Science Bits!





நன்றி திருவிழா!

1924 ஆம் ஆண்டு Macy என்ற கடையின் விரிவாக்கத்தை கொண்டாடுவதற்காக மன்ஹாட்டன் நகரில் தொடங்கப்பட்ட விழாவே நன்றித்திருவிழா. விழாவில் முதலில் கடை ஊழியர்கள்,நடிகர்,நடிகைகள் பங்கேற்றனர்.Allied Patriotic Societies அமைப்பு இவ்விழாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தது.

1927 ஆம் ஆண்டிலிருந்து கேரக்டர் பலூன்கள் விழாவில் பறக்கவிடப்படுகின்றன. இதற்கு Balloonatics என்று பெயர். 1942-1944 ஆம் முதலாம் உலகப்போர் தொடங்கியதால், ரப்பர் மற்று ஹீலியம் வாயுவுக்கு தட்டுப்பாடு ஏற்பட பேரணி நிறுத்திவைக்கப்பட்டது.

பேரணியில் 35 முறை உருவாக்கப்பட்ட பலூன் கேரக்டரின் பெயர் Snoopy. 2016 ஆம் ஆண்டில் ஸ்நூப்பிக்கு பதில் சார்லஸ் ப்ரௌன் மாற்றப்பட்டது.

பரேடு முடிந்த அடுத்த 15வது நிமிடம் ஹீலியம் பலூன்கள் செவன் அவென்யூவில் காற்று பிடுங்கப்பட்டு, அடுத்த ஆண்டு பேரணிக்காக பத்திரப்படுத்தப்படுகின்றன.   

 2
ஜப்பானில் நீல விளக்கு!

இந்தியாவில் ட்ராஃபிக் விளக்குகள் பச்சை,மஞ்சள்,சிவப்பு என டிசைன் செய்யப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. ஆனால் ஜப்பானில் சிவப்புக்கு பதில் நீலநிறம் பயன்படுத்தப்படுகிறது. காரணம், ஜப்பான் மொழிதான். நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஜப்பான் மொழியில் நான்கு அடிப்படை நிறங்களுக்கான வார்த்தைகளே இருந்தன. பச்சை என்றால் நீல நிறத்தைக் குறிக்கும் வார்த்தையான 'Ao' பயன்படுத்தலாம். மில்லியனியத்தில் பச்சையைக் குறிக்க 'midori'(நீலநிற சாயல்என்ற வார்த்தை உதவுகிறது.

1973 ஆம் ஆண்டு நீலநிறவிளக்கை போக்குவரத்து சிக்னல்களில் பயன்படுத்துவதற்கான சட்டத்திருத்தத்தை ஜப்பான் அரசு முன்மொழிந்த ஆண்டு தொடங்கி இன்றுவரை நீலநிறவிளக்கு அந்நாட்டில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
்டது.


பரேடு முடிந்த அடுத்த 15வது நிமிடம் ஹீலியம் பலூன்கள் செவன் அவென்யூவில் காற்று பிடுங்கப்பட்டு, அடுத்த ஆண்டு பேரணிக்காக பத்திரப்படுத்தப்படுகின்றன.   
 3
சர்க்கரை ஆராய்ச்சிக்கு தடை!

சர்க்கரை ஆராய்ச்சிகளுக்கான நிதியுதவியை நிறுவனங்கள் நிறுத்தி இன்றோடு 50 ஆண்டுகள் ஆகின்றன. இதய நோய்க்கு சர்க்கரை காரணம் என்பது இதற்கு முக்கிய காரணம். International Sugar Research Foundation(ISRF) அமைப்பு கலிஃபோர்னியா பல்கலைக்கழகம் செய்த ப்ரொஜெக்ட் 259 க்கு முன்னர் நிதியுதவி அளித்தது.

