ஜாலி பிட்ஸ்!






ஜாலி பிட்ஸ்!



காதல் மேப்!

அமெரிக்காவின் மின்னசோட்டாவில் பைலட் கெவின் பெக்கர், காதலி ஒலிவியாவிடம் காதலைச் சொல்ல இயக்குநர் ஷங்கராக மாறி யோசித்தார்.  கல்யாணம் பண்ணிக்கோ என விமானம் மூலம் பனியில் எழுதி ஹார்ட் படம் போட்டு காதலியிடம் க்ரீன் சிக்னல் வாங்கி அசத்தியிருக்கிறார்.

பென்சில் இசை!

அமெரிக்காவின் அரிஸோனாவைச் சேர்ந்த ஸ்டார் வார்ஸ் திரைப்பட ரசிகை டேனி ஊச்சா,  படத்தின் பாடல் இசையை பென்சிலில் உருவாக்கி வைரலாகியுள்ளார். பென்சில் இசையை சுயமாக தானே கற்ற இவர் யூட்யூப் வீடியோவின் வழி பிறருக்கும் பாடம் எடுக்கிறார்.

டாங்கரில் ஷாப்பிங்!

ரஷ்யர் ஒருவரை போலீஸ் எமர்ஜென்சி வேகத்தில் கைது செய்தனர். எதற்காக? ஷாப்பிங் செய்ததற்காகத்தான். யெஸ். சூப்பர் மார்க்கெட்டில் ஒயின் வாங்க அவர் வந்தது, ராணுவ டேங்கரில்.  சும்மா விடுவார்களா? இதே மனிதர் சில மாதங்களுக்கு முன்பு ட்ரக் ஒன்றை திருடி கைதானார் என்ற செய்தி போலீசுக்கு ஃபைலை புரட்டியபோதுதான் நினைவுக்கு வந்ததாம்.

ரிவர்ஸ் மாரத்தான்!


கலிஃபோர்னியாவைச் சேர்ந்த தடகள வீரர் லாரென் ஸிடோமெர்ஸ்கி, போஸ்டன் மாரத்தானில் ரிவர்ஸில் ஓடி கின்னஸ் செய்ய தீர்மானித்துள்ளார். 42 கி.மீ தூரம் ஓட என்ன ரீசன்? லாரெனின் தம்பி பிரையன், காக்கை வலிப்பால் ஏழு வயதில் இறந்துவிட்டார். அந்நோய்க்கான சிகிச்சை தொகைக்காகத்தான் இந்த ரன்னிங் முயற்சி

நன்றி: குங்குமம்