அசத்தும் அறிவியல்!

Image result for sun


செல் ரோபோ!

மின்சாரத்தை கடத்தும், சூழலை பாதிக்காத உருவத்தை மாற்றிக்கொள்ளும் மனிதர்களின் செல் சைசில் பொருளை உருவாக்க முடியுமா? இதற்கு கார்னெல் பல்கலையைச் சேர்ந்த இயற்பியலாளர்கள் பால் மெக்யுன் மற்றும் இடாய் கோகன் ஆகியோர் விளக்கம் தருவதோடு இதற்கான செல்களை உருவாக்கியுள்ளனர்


"எலக்ட்ரானிக்ஸில் எக்ஸோகெலிடன் என்று கூறும் விஷயங்களை செய்ய முயற்சிக்கிறோம். இது விண்வெளியிலுள்ள வாயேஜர் திறனை சிறிய செல்லில் அடைப்பது போல" என தனது பணிகளை விவரிக்கிறார் ஆராய்ச்சியாளர் இடாய் கோகன். இந்த சிறிய செல் ரோபோக்கள் எலக்ட்ரானிக்,உயிரியல் மற்றும் ரோபோ என மூன்று விஷயங்கள் இணைந்த விளைவு. கிராபீன் மற்றும் கண்ணாடி இணைந்த வாகனம், உடலிலுள்ள வெப்பத்தை மின்சாரமாக பெற்று இயங்குகிறது. ரத்தசெல்களை விட பெரிதாகவும் நியூரான்களை விட சிறியதாகவும் உள்ள இந்த புதிய செல் ரோபோக்களை செமிகண்டக்டர் தொழில்நுட்பத்தில் பயன்படும் வாய்ப்புள்ளது. 

2

சூரியனின் உள்ளே!

சூரியனை ஆய்வு செய்வதே சிரமம் என்ற நிலையில் அதன் உட்புறங்களை ஆராய்ந்து கூறுவது விளையாட்டா? மேக்ஸ் பிளாங்க் இன்ஸ்டிடியூட்டின் ஆய்வுக்குழு செய்திருப்பது அதைத்தான்.  16 Cyg A and 16 Cyg B ஆகிய இரு கோள்களும் சூரியனைப் போல தன்மை கொண்ட நட்சத்திரங்கள். இதன் அமைப்பை ஆராய்ந்ததில், அதன் உள்ளமைப்பு ஒலி அலைகளைப் போன்ற வடிவில் அமைந்துள்ளது தெரிவந்துள்ளது.

நிலநடுக்கங்களை கண்டறியும் சீஸ்மோகிராஃப் போல இதனை ஆஸ்ட்ரோசீஸ்மோலஜி எனலாம் என்கிறார்கள் எர்ல் பெல்லிங்கர் மற்றும் சசிகா ஹெக்கர். "இரு நட்சத்திரங்களும் எழுபது ஒளி ஆண்டுகள் தொலைவிலுள்ளன. சூரியனின் மாடலில் இருந்ததால் ஆராய்ச்சிக்கு உதவின" என்கிறார் ஆராய்ச்சியாளர் எர்ல். கெப்ளர் டெலஸ்கோப் மூலம் 20க்கும் மேற்பட்ட மாதிரிகளை சோதித்து இந்த இரு நட்சத்திரங்களை தேர்ந்தெடுத்த அதன் உட்புறங்களை இன்வெர்ஸ் முறை மூலம் கண்டறிந்துள்ளனர். "இது நட்சத்திரத்தின் பரிமாண வளர்ச்சி பற்றிய முதல்கட்ட ஆய்வு மட்டுமே. இதன்மூலம் பால்வெளியிலுள்ள சூரியன் மற்றும் பிற நட்சத்திரங்களைப் பற்றி இன்னும் நாம் தெளிவாக புரிந்துகொள்ள முடியும்" என்கிறார் ஆராய்ச்சியாளரான சசிகா ஹெக்கர். 


3

ரியலா?ரீலா?

