மன்னருக்கு போலி!
வரலாற்று
சுவாரசியங்கள்
3
மன்னருக்கு போலி!
ரா.வேங்கடசாமி
பிறரை
ஏமாற்றுவதையே தொழிலாகக் கொண்டவர்களுக்கு எவ்வித
கொள்கையும் கோட்பாடும் இல்லை. தாங்கள் பிழைக்க வேண்டும்; சம்பாதிக்க
வேண்டும் என்கிற லட்சிய தாகம் கொண்டவர்களான இவர்களுக்கு, மேல்தட்டு
மனிதர்களை ஏமாற்றுவதில் இவர்களுக்கு அன்லிமிடெட் திருப்தி.
அப்படிப்பட்ட
அசகாய எத்தர்களில் ஒருவர் ஹாரிடோமிலா. மறைந்த மன்னர் கெய்சரின் பேரன்
என்று சொல்லி உலா வந்தவர். ஜெர்மனியில் கெய்சரின் பேரன் வில்ஹெம்
வான் ஓகன் ஜோலரின் இருக்கும்போதே அப்படி சொல்லி ஏமாற்ற முயற்சித்தது ஹாரிடோமிலாவின்
சமர்த்து.
ஹாரிடோமிலா, 1904-ஆம்
ஆண்டு ரஷ்யாவில் பிறந்தார். நடுத்தரக்குடும்பம். இவரது தந்தை ஹாரி, சிறு குழந்தையாக இருக்கும்போது
இறந்துவிட்டார். 1915-ஆம் ஆண்டு ஜெர்மனியில் லேட்வியாவை ஆக்கிரமித்தபோது
ஹாரிக்கு 11 வயது. சிறுவர் இல்லத்தில் வளர்ந்தார் ஹாரிடோமிலா.
1918-ஆம் ஆண்டு சில ஜெர்மனி புரட்சியாளர்கள், முன்னர் அந்நாட்டிற்குச்
சொந்தமாக இருந்த புரூசியின் நிலங்களை மீண்டும் ஜெர்மனியோடு இணைக்கவேண்டும் என்று வெட்டியாக
போராட்டம் நடத்தினார்கள். ஹாரியும் இதில் கலந்துகொண்டு கோஷமிட்டார். அரசு கண்டுகொள்ளாததால் ஏமாற்றமடைந்த புரட்சியாளர்கள் மீண்டும் ஜெர்மனிக்கே
திரும்பி, நாட்டில் எழுந்த தொழிலாளர்களின் பிரச்னையில் கவனம்
செலுத்த ஆரம்பித்தனர். ஜெர்மனியில் முறையான அடையாள அட்டை இல்லாததால், நாடோடியாக சில ஆண்டுகள் சுற்றிக்கொண்டு இருந்தார். பணத்திற்கு செய்த திருட்டுகளால்
சிறைவாசத்திற்கு உடல் பழகியது. அவரிடம் இருந்த ஒரே நல்ல ‘சூட்டை’ அணிந்துகொண்டு எர்பர்ட்டில் இருந்த ஒரு
ஓட்டலில் வான்கோரா பிரபு என்ற பெயரில் அறை எடுத்துத் தங்கினார்.
முன்னாள்
மன்னர் கெய்சர் வில்ஹெம் 1918-ஆம் ஆண்டு பதவி துறந்தார். அவருடைய பிள்ளைகளில்
ஒருவனான இளவரசர் லூயி பெர்ட்டினான்டுக்கு ஹாரி, போன் தொடர்பு கேட்டான்.
இளவரசன் போனில் கிடைக்கவில்லை என்பது வேறு விஷயம். ஆனால் ஹாரியை அதேநொடியில் விஐபி
ஆனார். இளவரசரின் சாயலில் இருப்பது கூடுதல் பிளஸ். ராஜ பரம்பரையைச் சேர்ந்த வில்ஹெம் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பதை
உலகிற்கு சொல்லாமல் சொன்னது. எனவே ஓட்டல் நிர்வாகிகள்,
ஹாரி தங்கியதற்காக வாடகைப் பணம் எதையும் வசூலிக்கவில்லை. இது
ஹாரிக்குக் கிடைத்த முதல் வெற்றி.அப்பகுதியில் இந்தச் செய்தி மிகவும் வேகமாகப்
பரவியது. இதனால் அக்கம்பக்கத்து ஊர்களுக்கு அவன் சென்றபோதெல்லாம் மிகவும் கௌரவமாக ஹாரி
நடத்தப்பட்டார். ஆல் இன் ஆல் பத்திரிகைகளிலும் ஹாரியின் பெயர் வராத நாளேயில்லை. பதவி
இழந்த மன்னர் குடும்பத்து வாரிசுக்கு இவ்வளவு முக்கியத்துவம் தேவையா? என்று புரட்சி ராணுவ தளபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
உடனே
ஹாரி ஊள்ளூரில் இருந்த ராணுவ முகாமின் அதிகாரியிடம் சென்று, பத்திரிகைகளில்
இதுபோன்ற செய்திகள் வருவதை நான் விரும்பவில்லை என்றும், தான்
இந்நகரில் அதாவது எர்பர்ட்டில் சில தினங்களை நிம்மதியாகக் கழிக்க விரும்புவதாகவும்
சொன்ன ஹாரி, எர்பர்ட்டிலிருந்து
சிறிய ஊரான வெப்மருக்கும் போனார். விளம்பரம் வேண்டாம் என சொல்லியே விளம்பரம் தேடிக்கொண்ட
ஹாரியை உள்ளூர் பிரமுகர்கள் அவனை விழுந்து விழுந்து கவனித்தார்கள். காசில்லாத நிலையில்
இருந்த சில்லறைகளை திரட்டி பெர்லின் நகருக்கு டிக்கெட் வாங்கி ரயிலேறினார் ஹாரி.
ஹாரியின்
ரயில் ஊர்ந்து பெர்லின் நகரை அடைவதற்குள், பத்திரிகைகளில் ஹாரியை கைது செய்யும்விதமாக
செய்திகள் வந்துவிட்டன. அத்தனைக்கும் போலீஸ்தான் காரணம்.
வில்ஹெம்
வம்ச இளைவரசர் சமீபகாலமாக எர்பர்ட், வெய்மர் நகர்களுக்கு அவர் வரவேயில்லை
என்பது போலீசின் ரிப்போர்ட். இளவரசனாக நடிக்கும் அந்த போலி
நபரை ஜெர்மனி பூராவும் தேடிக்கொண்டு இருக்கிறார்கள் செய்தி பரவ, உடனே இன்னொரு ரயிலில் ஏறி பிரான்ஸ் நாட்டு எல்லைக்கு சென்ற ஹாரி மிலிட்டரியில்
சேர்ந்துவிட்டார். பயிற்சியின்போதே ராணுவத்தினர் அவரை கைது செய்து
சிறையில் அடைத்தனர். விசாரணையில் யாரும் ஹாரி தங்களை ஏமாற்றினார்
என சொல்லாததால் ஏழு மாத சிறைவாசத்திற்கு பிறகு விடுவிக்கப்பட்டார். பின் தனது அனுபவங்களை நூலாக எழுத, எழுபதாயிரம் பிரதிகள்
விற்பனை. அப்புறமென்ன மந்துடு ஹாரி,
கிடைத்த பணத்தில் அங்கிருந்த சினிமா தியேட்டரை விலைக்கு வாங்கினார்.
அதில் திரையிட்ட முதல் திரைப்படம் "போலி இளவரசன்".
தொகுப்பு: கா.சி.வின்சென்ட், விக்டர் காமெஸி
நன்றி: முத்தாரம்