வின்டேஜ் பெண்கள்!
முன்பு பெண்கள்
செய்யக்கூடாதவை!
பாஸ்போர்ட் பரிதாபங்கள்!
1920களில்
பாஸ்போர்ட் அப்ளை செய்தால் உடனே கிடைத்துவிடும் ஆண்களுக்கு;பெண்களுக்கல்ல.
பெண்ணின் கணவருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டிருந்தால் அவரின் மனைவிக்கு
பாஸ்போர்ட் வைத்திருக்க அனுமதி கிடையாது. ஜாயின்ட்டாக பாஸ்போர்ட்
வைத்திருக்கலாம் அவ்வளவுதான். தனி பாஸ்போர்ட் வேண்டுமென விரும்பினால்
கணவரின் முதல் பெயரில் அப்ளை செய்து வாங்கும் வசதி மட்டுமே அன்று உண்டு.மணமாகாத கன்னிகளுக்கு பாஸ்போர்ட் உண்டு.
ட்ரெஸ் கட்டுப்பாடு!
அமெரிக்காவின்
வர்ஜீனியா மாகாண விதிப்படி, நைட் கவுன்களை கழுத்திலிருந்து மூன்று இன்ச் வரை கவர் செய்திருக்கவேண்டும்
என்பது விதி. இதைப்போல முழங்கால் வரை கவுன், ஸ்கர்டின் கட்டாய அளவு ஆகியவை கடைபிடிக்கப்பட்டன. கலிஃபோர்னியா,கார்மல் ஆகிய நகரங்களில் இரண்டு இன்ச்சுக்கும் அதிகமாக இருக்க கூடாது என்ற
விதியும் இருந்தது.
டாக்சி ட்ரைவர்கள்,வழக்குரைஞர்கள்
போன்ற வேலைகள் மறுப்பு(மிச்சிகன்),பிறநாட்டினரை
மணம் செய்தால் குடியுரிமை இழப்பு, நைட்ஷிப்ட் அனுமதி மறுப்பு,தனி ரெஸ்ட்ரூம்கள் இல்லாத சிக்கல்கள் முன்பு நிலவின.
நன்றி: முத்தாரம்