இந்திய தீவுகளுக்கு ஜாலி டூர்!


Image result for loktak lake


ஜாலி ட்ரிப் செல்ல இந்தியத் தீவுகள்! - .அன்பரசு


பனி சூழ்ந்த மலைத்தொடர்கள், வெப்பமண்டலக் காடுகள், துறைமுகங்கள், மாளிகைகள் ஆகிய லொகேஷன்களுக்கு ட்ரிப் அடிக்க பாரீன் தேசங்களுக்கு டிக்கெட் போடவேண்டிய அவசியமில்லை. இந்தியாவிலும் மனதை மயக்கும் மேஜிக் ஸ்பாட்கள் எக்கச்சக்க இடங்கள் உண்டு. அதில் லவ்லி ஸ்பாட்கள் இதோ!

லோக்தக் ஏரி

மணிப்பூரிலுள்ள லோக்தக் ஏரியிலுள்ள சர்க்கிள் வடிவிலுள்ள தீவுகளுக்கு பும்திஸ் என்று பெயர். காலை சூரியனின் ஒளியில் மினுமினுக்கும் தங்கா,சென்ட்ரா என்ற மிதக்கும் தீவுகள் உள்ள ஏரியின் பரப்பு 35 கி.மீ. மிதக்கும் தீவுகளைச் சுற்றி ஏறத்தாழ 4 ஆயிரம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இங்குள்ள தக்மு நகரருகில் அரசு நீர் விளையாட்டுகளுக்கான மையத்தை நடத்தி வருகிறது. இங்கு மீன் பிடிப்பதைக் கடந்து டூரிஸ்டுகளுக்கான கைடுகளும் உண்டு. ஏரியிலுள்ள தேசிய பூங்காவான கெய்புல் லாம்ஜாவோ, 40 .கி.மீ பரப்பு கொண்ட உலகின் முதல் மிதக்கும் பூங்கா.
செல்வது எப்படி?    
மணிப்பூரின் இம்பாலிலிருந்து 60 கி.மீ தொலைவில் லோக்தக் ஏரி அமைந்துள்ளது. பஸ் அல்லது டாக்சி என்பது பயணிகளின் சாய்ஸ்.

காக்காதுருத்து தீவு, கேரளா

கேரளாவின் கொச்சிக்கு அருகிலுள்ள வேம்பநாடு ஏரியிலுள்ள காக்காதுருத்து தீவு, சூரிய உதயம்,அஸ்தமனத்தை அமைதி நெஞ்சில் தவழ காண ஏற்ற இடம். நேஷ்னல் ஜியோகிராபிக்ஸ் காக்காதுருத்து ஏரியை தன் Around the world In 24 Hours லிஸ்ட்டில் பிரசுரிக்க, உடனே பிரபலமாகிவிட்டது. வஞ்சி எனும் படகில் ஜாலியாக துடுப்பு போட்டு நேரத்தையே மறக்கலாம்.

செல்வது எப்படி?

கொச்சின் ஏர்போர்ட்டிலிருந்து எரமல்லூர் ஜங்க்ஷன் அல்லது எர்ணாகுளம் ரயில்நிலையத்திலிருந்து டாக்சி ஏறி கொடும்புரம் வந்து அங்கிருந்து படகு ஏறினால் காக்காதுருத்து தீவு பத்தே பத்து நிமிடங்கள்தான்

காளிஜெய் தீவு, ஒடிஷா

சிலிகா ஏரியில் உள்ள காலிஜெய் தீவு ஒடிஷாவின் மிக பிரபலமான டூரிஸ்ட் ஸ்பாட். காளிக்கென தனி கோவில் இத்தீவில் 134 டால்பின்கள் உள்ளன. பறவைகளை ரசிப்பவர்களுக்கும் ஏற்ற இடமிது. வங்காள விரிகுடாவில் கலக்கும் தயா ஆற்றிலிருந்து நீரைப் பெற்று 1,100 கி.மீ பரப்பளவில் ரஷ்யா, மங்கோலியா, தென்கிழக்கு ஆசியா, லடாக், இமாலயம் ஆகிய இடங்களிலிருந்து இடம்பெயர்ந்து வரும் 160 வகையான பறவைகளுக்கு இளைப்பாற இடம் தருகிறது சிலிகா ஏரி. ஏரியைச்சுற்றி 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர்
எப்படிச்செல்வது?

புவனேஸ்வர் நகரிலிருந்து காளிஜெய் தீவு 78 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. தீவின் அருகில் பாலுகாவன் ரயில் நிலையம் உள்ளது.

உமாநந்தா தீவு,அசாம்

அசாமின் குவகாத்தியில் பிரம்மபுத்திரா நதியின் நடுவில் அமைந்துள்ள தீவு உமா நந்தா. தீவின் டிசைனைப் பார்த்து ஆச்சரியப்பட்டு ஆங்கிலேயர்கள் வைத்த பெயர் மயில் தீவு. 1694 ஆம் ஆண்டு அகோம் மன்னர் சுபாட்பா உத்தரவின் பேரில் உருவானது இத்தீவிலுள்ள உமாநந்தா கோவில். கோல்டன் லங்கூர் குரங்குகள் அதிகம் வாழும் தீவுகளில் உமாநந்தாவும் ஒன்று. சிவராத்திரி இங்கு மிக சிறப்பாக விமரிசையாக கொண்டாடப்படும் நிகழ்வு.   

