வீக் எண்ட் மஜா! -ரோனி


Related image

மெகா ஆண்மை!

ரூம் பெருசா? ஃபேமிலியாக ஓடிப்பிடித்து விளையாடலாம். பேக் பெருசா?பொருட்களை பல்க்காக பர்சேஸ் பண்ணி அடைத்து சந்தோஷப்படலாம். ஆனால் அந்த மேட்டர் பெருசு என்பதற்கு என்ன ரியாக்‌ஷன் கொடுப்பது?

Image result for large penis




மெக்சிகோவைச் சேர்ந்த ராபர்ட்டோ காப்ரேராவுக்கு விநோத பிரச்னை. அவரின் ஆண்குறியின் பிரமாண்ட 19 இன்ச் சைஸ்தான். யூனிபார்ம் போடமுடியாதபடி குறி நீண்டால் மனிதர் என்னதான் செய்வார்? "இந்த பிரச்னையால் என்னால் வேகமாக நடக்க முடியவில்லை என்பதால், கம்பெனிகளில் வேலைவாய்ப்பும் கிடைப்பதில்லை" என்கிறார் காப்ரேரா. தனது லார்ஜ் சைஸ் உறுப்பால் அமெரிக்க நடிகரின் முந்தைய 9.5 இன்ச் சைஸ் சாதனையும் ஜஸ்ட் லைக் தட் கடந்து கின்னஸ் சாதனையில் இடம்பிடிக்க காத்திருக்கிறார் காப்ரேரா. சைஸை குறைத்துவிடலாம் என்றாலும்

நோ, இது யாருக்கும் கிடைக்காத ஆண்மையின் பெருமை என பேட்டி தட்டிவருகிறார் காப்ரேரா

2
பரோட்டாவுக்கு பரிசு!

டெல்லியிலிருந்து எழுபது கி.மீ தூரத்திலுள்ள டெல்லி-ரோதக் பைபாஸ் சாலையில் உள்ள  தபஸ்யா பரோட்டா ஜங்ஷன் அனைவரையும் ஈர்த்துள்ளது. ஏன்? வாழ்நாள் முழுக்க ப்ரீ பரோட்டாக்களோடு, ஒரு லட்சம் பணமும் பரிசு என அறிவித்தால் என்னாகும்?

யெஸ். இந்தியர்கள் சரக்கு லாரிகளில், ஷேர் ஆட்டோக்களில் என குவிந்துவிட்டார்கள். சிம்பிள் கண்டிஷன்தான். 2 கிலோ எடையுள்ள மூன்று பரோட்டாக்களை 50 நிமிடங்களில் சால்னா தொட்டு சாப்பிட்டால் போதும். ஜெயிக்கிற நினைப்பில் காசு இல்லாமல் போனால், கோட்டை அழித்து முதலிலிருந்து தொடங்க முடியாது. ஒரு பரோட்டாவுக்கு 400 என ரூ. 1200 எண்ணி வைக்கவேண்டுமாம். 30 இன்ச் சுற்றளவில் உருளைக்கிழங்கு,வெங்காயம்,காலிஃ ப்ளவர்காய்கறிகள் போட்டு பசுநெய்யில் முறுகச்சுட்ட பரோட்டா சேலஞ்சில் ம.பியின் மகாராஜ்சிங், ரோதக்கின் அஸ்வினி ஆகிய இருவர் மட்டுமே ஜெயித்திருக்கிறார்களாம்.

3

கொலைவெறி தாய்ப்பாசம்!

தாய்ப்பாசம் இந்தியர்களின் விட்டுக்கொடுக்க முடியாத ஸ்பெஷல் குணம். ஆனால் லிமிட் தாண்டினால் என்னாகும் என்பதற்கு ராஜஸ்தானின் கார் சம்பவமே உதாரணம்.

ராஜஸ்தானைச் சேர்ந்த தீபாராம், தன் தாய் மேல் ஆகாயம் அளவுக்கு பாசம் கொண்டவர். மேரேஜ் ஆனபின் அவரது மனைவிகள் இருவரும் தன்னைப் போலவே தாயிடம் பிரியமாக இருக்கவேண்டும் என்றால் நடக்கிற காரியமா அது? அம்மாவை மனைவிகள் சரியாக கவனிப்பதில்லை என பொருமலில் இருந்த தீபாராம் அடுத்த செய்த அட்டெம்ப்ட்தான் அவரை சிறையில் தள்ளியது. தன் இருமனைவிகளையும் அன்பாக காரில் அழைத்து சென்று, இருவரையும் உள்ளே வைத்து லாக் செய்தவர் காரை போகிக்கு எரிப்பது  போல கொளுத்திவிட்டார். சற்று தூரத்தில் நின்றபடி மனைவிகள் துடித்து இறப்பதை ரசித்த தீபாராமை போலீஸ் லாக்கப்பில் தள்ளியுள்ளது. கொலைவெறிப் பாசமா இருந்திருக்கிறாரே!


4
டூப் மகள்களுக்கு மானியம்!

இந்திய அரசின் "Beti Bachao, Beti Padhao" திட்டத்தில் முப்பது லட்சம் டூப் அப்ளிகேசன்கள் வந்துள்ள விவகாரம் குடும்பநல அமைச்சகத்துக்கு ஷாக் கொடுத்துள்ளது. பஞ்சாப்,.பி,இமாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலிருந்து அதிக டுபாக்கூர் அப்ளிகேசன்கள் வந்துள்ளன. ஏன் இந்த முயற்சி? அரசின் மானியத்தை இலவசமாக பெறத்தான். ஆனால் பேட்டி பச்சாவோ திட்டத்தில் எவ்வித பணப்பரிசும் கிடையாது என்பதே உண்மை.