அதிகப்படியாக சர்க்கரை உண்ணுவது இதயநோய்,சிறுநீர்ப்பை புற்றுநோய் ஆகியவற்றுக்கு காரணமா என்பதே ஆராய்ச்சி டாபிக். கூடுதலாக நிதியுதவி ஒதுக்காமலும், ஆராய்ச்சி முடிவை வெளியிடாமலும் ISRF அன்றே நிறுத்தி வைத்துள்ள உண்மை இன்று PLOS Biology இதழில் வெளியாகியுள்ளது. குளிர்பானங்கள்,மிட்டாய்கள் உடல் எடை, பருமனை தூண்டவில்லை என்று ஆராய்ச்சியாளர்களுக்கு நிதியளித்து அறிக்கை வெளியிடுவது அங்கு இயல்பான ஒன்று. ட்ரைகிளைசரைட்ஸ் எனும் ரத்தக் கொழுப்புகளுக்கும் சர்க்கரைக்கும் உள்ள தொடர்பு முக்கியமானது. எலிகளுக்கு மிகையான சர்க்கரை உணவுகளை அளித்தபோது, பீட்டா குளூகுரோனைடைஸ் எனும் என்ஸைம் அவற்றின் சிறுநீரில் தென்பட்டது. இது சிறுநீர்ப்பை புற்றுநோய்க்கு ஆதாரமானது" என்கிறார் ஆராய்ச்சியாளரும் UCSF பல்மருத்துவமனை பேராசிரியரான கிரிஸ்டின் கியர்ன்ஸ்.

4
கேட்ஜெட்ஸ் புதுசு!

Travelmate
ஏர்போர்ட்டில் தானாகவே உங்களை பின்தொடரும் இன்டலிஜென்ட் சூட்கேஸ் இது. வெயிட்டிங் ஸ்கேல்,ஜிபிஎஸ் ட்ராக்கிங், எல்இடி லைட், கைரேகை பாதுகாப்பு என அட்டகாச சூட்கேஸ் ட்ராவல்மேட் நிறுவனத்தின் தயாரிப்பு.விலை ரூ.32,382

Vespa Elettrica scooter
பார் புகழும் வெஸ்பாவின் எலக்ட்ரிக் 50சிசி எலக்ட்ரிக் ஸ்கூட்டர். நான்கு மணிநேரம் சார்ஜ் செய்தால் ஜம்மென 100 கி.மீ செல்ல முடியும். இதில் ஹைபிரிட் வெஸ்பாவும் உண்டு.2018 ஆம் ஆண்டு ரிலீஸ்.

LG K7i
பேட்டரி,ப்ரோசஸர் என்பதையெல்லாம் கடந்து டெங்குவால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக யோசித்த எல்ஜியின் கண்டுபிடிப்பு K7i போன். இந்தியாவிற்கென தயாரிக்கப்பட கொசு விரட்டி போன் இது. விலை ரூ. 9990

 5
மின்னுவதெல்லாம் நல்லதல்ல!

மைக்ரோ பிளாஸ்டிக்களின்(Glitter) பளிச்சிடல் இல்லாமல் எந்த மேக்கப்பும் முழுமை அடைவதில்லை. பெண்களின் கண்களுக்கு, முகம் கழுவ பயன்படும் ஃபேஸ்வாஷ் என மைக்ரோபிளாஸ்டிக்களின் பயன்பாடு அனைத்து காஸ்மெடிக் பொருட்களிலும் உண்டு. அமெரிக்காவில் 2015 ஆம் ஆண்டு மைக்ரோபிளாஸ்டிக்குகளை பயன்படுத்தி காஸ்மெடிக் ஐட்டங்களை தயாரிக்க கூடாது என்று சட்டமே போட்டும் புண்ணியமில்லை.

நாம் பயன்படுத்தும் பொருட்களிலுள்ள மைக்ரோபிளாஸ்டிக், நீர் ஆறு,ஏரி,கடல் வழியாக மீன்கள் உள்ளிட்ட உயிரினங்களை பாதித்து உணவுச்சங்கிலியையும் மெல்ல தகர்க்கிறது. இன்று மறுசுழற்சி முறையில் வாகன டயர்கள், உடைகளாக மாறினாலும் இவற்றின் பயன்பாட்டின் வேகத்தை  மறுபயன்பாடு இன்னும் எட்டவில்லை."ஏற்கனவே கடலில் பிளாஸ்டிக்குகள் நிறையத் தொடங்கிவிட்டன" என்கிறார் கடல் சூழலியலாளரான செல்சியா ரோச்மன்.  
A style='font-size:16.0pt;font-family:TAUN_Elango_Valluvan'>பேட்டரி,ப்ரோசஸர் என்பதையெல்லாம் கடந்து டெங்குவால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக யோசித்த எல்ஜியின் கண்டுபிடிப்பு K7i போன். இந்தியாவிற்கென தயாரிக்கப்பட கொசு விரட்டி போன் இது. விலை ரூ. 9990


6
ரியலா? ரீலா?

