அறிவியல் பழகு!




Image result for missile



உலகம் தட்டையா?

2009 ஆம் ஆண்டு தொடங்கிய ஃபிளாட் எர்த் சொசைட்டி அமைப்பினர் உலகம் தட்டை என வாதிட்டு வருகின்றனர். சாட்டிலைட் படங்கள் உலகை உருண்டையாக காட்டினாலும் இருநூறு அமெரிக்க, இங்கிலாந்து நபர்களைக் கொண்ட டீம் இதனை தனது இணையதளம்,ட்விட்டர் என பல்வேறு இடங்களிலும் தீர்க்கமாக மறுக்கிறது.

ஆர்க்டிக்கை மையமாக கொண்டும்,  150 அடி பனிச்சுவர் போல அன்டார்டிகா பகுதி உலகம் அமைந்துள்ளதுமேலும் புவிஈர்ப்பு விசை என்பதையும் பிளாட் எர்த் சொசைட்டியினர் மறுக்கின்றனர். மேலும் உலகம் உருண்டை என்று சொல்லும் அரசு ஏஜன்சிகள் அவர்களின் பொருளாதார ஆதாயத்திற்காக அதனை சொல்கிறார்கள். விமானங்கள் பூமியின் டிஸ்க் கீழே செல்லுகின்றன என்று கூறி ஷாக் கொடுக்கிறார்கள். அறிவியலுக்கு மாற்றான இந்த முறை Zetetic Method(19 ஆம் நூற்றாண்டு) எனலாம்.


 2
சுடச்சுட காதல்!

ஆண்களுக்குத்தான் காதல் வருமா? பெண்களுக்கு கிடையாதா? சுடும் எண்ணெய் மீது ஆணையாக மதுரைக்காரப் பெண் நிரூபித்துள்ளார். இப்படித்தான்.

மதுரைச்சேர்ந்த பரமேஸ்வரன் -சசிகலா தம்பதி முதலில் சந்தோஷ தாம்பத்தியம்தான் செய்தார்கள். ஆனால் பரமேஸ்வரனுக்கு விராடிபட்டு ஏரியாவில் இன்னொரு பெண்ணுடன் மோகம் பற்றியவுடன் மனைவி சசிகலாவை ஓரம்கட்டி, தன் ஜாகையையும்  ஆசைநாயகி இடத்திற்கே மாற்றிக்கொண்டார்டென்ஷனான சசிகலா, கணவரிடம் பிரியமாக பேசி வீட்டுக்கு கூட்டி வந்து செய்ததுதான் விபரீதம். நன்கு எண்ணெய்யை காய்ச்சி குறட்டை விட்டுத்தூங்கிக் கொண்டிருந்த கணவரின் அந்த இடத்தில் பளிச்சென ஊற்றிவிட்டார்தோல் பொசுங்கிய கணவர் தற்போது ராஜாஜி ஹாஸ்பிடலில் பெருமாள் போஸில் ட்ரீட்மெண்ட் எடுத்துவருகிறார். நீங்க சத்தியமாக மதுரைப்பொண்ணேதான் அம்மணி!
3

அண்டார்டிகா உப்புநீர் குளம்!

அண்டார்டிகாவின் பாலைவனப் பகுதியில் -50 டிகிரி செல்சியுசில் உப்புநீர் குளம் இருப்பது ஆராய்ச்சியாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது. 1961 ஆம் ஆ்ண்டே கண்டுபிடிக்கப்பட்டாலும் இதிலுள்ள அபரிமிதமான உப்பு பற்றி ஆராய்ச்சியாளர்களுக்கு இன்றும் துப்பு கிடைக்கவில்லை.

