ஜில்பான்ஸ் பக்கங்கள்!


Related image


ட்வின்ஸ் கல்யாணம்!

சாதாரண ஆட்களுக்கே பத்து பொருத்தங்கள் பார்த்து கல்யாணம் பண்ணுவது சவாலே சமாளி கதையாகி வருகிறது. அதிலும் ட்வின்ஸாக பிறந்து ஊர் உலகையே பைத்தியம் பிடிக்க வைப்பவர்களுக்கு அதேபோல ட்வின்ஸை கண்டுபிடித்து கல்யாணம் செய்வதென்றால் சும்மாவா?


சீனாவின் ஹெய்லாங்ஜியாங் பகுதியில் டாக்கிங் நகரில் அரிய ட்வின்ஸ் வெட்டிங் நிகழ்வு நடைபெற்றது. ட்வின் சகோதரர்களான, ஸெங் தாசுவாங், ஸெங் ஸியாசுவாங் ஆகியோர் லியாங் ஸிங், லியாங் க்விங் என இரு ட்வின் சகோதரிகளை ஒரே மேடையில் திருமணம் செய்து சாதனை படைத்தனர். பிஸினஸ் கூட்டாளிகளாக இருந்த ட்வின்ஸ் தம்பதிகளின் பெற்றோர், இப்போது பிரிக்கமுடியாத சொந்தபந்தங்கள் ஆகிவிட்டனர். ஆள்மாறாட்ட பிரச்னை கிளம்புமே!
2

டைவர்ஸ் முத்தம்!

முத்தம் கொடுக்க போட்டி என்பது பாரீனுக்கு ஓகே. ஆனால் இந்தியாவில் நடந்தால் நம் கல்ச்சர் மிக்சராக சிதறிப்போகாதா? ஆனால் ஜார்க்கண்டில் எம்எல்ஏவே இதனை நடத்திவைத்தால் ஒப்புக்கொள்வீர்கள்தானே!

ஜார்க்கண்டின் பாகூர் மாவட்டத்திலுள்ள லிட்டிபாராவில் முத்தப்போட்டி நடந்தது. சந்தால் மக்கள் பங்கேற்ற விழாவை சிறப்பித்தவர் முக்தி மோர்ச்சா எம்எல்ஏ சைமன் மராந்தி. பிரிட்டிஷ் படைகளை எதிர்த்து போரிட்ட சித்தோ கனு என்ற பழங்குடி வீரரைப் போற்றும் விழாவில் ஸ்பெஷல் அம்சம் இது. ஸ்பெஷல் கிஸ் போட்டியில் 20 ஜோடிகள் பங்கேற்று டஜன் கிஸ்களை கொடுத்து
மகிழ்ந்தனர். காவிக்கட்சி கலாசாரம் போச்சு எனக்கூற, "கிஸ் அடித்தால் டைவர்ஸ் குறையும் என்பது அம்மக்களின் நம்பிக்கை" என்று சொல்லி
எஸ்கேப்பாகிவிட்டார் எம்எல்ஏ மராந்தி. காதல் எம்எல்ஏ!

3
அர்னால்டு கைது!-ரோனி

வீட்டில் செல்ல பெட்ஸ்களை வளர்க்க யாருக்குக்குத்தான் ஆசை இல்லை. நாய்,பூனை,பன்றி,கிளி,ஆடு என இன்ஃபினிட்டியாக  நீளும் இந்த லிஸ்ட் முடியவே முடியாது. ஆனால் அதிலும் எக்ஸ்ட்ரீம் விலங்குகளை வளர்த்தால் எப்படியிருக்கும்?

அமெரிக்காவின் நியூயார்க்கிலுள்ள சஃபோல்க் கவுண்டி பகுதியில் விலங்குகள் சங்கத்திற்கு திடீர் போன். செய்தியைக் கேட்டு அட்ரஸ் கண்டுபிடித்து காலிங்பெல் அடித்தால், அதிர்ச்சி. அந்த வீட்டில் 4 அடி முதலை ஜீவகாருண்டய டீமை ஆசையாக வெல்கம் செய்ய வந்தால் பீதியாகாதா? அமெரிக்காவில் முதலை வளர்க்க முறையாக பர்மிஷன் வாங்கியிருப்பது அவசியம். முதலை பெட் குடும்பத்திடம் உரிமம் இல்லாததால் குடும்பத்தினர் மீது கேஸ் பதிவு செய்யப்பட்டு,  அர்னால்ட் ஸ்வார்ஸ்நெகர் முதலை உடனடியாக கைது செய்யப்பட்டு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது

4
டிராக்டரில் எம்.பி!-ரோனி

டிவிஎஸ் 50 யில் செல்பவர், எலக்‌ஷனில் ஜெயித்தவுடன், டூவீலரை கடாசிவிட்டு ஆடி காரில் ஊர்வலம் வருவது இந்திய மரபு. ஆனால் டிராக்டரில் பார்லிமெண்ட் சென்றால் எப்படி?

