அறிவியல் செய்திகள்!
ஸ்மார்ட் பாதுகாப்புக்கு
நெஸ்ட் கேமரா!
முகத்தை ஸ்கேன்
செய்து பாதுகாப்பதோடு,
பத்து நாட்கள் வீடியோ சேமிப்பும் கொண்டு அசத்துகிறது நெஸ்ட் Cam
IQ. கூகுளின் சகோதர நிறுவனமான நெஸ்ட்டில் முகமறியும் டெக்னாலஜியும் இதில்
இணைந்துள்ளது. நெஸ்ட் கேமராவை கதவில் பொறுத்தி பாதுகாப்பை வஜ்ரமாக்கலாம்.
அறிமுகமற்றவர்களை கேமராவில் பார்த்து உடனே அலர்ட் மெசேஜ்களை அனுப்பும்
திறன் புதுசு. இதில் கூகுளோடு கனெக்ட் செய்வதும், ஸ்மார்ட்போனை இயக்குவதும் ஸ்பெஷல் திறன்கள்.
மைக்,ஸ்பீக்கர்
இணையத்தில் இணைக்கும்போது நெஸ்ட் கேமராவின் திறன் கூடும். உட்புறம்,வெளிப்புறம் என இரண்டுக்கும் தனி கேமராக்கள் உண்டு. விலை
ரூ.19,518 பிளஸ் மாத வாடகை ரூ.650 செலுத்தி
பயன்படுத்தலாம். 2
2017: விண்வெளி
கண்டுபிடிப்புகள்!
Boeing's Starliner Space Suit
டேவிட்கிளார்க் கம்பெனி இந்த சூட்டை தயாரித்துள்ளது, முந்தைய
உடையைவிட 20 பவுண்டுகள் எடை குறைவு,லைட்டான
கச்சித வடிவம் கொண்டது. சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தில்
நடக்க பயன்படும் சூட் இது. உடையில் காலணிகளின் டிசைனுக்கு ரீபோக்
பொறுப்பு. ஜனவரி
2018 இல் நியூ மெக்சிகோவில் சோதனை நடைபெறவிருக்கிறது.
NOAA'S GOES-16
புயல்,சுனாமி
என அமெரிக்காவை புரட்டி எடுப்பதால், 30 நிமிடங்களுக்கு ஒருமுறை
பூமியை ஸ்கேன் செய்யும் அதிநவீன செயற்கைக்கோள் இது. 8-14 கி.மீ வரை ஒரு நொடிக்கு 500 பிரேம்கள் படமெடுக்கும் திறன்
கொண்ட டெலஸ்கோப் சிசிடி கேமரா கொண்டது. முந்தைய சாட்டிலைட்டுகளை
விட 5 மடங்கு அதிவேகம் கொண்டது GOES-16.
DARPA's Fast
Lightweight Autonomy program
ட்ரோன்கள் மனிதர்களின்
உதவியின்றி,தானாகவே பறந்து சென்றால் எப்படியிருக்கும் என்பதுதான் அமெரிக்காவின்
DARPA பிளான். சென்சார்,கேமராக்களை
பொறுத்தி தானே டாஸ்க்கை முடிக்குமாறு தயார்படுத்தி இருப்பது புதிய சாதனை.
3
கொடூர கொள்ளையர்கள் -விக்டர் காமெஸி
François
l’Olonnais(1630 – 1669)
ப்ரெஞ்ச் நாட்டைச் சேர்ந்த பிராங்கோய்சின் முழுப்பெயர்
Jean-David Nau. 1650 ஆம் ஆண்டில் கப்பல் பணியாளராக
கடலுக்கு சென்றவர், கடல் கொள்ளையராக மாறியபோது ஸ்பானிய
வீரர்களால் கடுமையாக தாக்கப்பட்டு உயிர்பிழைத்தவர், பின்னாளில்
கொடூர கொள்ளையராக மாறினார். கப்பல்களை சிறைபிடித்து அதில் உள்ளவர்களின்
உடல் உறுப்புகளை ஒவ்வொன்றாக நறுக்கி, தேவையான துப்பு கிடைக்காதபோது
அவரின் இதயத்தை வெட்டி பிறரின் முன் சாப்பிடுவது, உயிரோடு பயணிகளை
எரிப்பது பிராங்கோய்ஸின் ஹாபி. 1666 ஆம் ஆண்டில் 440 ல்
கொள்ளையர்களை திரட்டி, மராகைபோ(இன்றைய
வெனிசுலா) நகரில் கொள்ளையடித்தது இவரின் சாதனை. பின்னர் கடல் பயணத்தில் குனா பழங்குடியால் தாக்கப்பட்டு இறந்த பிராங்கோய்ஸ்
அவர்களின் டின்னராகிப்போனார்.
Cheng I Sao((1775–1844)
சீனாவின் குவாங்சூவைச் சேர்ந்த பாலியல் தொழிலாளி. 300
கப்பல்கள், 40 ஆயிரம் கொள்ளையர்களை
கட்டிமேய்த்த சாகசத் தலைவி. செங்கின் சகோதரர் ஸெங் யீ என்ற
கொள்ளையரிடம் மாட்டிக்கொள்ள, அவரை மணம் செய்து சகோதரரை
மீட்டவர், கணவருக்குப் பின் கொள்ளைக்கூட்டத்தில் பாஸ் ஆனார். ஆணையை ஃபாலோ செய்யாதவருக்கு ஆன் தி ஸ்பாட் மரணதண்டனை, காதுகளை சீவுவது, என மிரளவைத்தவர், பெண்களை கொள்ளையர்கள் கற்பழிப்பதையும் தடுத்தார்.
பின்னர் கணவரின் மகனை மணம் செய்தவர், The Marquis of
Ely என்ற கிழக்கிந்திய கம்பெனியின்
ரிச்சர்ட் கிளாஸ்பூல் என்ற ஆபீசரை கடத்தி, தென்சீனக்கடலை
ஆதிக்கத்தில் வைத்திருந்தார். பின்னாளில் சீன அரசின்
பொதுமன்னிப்பு பெற்று, புரொப்பஷனல் தொழிலை கைவிட்டார் செங்
சாவோ.
Black Bart (1682 –1722)
இங்கிலாந்தின் வேல்ஸ் பகுதியில் பிறந்த ஜான் ராபர்ட்ஸ்,
400 கப்பல்களுக்கு மேல் கொள்ளையிட்ட சக்சஸ்ஃபுல் கொள்ளையரின்
இயற்பெயர் Bartholomew Roberts. கேப்டன் ஒருமுறை பணம் தர மறுக்க, அவரின் 80 அடிமைகளை அங்கேயே உயிரோடு கொளுத்தினார் ராபர்ட்ஸ். கவர்னர் மார்டினிக்கின் கப்பலை சிறைபிடித்து,
அவரது குழுவினரின் முன்னே அவரை தூக்கிலிட்ட தில் மனிதர்.
1721 ஆம் ஆண்டுவரை அமெரிக்கா, மேற்கு
ஆப்பிரிக்கா பகுதிகளில் கடல் வணிகத்தை தன் ஆதிக்கத்தில் வைத்திருந்தார் பிளாக்
பார்ட்.
தொகுப்பு: கா.சி.வின்சென்ட்