 டான் ஜூவான் குளம் உள்ள ரைட் பள்ளத்தாக்கு பகுதி செவ்வாய் கோளின் சூழலைப்போலவே சுற்றிலும் பனிக்கட்டிகளாக இருந்தாலும் குளத்தின் நீர் உறையாது உள்ளது. இதில் 95% கால்சியம் குளோரைடு உள்ளது. நீரின் எடையில் 45% உப்பு மட்டுமே. அதிகளவு ஆவியாதல் நிகழ்வதால் ஏற்படும் விளைவு இது. பனிப்பரப்பிலுள்ள கனிமங்கள் குளத்தில் நீரில் ஏற்படுத்தும் விளைவாக கால்சியம் குளோரைடு உருவாகிறது. இதற்கு குளத்திலுள்ள நீராதாரமும் முக்கிய காரணம் என்பது ஆராய்ச்சியாளர் டோனரின் கருத்து.  

4

கப்பல்களை காப்பாற்றி ஓவியம்!

முதலாம் உலகப்போரில் கப்பல்களைப் பாதுகாக்க மோனோகுரோம் வடிவங்களை கலைஞர்கள் கப்பல்களில் வரைந்தனர். ஆபத்தான ஜெர்மனியின் யூ படகுகளின் தாக்குதல்களிலிருந்து தப்பிக்கத்தான் இந்த பிரம்ம பிரயத்தனம். பாப்லோ பிகாஸோ க்யூப் முறையிலான இந்த டிசைன்களை முன்பே தன் ஓவியங்களில் உருவாக்கியுள்ளார்.

"பார்க்க இவை ஓவியம் போலிருந்தால் இவை பொறியியல் நுட்பத்துடன் உருவாக்கப்பட்டவை" தனது சான்டியாகோ விமானநிலை ஓவியப்பணியை விவரிக்கிறார் ஓவியரான ஹாஃபெர்மாஸ். Dazzle என அழைக்கப்படும் இந்த ஓவியத்தின் பூர்வீகம் இங்கிலாந்து. ராயல் நேவி, தாக்குதலை சமாளிக்க பெயின்டரான நார்மன் வில்கின்சனிடம் பணியை ஒப்படைத்தது. அவர் கப்பலை எளிதில் கண்டுபிடிக்க முடியாத செக்போர்டு டிசைனை கப்பலில் கறுப்பு வெள்ளையில் அமைத்தார். 1917 ஆம் ஆண்டு போரில் நுழைந்த அமெரிக்கா தனது 2 ஆயிரம் கப்பல்களுக்கும் வில்கின்சன் ஆலோசனை தர வண்ணம் தீட்டப்பட்டது. இங்கிலாந்து கப்பல்களின் 3 ஆயிரம் கப்பல்களுக்கு இப்பணியை வில்கின்சன் தனது குழுவினரோடு சேர்ந்து செய்து கப்பல்களின் இழப்பை குறைத்தார்
5

ஏவுகணைப் போட்டி!

மிஸைல் என்பது ராக்கெட்டுடன் இணைக்கப்பட்ட வெடிகுண்டு. வெடிகுண்டை உந்தித்தள்ளுவதே புரோபல்சன் சிஸ்டம்(ராக்கெட்) வேலை. ராக்கெட்டை மிகச்சரியாக வழிகாட்டி ஓரிடத்தை தாக்க உதவினால் அதனை மிஸைல் எனலாம். தரைதளம்(SSM),காற்று(ASM) உள்ளிட்ட வழிகளில் ஏவுகணைகள் ஏவப்படுகின்றன. இதில் ஏவுகணை செல்லும் தூரம், செலுத்தப்படும் விதம் ஆகியவற்றை பொறுத்து ஏவுகணைகளின் பெயர் மாறுபடும்

போர்விமானங்களை விட அணுஆயுதங்களை தாங்கியபடி வேகமாக பாயும் திறன் கொண்ட ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

உலகிலேயே கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏராளமான ஏவுகணைகளை(ICBM) ரஷ்யா,அமெரிக்கா,சீனா ஆகிய நாடுகள் தயாரித்து வைத்துள்ளன.

இதில் ரஷ்யாவின் RS-20V ஏவுகணை உலகின் அதிசக்தி வாய்ந்த அதிக தூரம் செல்லும் திறன் கொண்டது. செல்லும் தூரம் 10,200கி.மீ - 16,000 கி.மீ.

