நேர்காணல்: பரிணாம வளர்ச்சியை கணிக்க முடியுமா?
முத்தாரம் நேர்காணல்
பரிணாம வளர்ச்சியை கணிக்க முடியுமா?
நேர்காணல்: ஜொனாதன் லோசஸ், உயிரியலாளர்.
தமிழில்:ச.அன்பரசு
அமெரிக்காவின் புகழ்பெற்ற ஆராய்ச்சியாளரான ஜொனாதன், பரிணாம வளர்ச்சியை எளிதாக கணிக்க முடியும் என்பதோடு, டைனோசர்களின் அழிவு, வேற்றுகிரகவாசிகள் ஆகியவற்றைப் பற்றி
தீர்க்கமாக உண்மைகளை ஆராய்ந்து வருபவர்.
பரிணாம வளர்ச்சி பற்றிய ஆராய்ச்சியை ஏன் கையிலெடுத்தீர்கள்?
வொண்டர்ஃபுல் லைஃப் நூலில் ஸ்டீபன்ஜே கவுல்ட், பரிணாம வளர்ச்சி என்பது விதியல்ல. அதனை நாம் மாற்றமுடியும்
என்பதை தர்க்கப்பூர்வமாகவும், சோதனை வழியாகவும் உறுதியாக குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 30 ஆண்டுகளாக பரிணாம வளர்ச்சி குறித்த பல்வேறு
செய்திகளை அறிந்துள்ளோம். இன்று ஸ்டீபன் கூறிய கருத்துகள் சரியா,தவறா என்ற நிலைக்கு வந்துள்ளோம். பரிணாம வளர்ச்சி பற்றிய
சில கருத்துக்கள் அடாவடித்தனமானவை. ஸ்டீபன் கூறிய கருத்துகளை
இன்று லேபிலும், களத்திலும் சோதிக்க முடியும். இயற்கையின் தேர்வு என்பது இன்று பொதுவான ஒன்று. லேபில்
செய்யும் பரிணாம வளர்ச்சி சோதனைகள் இயற்கையில் நிகழ்வதை வேகமாக நிகழும். எனவே இயற்கை சூழலில் இச்சோதனையை நடத்தினால் உண்மையை அறியலாம்.
பூமியில் மட்டும் பரிணாமவளர்ச்சி குறிப்பிட்ட காலத்தை
எடுத்துக்கொண்டு நிகழ்வது எப்படி?
என்னால் இந்தக்கேள்விக்கு பதிலளிக்க முடியாது.பால்வெளியில் பூமியை ஒத்த கோள்களை இன்று தேடி வருகிறோம். அப்படி கோள் ஒன்று கிடைத்தால் அங்கு வாழ்க்கையை தொடங்க முடியும் என்ற நம்பிக்கை
மக்களுக்கு உருவாகியிருக்கிறது. உண்மையில் அப்படியொரு கோளை நாம்
கண்டுபிடிக்காததற்கு காரணம், அதனை எப்படி கண்டுடறிவது என்று தெரியாததுதான்.
பால்வெளியில் ஏதாவதொரு கோளில் பரிணாமவளர்ச்சி நிகழ்கிறது
என்றால் உங்கள் ஆராய்ச்சி என்னவாக இருக்கும்?
பால்வெளியில் பல மில்லியன் நிலவுகள்,கோள்கள் உண்டு. அப்படியொரு கோள் கண்டறியப்பட்டால் அது
தற்போது நாம் வாழும் பூமியைப் போல இருக்காது என்பது உறுதி. என்னுடைய
யூகப்படி பூமியில் நாம் பார்க்கும் தாவரங்கள், விலங்குகள் அங்கு
இருக்காது.
வேற்றுகிரக உயிரிகளின் புத்திசாலித்தனம் பற்றி உங்கள்
கருத்து?
நமது அனுபவத்தை பொறுத்து அறிவு மேம்படுகிறது. நம் சமகாலத்திலுள்ள ஆக்டோபஸ், உயிரியல்ரீதியாக வேறுபட்டிருந்தாலும்
அதன் கூர்மையான புத்திசாலித்தனம் நிரூபணமாகி உள்ளது. ஆனால் அவை
மனிதர்களின் ஐக்யூ அளவைத் தொட்டுவிடவில்லைதான். ஆனால் அவற்றின்
மூளையின் அமைப்பும் திறனும் கூட நம்மைவிட வேறுபட்டவை. எனவே வேற்றுகிரகவாசிகளின்
அறிவுத்திறனுக்கு உருவமோ,மூளையின் அளவோ தடையாக இருக்காது.
உங்கள் ஆராய்ச்சியின் அடுத்தகட்டம்?
பரிணாம வளர்ச்சியை நாம் நம் கண்களால் பார்க்க முடியும்
என்பதே பெரும் சாதனை. இ கோலி பாக்டீரியாவின் பரிணாம வளர்ச்சி
30 ஆண்டுகளாக நடந்து வருகிறது. பரிணாமவளர்ச்சி
எப்படி மீண்டும் மீண்டும் தொடர்ந்து நடைபெறுகிறது என்பதை நாம் இந்த ஆராய்ச்சியில் பார்க்க
முடியும். பகாமாவைச் சேர்ந்த பல்லிகள், நெப்ராஸ்காவைச் சேர்ந்த எலிகள் ஆகியவற்றிலும் நடைபெற்றுவருகிறது. இயற்கையில் பரிணாமவளர்ச்சி எப்படி தொடர்ச்சியாக நடைபெறுகிறது என்ற கேள்விக்கான
பதில், இந்த ஆராய்ச்சியின் முடிவில்தான் இருக்கிறது.
நன்றி:Ben Sykes, sciencefocus.com
தொகுப்பு: விக்கி கௌசல், எலிசா ஜார்ஜ்
வெளியீட்டு அனுசரசனை: முத்தாரம்