அவசிய அறிவியல்!
ஃப்ளூ காய்ச்சல்
அபாயம்!
உலகெங்கும் ஃப்ளூ
காய்ச்சலால்
5 மில்லியன் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதில்
2-6 லட்சம் மரணங்கள் சராசரியாக நிகழ்கின்றன என்கிறது
WHO அறிக்கை. அமெரிக்காவில்
1976-2005(49,000 இறப்புகள்), 2010-2016(56,000 இறப்புகள்) என இறப்பு அதிகரித்துள்ளது அபாயகரமான தகவல்.
சரி, ஃப்ளூ
காய்ச்சலில் இறப்பு எப்படி நேருகிறது? உடல் நோயை குணப்படுத்திக்கொள்ளும்
வேகத்தில் இறப்பு நேருகிறது என்று கூறலாம். "துப்பாக்கி
தோட்டா அல்லது சிலந்தியால் இறப்பதும் ஃப்ளூவால் இறப்பதும் வெவ்வெறு வகையானது"
என்கிறார் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக மருத்துவர் அமேஷ் அடால்ஜா.
கண்,வாய்,மூக்கு வழியாக உடலில்
புகும் இன்ஃப்ளூயன்சா வைரஸ், தனது செல்களை பிரதியெடுக்கிறது.
உடனே எதிரிகளை மோப்பம் பிடித்த நோய் எதிர்ப்பு சக்தி செல்களை தாக்கி
அழிக்க தனது வெள்ளை அணு பட்டாலியனை அனுப்புகிறது. நுரையீரலில்
இந்தபோர் தீவிரமாகும்போது உடலுக்கு அவசியமான செல்களும் அழிந்துவிடுகின்றன. உடலுக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்கும் போது மரணம் நேருகிறது.
2
ரூல்ஸ் புதுசு!
nonaddictive cigarettes
சிகரெட் புகைப்பதால்
அமெரிக்காவில் ஆண்டுதோறும்
4 லட்சத்து எண்பதாயிரம் பேர் இறக்கின்றனர். 2018 ஆம் ஆண்டில் சிகரெட்டிலுள்ள நிகோடினின் அளவை குறைப்பதற்கான முயற்சியை அமெரிக்க
அரசு மேற்கொண்டு வருகிறது.
chemical safety
ட்ரம்ப்பின் கார்ப்பரேட் அனுசரணை, விதிவிலக்குகளை கடந்து பெயின்ட்,பார்மசி பயன்பாடு கொண்ட வயலட் 29 உள்ளிட்ட சூழலுக்கும்
மனிதர்களின் உடல்நலனுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் வேதிப்பொருட்களை விலக்குவது குறித்த
சட்டத்திருத்தங்கள் கையெழுத்தாக அதிக வாய்ப்புகள் உண்டு.
Food label
ஜனவரி 2021 ஆம்
ஆண்டுக்குள் தங்களுடைய பொருட்களில் கலோரி அளவு,சர்க்கரை இயற்கையா,
செயற்கையா என்பதை அச்சிடவேண்டுவது கட்டாயம். இது
உடல்பருமன்,நீரிழிவு ஆகிய பிரச்னைகளை தீர்க்க உதவும்.
carbon emissions rule
2015 ஆம்
ஆண்டு ஒபாமா வகுத்த கார்பன் கொள்கைகளை ட்ரம்ப் அரசு ஃபாலோ செய்ய அதிக வாய்ப்புகள் உள்ளன. நிலக்கரி,எரிவாயு ஆகியவற்றின் மூலம் செயல்பாடும் மின்சாரநிலையங்களின் பங்கே இதில் அதிகம்.
3
புத்தக அறிமுகம்!
ANESTHESIA
The Gift of Oblivion
and the Mystery of Consciousness
by Kate Cole-Adams
400pp Rs. 1,304
Counterpoint
உலகில் மருத்துவ
சிகிச்சைக்காக பயன்படும் அனஸ்தீசியாவுக்கு வயது 150. அறுவைசிகிச்சைகளுக்கு
பயன்படும் அனஸ்தீசியா உடலில் நிகழ்த்துவது என்ன? அனஸ்தீசியாவின்
போது உடல் தன்னிலை இழக்கும்போது உடலின் நிலையை மூளை எப்படி உணர்கிறது? உள்ளிட்ட கேள்விகளுக்கு கேட் கோல் ஆடம்ஸ் விரிவாக பதிலளித்து ஆச்சர்யப்படுத்துகிறார்.
அனஸ்தீசியாவின் பின்னணி மர்மங்களை அறிய உதவும் நூல் இது.
BIG MIND
How Collective
Intelligence Can Change Our World
by Geoff Mulgan
304pp Rs. 1,497
Princeton Univ.
மூளையின் தொகுப்பாக்கப்பட்ட
சிந்தனைகளின் சக்தியை இந்நூலில் விளக்குகிறார். எக்கச்சக்க டெக்னாலஜி விஷயங்களை
கொண்டிருக்கும் வங்கிகள், உளவுத்துறை நிறுவனங்கள் எப்படி தவறாக
விஷயங்களை கணித்து சிக்கலில் மாட்டிக்கொள்கின்றன என்பதையும் ஜியாஃப் முல்கன் விவரிக்கிற
இடம் சுவாரசியம். மனிதர்கள், செயற்கை அறிவு
எப்படி எதிர்கால பிரச்னைகளை ஒன்றிணைந்து தீர்க்க முடியும் என்று சொன்னவிதத்தில் முல்கனின்
பிக் மைண்ட் எழுத்து வியக்க வைக்கிறது.
தொகுப்பு: கா.சி.வின்சென்ட், மிகுல் ட்ரெவரா
நன்றி: முத்தாரம்