ரீல்:பூமியில் ஓரிடத்தை இடி ஒருமுறை மட்டுமே தாக்கும்.

மின்னல், இடி ஆகியவற்றின் தாக்குதல்களுக்கு லிமிட் கிடையாது. உயரமான கட்டிடங்கள் எளிதாக தாக்கப்படும் வாய்ப்பு அதிகம். அமெரிக்காவின் வர்ஜீனியாவைச் சேர்ந்த ராய் சுலிவன் என்ற ரேஞ்சர் தன் வாழ்நாளில் ஏழுமுறை மின்னலால் தாக்கப்பட்டுள்ளார்.

ரீல்: சப்ளிமெண்ட்ஸ் நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

உணவு வழியாக சத்துக்கள் உருவாவதே ஆரோக்கியம். இயற்கையாக கிடைக்காத சத்துக்களால் ஏற்படும் குறைபாடுகளை தீர்க்கவே சப்ளிமெண்ட்ஸ். எனவே இவற்றை மருத்துவரின் பரிந்துரை தவிர்த்து ஏராளமாக தின்றால் ஆபத்து உறுதி.

ரீல்: பனிச்சூழல் நமக்கு நோயை ஏற்படுத்தும்.

பனி,மழை என ஈரமான சூழலால் வீட்டுக்குள் அடைந்து கிடக்கும் மனிதர்களின் நெருக்கத்தினால் நோய்கள் பரவ வாய்ப்புண்டு. குளிர்ந்த சூழலில் ரினோ,கொரோனா,ஃப்ளூ வைரஸ்கள் பரவுகின்றன என்பதற்கு உறுதியான எந்த ஆதாரங்களும் இல்லை.
 4

பிட்ஸ்!

நார்வேயில் நீங்கள் குழந்தைகள் நூலை பதிப்பித்தால் அரசு கொள்முதல் செய்யும் அந்நூல் பிரதிகளின் எண்ணிக்கை 1,500. இந்நூல்கள் நாட்டிலுள்ள நூலகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

ஜனவரி முதல் தேதி வரும் கனவுப்படியே அந்த ஆண்டு அமையும் என்பது ஜப்பானியர்களின் கலாசார நம்பிக்கை.

வயதில் சென்சுரி அடிப்பவர்கள் பெரும்பாலும் செப்டம்பர்,அக்டோபர்,நவம்பர் ஆகிய மாதங்களில் பிறந்தவர்களே.

டிரேடர் ஜோ என்ற கடையில் நீங்கள் வாங்கும் பொருட்கள் எதுவானாலும் சாம்பிள்களை பயன்படுத்திய பின்னர் வாங்கும் வசதி உண்டு.

ரேடியோவில் பாடும் பாடகர்களுக்கு சன்மானம் அளிக்காத நாடுகள் அமெரிக்கா,சீனா,ஈரான்,வடகொரியா,


5

பிட்ஸ்!

வௌவால்கள் குகையில் மட்டுமல்ல. இலையிலும் வாழக்கூடியவை. Honduran white Bats மழைக்காடுகளில் இலைகளில் வாழும் திறன் பெற்றவை.

வெளியிலிருந்து நம் உடலை இயக்கும் சக்தியை குறிப்பிடவே முன்னர் Obsession என்ற வார்த்தை பயன்பட்டது.

முதல் உலகப்போரின்போது விந்துவை இங்க்காக உளவாளிகள் பயன்படுத்தினார். இம்முறையை கண்டறிந்தவர், Sir Mansfield Cumming.

குதிரையின் தோராய உச்சபட்ச வேகம் 14.9 ஹார்ஸ் பவர்.

இத்தாலியின் பைமான்டே நகரிலுள்ள குறிப்பிட்ட மரம் ஸ்பெஷல். என்ன அது? மல்பெரி மரத்தினூடே செர்ரி மரம் வளர்ந்திருப்பதுதான் அது.

தொகுப்பு: அன்பரசு, விக்டர் காமெஸி
நன்றி: முத்தாரம்