ரீல்:இறந்தவரின் உடலில் நகமும் முடியும் வளரும்!
ரியல்: இதயம் ஆக்சிஜனை ரத்தம் வழியாக உடலுக்கு செலுத்தாதபோது முடியும்,நகமும் எப்படி வளரமுடியும்? இறந்த உடலில் மெல்ல நீரிழப்பு ஏற்பட முடி,நகங்கள் மெலிதாக உள்ளிழுக்கப்படுவதே உண்மை. ஆனால் முடி,நகங்கள் நீண்டிருப்பதாக தோற்றமயக்கம் ஏற்படுகிறது.

ரீல்:உடலை பதப்படுத்துவது அதனை பாதுகாக்கிறது.
ரியல்: உடலை பதப்படுத்தி வைப்பது அதற்கு மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காகவே. பதப்படுத்துவது பிறருக்கு நோயை ஏற்படுத்தாது என்று கூறமுடியாது. மேலும் இதற்கு அரசின் அனுமதி தேவையில்லை. பதப்படுத்த பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் கடுமையான நச்சுத்தன்மை கொண்டவை.

ரீல்: இறந்தவரை எரிக்கும்போது உடல் எழுந்து உட்காரும்.
ரியல்: உடலில் நீர் முழுக்க வற்றும்போது ஏற்படும் தன்மையால் உடல் நிமிரும். மற்றபடி பேய்படங்களின் சிஜி போலவெல்லாம் கிடையாது. உடல் எரிக்கப்படும் அதன் தன்மை மாறுவதால் சிறிது நகரும் அவ்வளவே.


7

பிட்ஸ் புதுசு!

ஆங்கில எழுத்துக்களின் வரிசைப்படி Almost என்ற வார்த்தையே நீளமானது.

வாட்டிகன் நகரில் வாழ்பவர் குடிக்கும் சராசரி ஒயினின் அளவு சராசரியாக ஆண்டிற்கு 74 லிட்டர்.

பிரிங்கில்ஸ் சிப்ஸ் அடைக்கும் கெட்டுப்போகாத கேன்களை கண்டறிந்தவர் ஃப்ரெடெரிக் ஜான். இறந்தபின் ஜானின் எரியூட்டப்பட்ட சாம்பல் பிரிங்கில்ஸ் கேனில் அடைக்கப்பட்டது.

அமெரிக்க கருவூலத்துறை, முன்பு டூநட் டிசைனில் நாணயங்களை உருவாக்கியுள்ளது.

ஓரு ஆண்டிற்கு டாய்லெட்டில் மட்டும் தோராயமாக 40 ஆயிரம் அமெரிக்கர்கள் விபத்துகளில் சிக்குகிறார்கள்.  

   
8
ஹைட்ரஜன் கார் சாத்தியமா?

ஹைட்ரஜன் கார் மாசில்லாத தீர்வாக எதிர்காலத்தில் அமைய தேவையான பொருட்களை ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து கண்டுபிடித்து வருகின்றனர். அமெரிக்காவின் UCLA பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சூரிய ஆற்றல் மூலம் இயங்கும் ஹைட்ரஜன் எரிபொருளை தரும் கருவியை கண்டுபிடித்திருக்கிறார்கள்.

நிக்கல்,இரும்பு,கோபால்ட் ஆகியவற்றின் மூலம் உருவாகியுள்ள கருவி ஹைட்ரஜன் கார்களை எதிர்காலத்தில் பயன்படுத்துவதை எளிதாக்கும். "விலை மலிவான ஹைட்ரஜன்தான் எதிர்கால எரிபொருள்.வண்டியை இயக்க எரிபொருளாகவும்,மின்சாரம் தரும் பொருள் என டூ இன் ஒன்னாக இக்கருவியே செயல்படும்" என்கிறார் வேதியியல் மற்றும் உயிரிவேதியல்துறை ஆய்வாளாரான ரிச்சர்ட் கேனர். புதிய கருவியில் மூன்று எலக்ட்ரோடுகள் சோலார் செல்லுடன் இணைந்து சூப்பர் கெபாசிட்டராக சக்தியை தேக்கி செயல்படுகின்றன.

Compiled by ka.si. Vincent
Thanks:Mutharam