீனியனைக் கேட்ட நிர்வாகம் எடுத்த அதிரடி பிளான் இது. தற்போது புகைப்பிடிக்கும் 42 பேரில் 4 பேர் அதனை கைவிட்டுள்ளனர். மாற்றம் முன்னேற்றம்தானே!
ி. பல்வேறு அமைப்புகள் பல்க் ஆர்டரில் டோக்கன்களை அள்ளிச்செல்கிறார்கள்.தொடங்கிய அன்று மட்டும் 25 ஆயிரம் ரூபாய்க்கு டோக்கன் சேல்ஸ் ஆனது" என்கிறார் இத்திட்டத்தின் சூபர்வைசரான ராஜேஷ்குமார். கடவுளின்தேசம் ஜொலிக்கிறது!

 4
பாலில் பாய்ஸன்!

பாலில் பாய்ஸன் கலந்தது அரசியல்வாதிகளல்ல. கட்டிய வொஃய்தான். பாகிஸ்தானில் நடந்த கொலை அட்டெம்ப், இருவரின் சொந்தங்களை ஐசியூவில் அட்மிட்டாக வைத்துள்ளது.

பாகிஸ்தானைச் சேர்ந்த ஆஸியா, தன் ஆசை கணவன் அம்ஜத்துக்கு பிரியமாக பாலைக்கொடுக்க, அவர் எனக்கு வேண்டாம் என மறுத்துவிட்டார். அடுத்தநாள் ஆஸியாவின் மாமியார் அதேபாலில் லஸ்ஸி போட்டு கொடுத்தார். லஸ்ஸியை சப்புக்கொட்டி குடித்த 27 பேரில் 13 பேர் பரலோகம் சேர்ந்துவிட்டனர். மீதிப்பேர் உயிரும் ஊசலாடுகிறது. முதலில் பாலில் பல்லி என ரீசன் சொல்லிய ஆஸியா, போலீஸ் என்கொயரிக்குப் பின்னர் தன் லவ்வர் கொடுத்த விஷத்தை பாலில் கலக்கினேன் என உண்மையைச் சொன்னதும் ஊரே ஷாக்காகி சமாளித்துக்கொண்டது. கட்டாய மேரேஜ் விவகாரத்தில் பாய்ஸன் கலப்பது அங்கு மிக சகஜமாம்.
TA>தொடங்கிய அன்று மட்டும் 25 ஆயிரம் ரூபாய்க்கு டோக்கன் சேல்ஸ் ஆனது" என்கிறார் இத்திட்டத்தின் சூபர்வைசரான ராஜேஷ்குமார். கடவுளின்தேசம் ஜொலிக்கிறது!

 5
இந்தியாவின் நக மனிதன்!

மனிதர்கள் தங்கள் வயிற்றையும் சிறிய சைஸ் பேங்க் போல பயன்படுத்த தொடங்கிவிட்டனர். பல்ப்,கத்தி என காரேஜில் இருக்கும் அத்தனை பொருட்களையும் வயிற்றில் டாக்டர்கள் கண்டுபிடித்து வருகின்றனர். அந்த லிஸ்ட்டில்  புதிதாக நகமும் சேர்ந்திருக்கிறது.

கொல்கத்தாவின் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பாரக்னாஸ் மாவட்டத்தைச்சேர்ந்த நோயாளி அட்மிட் ஆனார். ஸிஸோபெரெனியா பாதிப்பு கொண்டவரின் உடலை சோதித்தபோது, வயிற்றில் ஒரு கிலோவுக்கு ஏதோ ஒரு பொருள் இருந்திருக்கிறது. ஆபரேஷனில் வயிற்றிலிருந்து 2.5 இன்ச் நீளம் கொண்ட 639 நகங்களை அகற்றியிருக்கிறார்கள். "மனநலபாதிப்பு கொண்ட நோயாளி மண்ணையும், நகங்களையும் சேர்த்து விழுங்கியதால் வயிற்றுவலி ஏற்பட்டிருக்கிறது. தற்போது ஆபரேஷனில் அதை நீக்கிவிட்டோம்" என ஸ்டேட்மெண்ட் கொடுத்திருக்கிறார் டாக்டர்.சித்தார்த்தா பிஸ்வாஸ்.


 6
ஸ்பைஹூக் கேமரா உஷார்!