நேஷனல் லோக் தல்(INLD) கட்சியின் எம்.பி.  துஷ்யந்த் சவுதாலாதான் அந்த டிராக்டர் மந்திரி. பச்சை நிற டிராக்டரில் தன் அணுக்க தொண்டர்கள் இருவர் சகிதமாக டிராவல் செய்தவர், நேராக வந்திறங்கியது நாடாளுமன்ற வளாகத்தில். பலரும் ஷாக்கானாலும் செக்யூரிட்டியான இடத்தில் துஷ்யந்த் டிராக்டர் ஓட்டி காமெடி செய்ததற்கு விரைவில் கேஸ் பதிவாக இருக்கிறது. வண்டியை உள்ளே விட செக்யூரிட்டி அதிகாரிகள் பர்மிஷன் தராதபோதும், அட்வான்ஸ் அனுமதி பெற்றுவிட்டேன் என காரியம் சாதித்திருக்கிறார் துஷ்யந்த் சவுதாலா. கோக்குமாக்கு எம்.பி!

 5
'அது'க்கும் ஆதார் வேணும்!-ரோனி

பேங்குகள் மற்று போன் கம்பெனிகள் மட்டுமல்ல, அந்த மேட்டரை செய்வதற்கும் ஆதார் அவசியம் என கேட்டதுதான் இந்த வார பாஸ்பரஸ் பரபரா.

டெல்லியைச்சேர்ந்த பஞ்ச பாண்டவ யூத் டீம் ஒன்று, பேச்சுலர் பார்ட்டிக்கு கோவாவுக்கு விசிட் அடித்தது. மதுவுடன் மஜா செய்தவர்கள் அடுத்ததாக மாதுவை இணையத்தில் வலைவீசி தேடியிருக்கிறார்கள். அதற்கான அங்கிள் ஏஜென்சியை தொடர்பு கொண்டு ஐந்து பெண்களை டிக் அடித்தனர். ஐவரின் போன் நம்பர்களை செக் செய்த ஏஜெண்ட், அறை சாவியின் போட்டோ ப்ளீஸ் என்றார். அதை அனுப்பியவுடன் ஜிபிஎஸ் முறையில் போலீஸ் ரெய்டு விஷயங்களை அலசிய அங்கிள்ஸ் குழு, இறுதியில் யூத் டீமின் ஆதார் கார்டுகளை கேட்டதுதான் உச்சபட்ச கொடுமை. "ஐந்து பெண்களும் ரெய்டில் மாட்டினால் தொழில் எப்படி செய்வது? டூரிஸ்ட்டுகளை ஸ்பெஷலாக பிளான் செய்து ஏமாற்றுவதுதான் அங்கிள் ஏஜென்சிகளின் பிளான்.நம்பாதீர்கள்" என எச்சரிக்கிறார் கோவா வட்டார போலீஸ் அதிகாரி ஓருவர். ஆதார் அநியாயம்!
6
ஆம்புலன்சா? ஆடி காரா?-ரோனி

ஆடி காரே வைத்திருந்தாலும் மூக்குவரை புரையயேறும்படி குடித்தால் என்னாகும் என்பதற்கு சென்னை பிசினஸ் புள்ளியே உதாரணம்.

சென்னையைச் சேர்ந்த பிசினஸ் பெரும்புள்ளி, வசீகர குடிகாரர். காயம்பட்ட நண்பரை ஹாஸ்பிடலில் அட்மிட் செய்தவர், துயரம் தீர பாரில் ஒதுங்கினார். காஸ்ட்லி மதுரகங்களை ஓரு கை பார்த்தவருக்கு மூக்குவரை போதையேறியது. தட்டுத்தடுமாறி வெளியே வந்தவர், ஹாஸ்பிடல் முன்னே பார்க் செய்த தன் ஆடிகாரென நினைத்து எமர்ஜென்சி ஆம்புலன்சில் சடக்கென ஏறி கியர் போட்டு கிளம்பி வீட்டுக்கு வந்துவிட்டார். ஆம்புலன்சை ஆட்டையை போட்டுவிட்டார்களே! என பதறிய ஹாஸ்பிடல் நிர்வாகம், ஆயிரம் விளக்கு போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்துவிட்டது. போதை தெளிந்த ஆடி ஓனர் ஆம்புலன்சை மன்னிப்பு கேட்டு திருப்பிக் கொடுத்துவிட்டாராம். ஆட்டம் ஓவரா இருக்கே!
தொகுப்பு - ரோனி ப்ரௌன்
நன்றி: குங்குமம்