எப்படிச் செல்வது?

குவகாத்தியிலிருந்து பஸ் அல்லது டாக்சி பிடித்து கச்சேரி மலைகணவாய் அடைந்து அங்கிருந்து படகு பிடித்து உமாநந்தா தீவை அடையலாம்.

ஹோப் தீவு, சீமாந்திரா

சீமாந்திராவின் காக்கிநாடா துறைமுகத்திலிருந்து 45 நிமிட பயணத்தில் வங்காள விரிகுடாவின் ஆசை அரவணைப்பிலுள்ள ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவிலான ஹோப் தீவை அடையலாம். கோதாவரி ஆறு கொண்டு வந்து சேர்த்த மணல்கள் உருவான 200 வயசு தீவு இது. ஐநூறு மீட்டர் நீளத்தில் 60 அடி ஆழத்தில் கடல் அலைகள் தாக்காதபடி படகுகளை நிறுத்துமிடம் டிசைன் செய்யப்பட்டுள்ளது. ஹைபிரிட் மாங்குரோவ் காடுகளைக் கொண்டுள்ள தீவுப்பகுதியில் உள்ள புட்ரையா பகலு, சொரலகோண்டு பகலு எனும் இரு குக்கிராமங்களில் 400 க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். ஆலிவ் ரிட்லி ஆமைகளை காக்கும் கொரிங்கா வனவாழ்வு காப்பகம், உப்படா சாலையிலுள்ள பீச் நீங்கள் நிச்சயம் காணவேண்டிய ஸ்பாட்கள். காக்கிநாடா துறைமுகத்தை சுனாமி,புயல்களிலிருந்து இயற்கையாக காக்கும் ஹோப் தீவு, மிகப்பெரிய மாங்குரோவ் காடுகளைக் கொண்டுள்ள இடங்களில் இரண்டாமிடத்தில் உள்ளது.

எப்படிச்செல்வது?

ராஜமுந்திரி ஏர்ஃபோர்ட்டிலிருந்து காக்கிநாடாவுக்கு டாக்சி அல்லது பஸ் பிடித்து வரலாம். காக்கிநாடா துறைமுகத்திலிருந்து படகு பிடித்தால் ஹோப் தீவு 7 கி.மீ தொலைவுதான்.
தின்னக்காரா, லட்சத்தீவுகள்
லட்சத்தீவுகளிலுள்ள தின்னக்காரா தீவு, பங்காரம் தீவுக்கு நேர் எதிராக அமைந்துள்ளது. அகாட்டி நகரிலிருந்து 8 கி.மீ தொலைவிலுள்ள இத்தீவின் பரப்பு பரப்பு 125.21 .கி.மீ. வெண்மணல் கடற்கரையில் ஜாலியாக ஜாகை அமைத்து இயற்கையை ரசிக்கலாம். போரடித்தால் ஸ்கூபா டைவிங்,ஸ்னோர்கல் போன்ற விளையாட்டுகளுக்கும் இங்கு பஞ்சமில்லை.

எப்படிச் செல்வது?

விமானத்திலிருந்து அகாட்டி நகருக்கு வந்து, அகாட்டி தீவிலிருந்து படகு பிடித்தால் தின்னக்காரா தீவை 30 நிமிடங்களில் அடையலாம். கொச்சியில் கப்பல் வழியாக அகாட்டி தீவுக்கு வந்து தின்னக்காராவை அடையலாம்.

ரங்கப்பட்டினம், கர்நாடகா

காவிரி நதியால் உருவான ரங்கப்பட்டினம் 7.2 .கி.மீ பரப்பு கொண்ட தீவு இது. கி.பி. 9 ஆம் நூற்றாண்டிலிருந்து கங்கா, உடையார் உள்ளிட்ட அரசர்களின் தலைநகரமாக திகழ்ந்த நகரம்ரங்கப்பட்டினம். இங்குள்ள துறைமுகம் அதன் உறுதியான வலிமைக்காக இன்றும் வரலாற்றில் முக்கிய இடம்பிடித்துள்ளது. துறைமுகம், மஸ்ஜித் இ அலா, தார்யா தவுலத்(திப்பு கோடைக்கால மாளிகை), மைசூர் கேட்,கும்பஸ் ஆகியவை இங்கு பார்க்கவேண்டிய முக்கிய இடங்கள்.
   
எப்படிச்செல்வது?
பெங்களூர்-மைசூர் சாலையின் நெடுஞ்சாலையில்ரங்கப்பட்டினம் அமைந்துள்ளது. ரங்கநாதசுவாமி கோயிலின் பின்புறம் ரயில்வே நிலையமும் உள்ளது. பெங்களூரின் கெம்பகௌடா மற்றும் மைசூர்  விமானநிலையம் அருகிலுள்ளது

தொகுப்பு: மயிலா, கல்யாண்பாபு, பிரமோத் 
நன்றி: குங்குமம்

    


  
                       
  


பிரபலமான இடுகைகள்