கிராமத்திலுள்ள ராங் பேர்வழிகள், ஏழை மக்களை ஏமாற்றி ஒரு அப்ளிகேஷனை நிரப்ப ரூ.20-50 வசூலித்து கல்லா கட்டியதன் விளைவு, டெல்லியிலுள்ள குடும்ப நல அமைச்சகத்தில் கோரிக்கை மனுக்கள் கோணிப்பைகளில் அள்ளுமளவு குவிந்துவிட்டன. பேட்டி பச்சாவோ மனுக்கள் விரைவில் குறிப்பிட்ட மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு என்கொயரி தொடங்கவிருக்கின்றன.


5
பகவத்கீதை சொல்லும் முஸ்லீம் மாணவர்!

ராஜஸ்தானைச் சேர்ந்த நதீம்கான் மாநில அளவிலான சமஸ்கிருத கட்டுரைப் போட்டியில் முதலிடம் பெற்றிருக்கிறார். அதிலும் பகவத்கீதை தொடர்பான போட்டி என்பதுதான் இதில் ஸ்பெஷலோ ஸ்பெஷல்.அக்‌ஷய பாத்ரா என்ற அமைப்பு ஒருங்கிணைத்த போட்டியில் நதீம்கானுக்கு அடுத்தடுத்த இடங்களைப் பெற்ற இரு மாணவர்களும் முஸ்லீம்கள்தான். ராஜஸ்தான் மாநிலம் முழுக்க 200 பள்ளிகளிலிருந்து 8 ஆயிரம் மாணவர்கள் கலந்து கொண்ட போட்டி இது.

கூலித்தொழிலாளியின் மகனான கான், ஆறு வயதிலிருந்து சமஸ்கிருத மொழியை நெருப்பின் தீவிரத்துடன் கற்று வருகிறார். "சமஸ்கிருதம் கற்க மிக இயல்பான மொழி. சமஸ்கிருதத்தை இன்று பேசுவதற்கு கிடைக்கும் வாய்ப்பு அரிது. தேர்வில் வென்ற என்னை இன்று பலரும் அறிந்து பாராட்டுகிறார்கள்" என நெகிழ்கிறார் நதீம்கான். முதலிடம் பெற்ற நதீம்கானுக்கான பரிசை அவரது பெற்றோர் விரைவில் பெறவிருக்கிறார்கள்.

6
தேங்காய் சாதனை!

கேரளாவின் கோட்டயத்தைச் சேர்ந்த அபீஸ் டொம்னிக் உடைப்பதில் சாதனை செய்திருக்கிறார் நம்புவீர்களா? ஒரு நிமிடத்தில் 122 தேங்காய்களை ஒரே கையால் சூப்பர்மேனாய் உடைத்து அதகள கின்னஸ் சாதனை நிகழ்த்தியிருக்கிறார்.

2011 ஆம் ஆண்டு அபீஸ், மேற்சொன்ன அம்சங்களுடன் 118 தேங்காய்களை உடைத்து சாதனை படைத்திருந்தார். ஒரு செகண்டுக்கு இரண்டு தேங்காய் என்ற வேகத்தில் முன்னேறிச் சென்றவரை உற்சாகப்படுத்தியது கூடியிருந்த பொதுமக்களின் கரகோஷங்கள்தான். "கிராமத்தைச் சேர்ந்த என்னைப் போன்ற பலருக்கும் கின்னஸ் சாதனை ஒரு பெருங்கனவு. நான் கவனம் மற்றும் மனவலிமை என்ற இரண்டின் உதவியுடன்தான் ஜெயித்தேன்" என்கிறார் அபீஸ் டொம்னிக். தேங்காய் பயில்வான்!.

7

ரெடி ஃபார் சாவு!

கோக்குமாக்கு கோளாறுகளை அமெரிக்கா மட்டும்தான் செய்யவேண்டுமா என்ன? ஜப்பானும் இதற்கு சளைத்ததல்ல. எப்படி? இறப்புக்கு மக்கள் அங்கு முன்னரே பக்கா ஸ்கிரிப்டோடு ரெடியாகிறார்கள்.

ஜப்பானில் ஆண்டுதோறும் நடைபெறும் சுகாட்ஷூ என்ற விழா, முழுக்க இறப்பை எதிர்நோக்குபவர்களுக்கான ஸ்பெஷல் நிகழ்வு. இதில் இறப்பு பற்றிய செமினார்கள்,இறந்தால் அவர்களின் இறப்பை கொண்டாட உதவும் பொருட்கள்,ஈமச்சடங்கு சர்வீஸ் என அனைத்தும் இங்கு கிடைக்கும். அதோடு பூக்கள்,போட்டோ, இன்டோர் சமாதி என அப்டேட்டுகளைத் தந்து அசத்துகிறார்கள். அடுத்த ஐம்பது ஆண்டுகளில் 30 மில்லியன் மக்கள் இறப்பார்கள் என கூட்டிக்கழித்துப் பார்த்த ஜப்பான் அதற்கு முன்கூட்டியே ரெடியாகிவிட்டது. சாவுக்கு ஒரு சந்தையா? பலே!
தொகுப்பு: ரோனி ப்ரௌன்
நன்றி: குங்குமம்