பிரைவசியை பங்கம் பண்ணி சம்பாதிக்கும் கூட்டம் ஆன்லைனில் மட்டுமல்ல, பிராக்டிக்கல் லைஃபிலும் உண்டு. அதற்கு சின்ன சாம்பிள்தான். ட்ரெஸ்ஸிம் ரூம், பாத்ரூமில் கேமரா செட் செய்யும் குரூப்கள். இதில் புதிய அறிமுகம்தான் ஸ்பைஹூக் கேமரா.

அமெரிக்காவின் ப்ளோரிடா மாநில காவல்துறை, "யாரும் பொது கழிப்பறையில் கூட இந்த ஸ்பை கேமராவை தினசரி நாம் உபயோகிக்கும் பொருட்களில் பொறுத்திவிடமுடியும் என்பதால் ஜாக்கிரதை மக்களே" என மெசேஜ் சொல்லுமளவு கடந்த ஆண்டில் அங்கு ஸ்பை கேமராக்களைப் பற்றி புகார்கள் குவிந்தன. சிறிய மோஷன் சென்சார் ஹெச்டி கேமரா,மைக்,மெமரிகார்டு சகிதம் துணியை தொங்கவிடும் ஹேங்கர் வடிவில் இவை சிறிய துளைவழியாக செட் செய்யமுடியும். விலை 1300-5500.  

 7
ஏபிசி நீ வாசி

வாத்தியாருக்கும் ஸ்டூடண்டுக்குமான மூங்கில் குச்சி லடாய்கள் எப்போதும் உண்டு. ஆனால் இந்த லிஸ்டில் விலங்குகளையும் சேர்த்து பாடம் நடத்தினால் எப்படி?

இணையத்தில் வைரலாகி ப்ளூகிராஸ் அமைப்பினரின் ரத்தத்தை கொதிக்க வைத்துக்கொண்டிருப்பது அப்படி ஒரு வீடியோதான். வீடியோவில் நாய்க்கு ஒருவர் ஏபிசி சொல்லித்தருகிறார். நாய் எனக்கு எதற்கு ப்ரோ ஏபிசி பாடமெல்லாம்? என தேமேயென இளைப்பாறுகிறது. விடுவாரா இளைஞர், நாய் முகத்தை கால்களால் மறைத்தாலும் விடாமல் முகத்தில் அறைந்து ஏ.., பி..பீ என ஏபிசி சொல்லித்தருகிறார். முப்பது செகண்ட் வீடியோவில், மூர்க்கமான வன்முறையை விளையாட்டாக செய்தாலும் பலரிடமும் கண்டனம் குவித்து ஹிட்டாகி விட்டது.  
-height: normal;mso-pagination:none;mso-layout-grid-align:none;text-autospace:none'> 



 8

 விவாதத்தால் விரல் போச்சு!

சண்டை என்று வந்தால் சட்டை கிழியாமல், உதடு பொத்தலாகாமல் இருக்குமா என்ன? ஹைப்பர் டென்ஷனில் சிலர் செய்யும் சில விஷயங்கள் படிக்க காமெடி என்றாலும், நிஜத்தில் டரியலாக தெறி.பீகார் விரல் மேட்டரும் அப்படித்தான்.

பீகாரில் சப்ரா மாவட்டத்தில் போரிவ்லி பகுதியில் காய்கறிக்கடை நடத்திவரும், உதய்குமார் சிங், இரவில் விரார்-தகானு மார்க்க ட்ரெயினில்தான் கேல்வா பகுதியிலுள்ள தன் வீட்டிற்கு செல்வது வழக்கம். அன்று ட்ரெயினில் தன் கடையில் வேலை பார்க்கும் பிரதீப் சஹானியை பார்த்து, ஏன் சில நாட்களாக வேலைக்கு வரவில்லை என்று கேட்டிருக்கிறார். அப்போது பேச்சில் குறுக்கே புகுந்த பிரதீப் நண்பர், கேது சௌராசியா  உதய்குமாரின் கட்டைவிரலை கடித்து துப்பி எஸ்கேப்பானார். மயங்கிய உதய்குமாரை, ஹாஸ்பிடலில் பிற பயணிகள் சேர்த்திருக்கின்றனர். சௌராசியாவை போலீஸ், தற்போது வலைவீசி தேடிவருகிறது

தொகுப்பு: ரோனி ப்ரௌன்
நன்றி: குங்குமம்