பாதாள அறிவியல் லேப்கள்!
பாதாள அறிவியல்
லேப்கள்!
SNOLAB
SNOLAB (Sudbury Neutrino Observatory) கனடாவின் வேல் கிரெய்க்டன் சுரங்கப்பகுதியில் 1.2 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. சுரங்கத்தில் நிக்கல் கனிமத்தை
தொழிலாளர்கள் அகழ்ந்தெடுக்க, ஆராய்ச்சியாளர்கள் வானியல் ஆராய்ச்சியில்
ஈடுபட்டுள்ளனர். கருந்துளையின் மூலக்கூறுகளைப் பற்றிய பிகாஸோ
சோதனை முக்கியமான ஒன்று.
Large Hadron Collider
செர்ன் அமைப்பின் சகோதர ஆய்வகம் இது. ஸ்விட்சர்லாந்தின் ஜெனீவாவில்
175 மீட்டர் தொலைவில் பூமிக்குள் அமைந்துள்ளது. பால்வெளி எப்படி உருவானது என்பதற்கான ஆராய்ச்சி நடந்துவருகிறது. குறிப்பிட்ட துகள்கள் ஒன்றுடன் ஒன்று மோத வைக்கப்பட்டு பல்வேறு புதிய கோணங்கள்
இங்கு பரீட்சித்து பார்க்கப்பட்டு வருகின்றன. ஆய்வகத்தை சுற்றிலும்
பாறைகள் நிறைந்திருப்பதால், அது டெஸ்ட்களில் உருவாகும் கதிர்வீச்சை
அவை உள்வாங்கிக் கொள்கின்றன.
Soudan Underground Laboratory
அமெரிக்காவின் மின்னசோட்டாவிலுள்ள கைவிடப்பட்ட இரும்பு சுரங்கத்தில்
செயல்பட்ட ஆய்வகம் இது.
பூமிக்கு கீழேயுள்ள இந்த ஆய்வகத்தில் பால்வெளி பற்றியும், நியூட்ரினோ துகள்கள் பற்றிய ஆய்வுகளும் நடைபெற்று வருகின்றன.எலக்ட்ரான்,மியோன்,டாவ் ஆகிய மூன்றுவகையாக
நியூட்ரினோ துகள்கள் கண்டறியப்பட்டுள்ளன. மியோன் நியூட்ரினோ துகள்களை
எலக்ட்ரான் நியூட்ரினோவாக மாற்றுவதை பதிவு செய்த உலகின் முதல் ஆய்வகம் இதுவே.
Gran Sasso National Laboratory
நியூட்ரினோ,காஸ்மிக் கதிர்களை பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ளும் ஆய்வகம் இது. ரோமிலிருந்து 120 கி.மீ தொலைவில்
அமைந்துள்ள லேப் இது. ஒளியை விட வேகமாக செல்லும் சோதனைக்காக இன்றும்
நினைவுகூரப்படும் ஆய்வகம் இது. நியூட்ரினோ துகள்களைப் பற்றிய
சோதனைகளை மேற்கொள்ளும் ஆய்வகம் இது.
Underground
Research Laboratory
கனடா அணுசக்தி நிறுவனத்தின் ஆய்வகம் இது. பூமியில் 440 மீட்டர் ஆழத்தில் உள்ள லேபில் அணுத்துகள்களைப்
பற்றிய ஆய்வு நடைபெறுகிறது.
தொகுப்பு: ஆலன் வான்கா, விக்டர் காமெஸி
நன்றி: முத்தாரம்