கலாய் பக்கங்கள்!
2018 ஆம்
ஆண்டின் முதல் வாரிசு!
பெங்களூருவிலுள்ள
மருத்துவமனையில் ஜனவரி முதல் தேதி பிறந்த குழந்தைக்கு ்கல்விச்செலவு முழுவதையும் தானே
ஏற்பதாக உறுதிமொழி கூறியுள்ளது மருத்துவமனை நிர்வாகம்.
பெங்களூருவிலுள்ள
ராஜாஜி நகரின் மருத்துவமனையில்தான் மேற்படி சம்பவம் நிகழ்ந்தது. புத்தாண்டு
பிறந்த 5 நிமிடம் பிறந்த குழந்தை என்பதால் இந்த ஸ்பெஷல் பரிசு.
"கோபி-புஷ்பா என்ற தம்பதிக்கு பிறந்த குழந்தைக்கு
5 லட்சரூபாய் வங்கிக்கணக்கில் விரைவில் பணம் டெபாசிட் செய்யப்படவிருக்கிறது"
என்கிறார் மருத்துவனை அதிகாரியான எல்.சுரேஷ்.
புத்தாண்டு அன்று அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு கல்லூரி வரையிலான
செலவு அரசு ஏற்கும் என்பது இங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் தொன்மை வழக்கம்"
என்கிறார் நகர மேயரான சம்பத் ராஜ்.
கொலைகார செல்ஃபீ!
காலையில் எழுந்து
ஃபேஸ் வாஷ் செய்வதற்கு முன்பு ஜென்இசட் யூத்ஸ், முகத்தை அஷ்ட கோணலாக்கி செல்ஃபீ
தாண்டவத்தை தொடங்கிவிடுகிறார்கள். ஆனால் கனடாவில் இந்த வகையறா
செல்ஃபீதான் கொலையாளியை கண்டுபிடிக்க உதவியிருக்கிற விஷயம் தெரியுமா?
கனடாவைச்சேர்ந்த
பிரிட்னி கார்கல் சஸ்காட்டூன் என்ற இடத்தில் இரு ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்டு
கிடந்தார்.
அவரின் அருகில் ஒரே ஒரு பெல்ட் கிடந்தது. ஆனால்
போலீஸ் சின்சியராக என்கொயரி செய்தும், கொலையாளியை பிடிக்க முடியவில்லை. பின் பிரிட்னி ஜாலியாக ஷாப்பிங் ஹோதாவில் எடுத்த செல்ஃபீ போட்டோவைப் பார்த்த
போலீஸ் கொத்தாக கொலையாளியின் காலரை பிடித்துவிட்டனர்.
யார் கொலையாளி? வேறு யார் பிரிட்னியின் தோழி ரோஸ்
ஆன்டெய்ன்தான். பிரிட்னியும், ரோசும் பெல்ட்
பர்சேஸ் செய்து அணிந்து எடுத்த செல்ஃபீயால் ரோசுக்கு 7 ஆண்டு
ஜெயில் ஷ்யூராகி உள்ளது.
நாசா காலண்டரில்
தமிழ்நாடு!
உலகிலுள்ள 193 நாடுகளிலிருந்து
பங்கேற்ற 3 ஆயிரம் பேர்களில் பனிரெண்டு சிறுவர்களுக்கு மட்டுமே
அந்த ஆச்சர்ய சான்ஸ் கிடைத்துள்ளது. அதில் இருவர் நம் தங்கத்தமிழ்நாட்டைச்
சேர்ந்தவர்கள்.
அமெரிக்காவின்
விண்வெளி மையமான நாசா நடத்திய ஓவியப்போட்டியில் வென்றுள்ள சிறுவர்களின் லிஸ்ட்டில்
தமிழ்நாட்டைச் சேர்ந்த இரு சிறுவர்கள் இடம்பிடித்து சாதித்துள்ளனர். இவர்களின் காலண்டர் ஓவியப்படைப்புகள் விரைவில் சர்வதேச
விண்வெளி மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட இருக்கின்றன.
வெற்றிபெற்ற பனிரெண்டு
பேர்களில் தமிழ்நாட்டின் புஷ்பத்தூரிலுள்ள தனியார் பள்ளியைச் சேர்ந்த பி.ஜே.
காவியா, கே. செல்வா ஜித் உண்டு. ஆறாம் வகுப்பு மாணவரான செல்வா, ஆராய்ச்சியாளர் விண்வெளிக்கு என்ன கொண்டுவருவார் என்ற கான்செப்டிலும்,
காவியா, விண்வெயில் இயற்கை தோட்ட உணவு என்ற தலைப்பிலும்
வரைந்த படங்கள்தான் வெற்றிவாகை சூடியுள்ளன.
புலிக்கு மரியாதை!
உத்தரப்பிரதேசத்தின்
காவல்துறையைச் சேர்ந்த டைகர் என்ற லாப்ரடார் இனநாய், அண்மையில் காலமானது.
அதற்கு தேசியக்கொடி போர்த்தி அரசு கௌரவத்துடன் அடக்கம் செய்தது பலருக்கும்
நெகிழ்ச்சி தந்த நிகழ்வு.
டைகர் தனது பதினான்கு
ஆண்டு ஆயுளில்,
150 கேஸ்களை சிங்கிளாக தீர்த்து வைத்த சாதனை ரெக்கார்டுகளை கொண்டது.
மேலும் இச்சாதனைகளால் சூப்பிரிடெண்ட் ஆஃப் போலீஸ் என்ற மரியாதை பெற்ற
முதல் போலீஸ் நாய் டைகர் மட்டுமே. "2003 ஆம் ஆண்டு ஹைதராபாத்திலிருந்து
உ.பிக்கு கொண்டு வரப்பட்டு பயிற்சியளிக்கப்பட்ட டைகர்,
பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியது. அதன் காவல்துறையில்
அதன் பங்களிப்பிற்காக அதன் இறுதிச்சடங்கை குறையின்றி நடத்தி அஞ்சலி செலுத்தினோம்"
என்கிறார் டிஜ்ஜி அலுவலகத்தைச் சேர்ந்த ராகுல் வஸ்தவா.
தொகுப்பு: ரோனி ப்ரௌன்
நன்றி: குங்குமம்