ரோனி பதில் சொல்லும் ஏன்?எதற்கு?எப்படி?

Image result for  fear

ஏன்?எதற்கு?எப்படி?

பயம் எப்படி எங்கிருந்து உருவாகிறது?


இயற்கையாக பாம்பு,தேள்,முதலை போன்றவற்றை பார்த்ததும் வயிற்றுக்குள் கடாமுடா சத்தம், முதுகெலும்பில் வேர்ல்பூல் ஜிலுஜிலுப்பு ஏற்படுவது இயற்கையிலே நேர்கிறது. ஏன்? டிசைன் அப்படித்தான் பாஸ்! அப்படி பயப்படவில்லையென்றால் பூமியில் நாம் உயிரோடு இருக்க முடியாதே! ஆனால் இதே பயம் நண்பர்களுக்கும் பரவி எக்ஸ்ட்ரீம் ஆனால் அது போபியா என நோய் ஆகிவிடும். எனவே பெற்றோர் பயத்தை போக்கி அவசியமான விஷயங்களுக்கு பயப்பட கற்றுத்தரவேண்டும். கூட்டம் ஆகாது,பைக் பயணம் என்றாலே ஜூரம் என பயம் கிளம்பினால் ட்ரீட்மெண்ட் அவசியத்தேவை.  

ஏன்?எதற்கு?எப்படி?

பார் கோடுக்கும், க்யூஆர் கோடுக்கும் என்ன வித்தியாசம்?

பொருளின் பெயர் விலை விவரங்களைக் கொண்ட பார்கோடுகள் டஜன் ஷேப்களிலும் அளவுகளிலும் உண்டு. 12 நம்பர்களில் வரும் Universal Product Code (UPC) இன்று சூப்பர் மார்க்கெட்டுகளில் சூப்பர் ஹிட்டாக பயன்படுகின்றன. இதில் ராயல் மெயில் மெய்ல்மார்க் வகை L வடிவ பார்கோடுகள் 26 எழுத்துக்களில் ஐடி.பின்கோடு,டெலிவரி இடம் ஆகியவை இடம்பெறும். 33X33 பிக்சல் க்யூஆர் டிசைனில் 50 எழுத்துக்களில் குறிப்பிட்ட பொருள் பற்றிய செய்திகளை சேமிக்கலாம். சைஸ் 177X177 எனும்போது,  7,089 எழுத்துக்களை சேமிக்கலாம். க்யூஆர் ஸ்கேனரில் ஸ்கேன் செய்யலாம் என்றாலும் சிரமமான ஒன்றே.

தொகுப்பு: விக்டர் காமெஸி
நன்றி: முத்தாரம்