சுவாரஸ்ய பத்தி!

Image result for modi  tour cartoon

மோடி விமானம் ரெடி!

 புதிய விஷயங்களை உருவாக்குவதுதானே கண்டுபிடிப்பு. மும்பையைச் சேர்ந்த இளைஞர் தன் வீட்டை விற்று அரும்பாடுபட்டு தானே விமானத்தை உருவாக்கியுள்ளார்.


மும்பையைச் சேர்ந்த அமோல் யாதவ், தன் வீட்டை விற்று நான்கு கோடி ரூபாய் திரட்டி, தன் ஆசைக்கனவான ஆறு பேர் அமர்ந்து செல்லும் விமானத்தை உருவாக்கியிருக்கிறார்.அதோடு விமானத்துக்கு விக்டர் டாங்கோ நரேந்திர மோடி தேவேந்திர என்றும் பெயர்சூட்டி நெகிழ்ச்சியில் நெஞ்சம் விம்மியிருக்கிறார். பின் விமானத்துக்கு சான்றிதழையும் மகாராஷ்டிரா முதல்வர் பட்னாவிசிடம் பெற்று சாதித்துள்ளார். பத்தொன்பது ஆண்டு தயாரிப்பிலிருந்து விமானம் TAC-003 வைத் தயாரித்த அமோல் யாதவ், ஜெட் ஏர்வேஸின் முன்னாள் பைலட். 2011 ஆம் ஆண்டு விமானம் ரெடியானாலும் சர்டிஃபிகேட் கிடைக்க  ஆறு ஆண்டுகள் வெயிட் செய்திருக்கிறார். பொறுமை நல்லது!

2
வரிக்கு பரிசு !

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், புதிய வரி சீர்திருத்தத்தை அமுல்படுத்திய தினத்திலிருந்து போராட்டங்கள் எட்டு திக்கிலும் உருவாகி வருகின்றன. லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த ராபர்ட் ஸ்டாங்க், கருவூலத்துறைக்கு ட்ரம்ப் பெயரில் அனுப்பிய பார்சல் மேட்டர்தான் இணையத்தில் சொடக்கு வேகத்தில் ஷேர் ஆகும் புதிய வரவு.  

ஏழை மக்களை துன்புறுத்தும் வரிக்கு எதிராக நூதனமாக போராட யோசித்த உளவியலாளரான ராபர்ட் குதிரை கழிவை கிலோகணக்கில் வாங்கி பார்சல் செய்துவிட்டார். கருவூலத்துறை இயக்குநர் நூசின் அப்போது ஆபீசில் இல்லாததால் அவமானத்திலிருந்து எஸ்கேப்.  'ட்ரம்ப் மற்றும் நூசினுக்கு கிறிஸ்துமஸ் வரிக்கான பரிசு இது' என எழுதிய பார்சலை திறந்து பார்த்த உளவுத்துறை ஆட்கள், ராபர்ட் மேல் கேஸ் போடவில்லை. பதிலுக்கு வீட்டுக்கு போய் "ராபர்ட் உங்களுக்கு வெட்கமாக இல்லையா?" என கேட்டிருக்கிறார்கள். பார்சல் பயங்கரவாதி!

3

இங்கிலீஷ் லட்சியம்!

உள்ளூரில் தடுமாறாமல் காக்க தாய்மொழி உதவினாலும் பிசினஸ் மொழியான இங்கிலீஷ் கற்காமல் காலம் தள்ளுவது சால கஷ்டம். இந்தியாவில் இதனை உணர்ந்த பழங்குடி கிராமம் சாப்பிடுவது, தூங்குவதற்கு அடுத்து ஆங்கிலத்தை படிப்பதற்கே ஆன்மாவை அர்ப்பணித்துள்ளது.

மகாராஷ்டிராவின் ஷிர்பூரிலுள்ள பழங்குடிகளான பவாரா மக்கள்தான் காரிய உறுதியுடன் ஆங்கிலத்தை ஏடூஇசட் படிக்க உறுதி கொண்ட மாணவர்கள். தாய்மொழியான பவாரியைக் கற்றவர்கள் தற்போது LeapForWord  என்ஜிஓ மூலம் ஆங்கிலத்தை சுவாசமாக கருதி பயிற்சி செய்து வருகிறார்கள். பவாரா இனக்குழுவைச் சேர்ந்த ஷாம்லாலின் கல்வி முயற்சி இது. கிராமசபை தேர்தலில் வென்ற ஷாம்லால் மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து ஆங்கிலமொழியை கற்பிக்கும் செயல்பாட்டை 10 ஆண்டுகளாக செய்து வருகிறார்கள். குஜராத்,கர்நாடகா ஆகிய இடங்களிலும் லீப்ஃபார்வேர்ட் அமைப்பு செயல்பட்டுவருகிறது.


தொகுப்பு: ரோனி ப்ரௌன்
நன்றி: குங்குமம்


பிரபலமான இடுகைகள்