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை(Balistic) முன்பே இலக்கு தீர்மானித்து ஏவப்படுவதால், ஏவியபின் இதனை தடுக்க முடியாது. ராக்கெட்டின் சக்தி தீர்ந்தபின் அந்த திசைவேகத்தில் இலக்கை சிதறடிக்கும் திறன் கொண்டது. க்ரூஸ் ஏவுகணை சிக்கன செலவில் தயாரித்து ஏவப்படுகிறது. இதில் இலக்கை வழிகாட்ட INS அமைப்பு பயன்படுகிறது. இந்தியாவின் அக்னி,பிரித்வி ஆகியவை பாலிஸ்டிக் வகையும், பிரம்மோஸ் க்ரூஸ் வகையிலும் சேரும். உலகில் 31 நாடுகள் பாலிஸ்டிக் வகை ஏவுகணைகளை வைத்துள்ளன. இதில் சீனா முதலிடம் வகிக்கிறது.

ரஷ்யா,சீனா,அமெரிக்கா,இங்கிலாந்து, பிரான்ஸ்,இஸ்ரேல் ஆகிய நாடுகளே கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் ஏவுகணைகளை வைத்துள்ளன. தற்போது வடகொரியாவும் இந்த லிஸ்டில் தனது Hwasong-15 மூலம் இடம் பிடித்துவிட்டது. இந்தியா 5 ஆயிரம் கி.மீ சென்று தாக்கும் அக்னி-4 மூலம் இந்த லிஸ்டில் இடம்பெற்றுள்ளது.

ஏவுகணைகளின் வகைகள் SRBM- ஆயிரம் கி.மீ அதிகம், MRBM - 1000-3000 கி.மீ. IRBM-3000-5500 கி.மீ, ICBM - 5,500கி.மீ அதிகம்
  

 6
போதையின் மீது போர்!

பிலிப்பைன்ஸில் கடந்த பதினெட்டு மாதங்களில் போதைப்பொருளை ஒழிக்கும் முயற்சியில் டஜன் கணக்கிலான இளைஞர்களை, சிறுவர்களை காவல்துறை கொன்றுள்ளதாக ஆம்னஸ்டி அறிக்கை தகவல் கூறுகிறது. போதைப்பொருளை ஒழிக்கும் நடவடிக்கை காரணமாக 60 இளைஞர்கள் அண்மையில் போலீஸ் சுட்டுக்கொன்றுள்ளது. இதுதொடர்பான உலகளவிலாள கிரிமினல் கோர்ட்டில் வழக்கு பதிய ஆம்னஸ்டி திட்டமிட்டுள்ளது.

இதில் பதினேழு வயதான கியான் டெலோஸ் சன்தோஷ் காவல்துறையால் கொல்லப்படும் சிசிடிவி வீடியோ நாடு முழுவதும் கடுமையாக பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அரசு இதுவரை அவரைக்கொன்ற போலீசாரை கைது செய்யவில்லை. ஜூன் 2016 ஆம் ஆண்டிலிருந்து டுடெர்டே தனது போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கை மூலம் 3,900 கிரிமினல் நபர்களையும், அவர்களோடு தொடர்புள்ளதாக கூறி 2 ஆயிரம் நபர்களையும் கொன்றுள்ளார். மக்களின் கண்டனத்தால் கடந்த அக்டோபரிலிருந்து காவல்துறையின் போதை தடுப்பு பணி PDEA அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சிறுவர்களை காவல்துறை கடுமையாக சித்திரவதைப்படுத்தியுள்ளது வெளியான புகைப்படங்களிலிருந்தே அறிய முடியும் என்கிறார் ஆம்னஸ்டி இயக்குநரான ஜேம்ஸ் கோம்ஸ்.

நன்றி: குங்குமம், முத்தாரம்
தொகுப்பு: முகுந்தன் குருப்பு, ஜாய் மேத்யூஸ்