புத்தக அறிமுகம்!




Image result for book



புக் பாய்ன்ட்!

THE ALLIES STRIKE BACK, 1941-1943
The War in the West
by James Holland
Page count: 720pp
Publisher: Atlantic Monthly

இரண்டாம் உலகப்போர் பற்றிய ஆழமான அலசல்களையும் தகவல்களையும் அளிக்கும் நூல் இது. இங்கிலாந்து தன் கண்ணோட்டத்தில் இரண்டாம் உலகப்போரை எப்படி அணுகியது என்ற சித்திரத்தை அளிக்கிறது. பெரியளவு படைகள் இல்லாமல் சிறப்பான ஐடியாக்களை மட்டுமே வைத்து ஜெர்மனி உண்டாக்கிய பேரழிவுகள்,அச்சமயத்தில் இங்கிலாந்து, அமெரிக்கா நாடுகளின் அரசியல் சூழல் என அனைத்தையும் அழகான வரைபடங்களோடு விவரித்திருக்கிறார் ஆசிரியர் ஹாலண்ட்.

THE FRACKING DEBATE
The Risks, Benefits, and Uncertainties of the Shale Revolution
by Daniel Raimi
256pp
Columbia Univ


எண்ணெய் மற்றும் எரிவாயு தேவைக்காக நிலம் துளையிடப்படுவது இயற்கை சூழலை எப்படி அழிக்கிறது என வெளிச்சமிட்டு காட்டும் நூல் இது. மிச்சிகன் பல்கலையைச் சேர்ந்த டேனியல், ஹைட்ராலிக் முறையில் எண்ணெய்க்காக அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசுகள் பூமியை துளையிட்டு உறிஞ்சுவதை பற்றிய கவனத்தை தன் முதல் நூலில் கையாண்டுள்ளது சிறப்பானது. இத்தொழிற்சாலை அருகே வசிக்கும் மக்களிடம் பேட்டி கண்டு அங்கு அடிக்கடி ஏற்படும் நிலநடுக்கம் சூழல் மாறுபாடு விஷயங்களையும் பதிவு செய்துள்ளார் ஆசிரியர் டேனியன் ரைமி.

நூல் புதிது!

AMERICA INVADED
A State by State Guide to Fighting on American Soil
414pp,History Invasions Press

 அமெரிக்காவைச் சேர்ந்த மாநிலங்கள் எப்படி ஒன்றிணைந்து முழுமையான நாடாக மாறின என்பதைச் சொல்லும் படைப்பு இது. 2015 ஆம் ஆண்டு வெளியான நூலின் தொடர்ச்சி இது. அமெரிக்காவில் வாழ்வதற்காக உள்நுழைந்த பல்வேறு நாடுகளைப் பற்றிய தகவல்களை பரப்பும் நூல் இது. அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு அடுத்து பிற நாட்டினரால் அதிகம் ஊடுருவப்படும் நாடு எது என்ற கேள்வியையும் கேட்டிருக்கிறார் ஆசிரியர் கெல்லி மற்றும் ஸ்டூவர்ட்.


WE ARE SYRIANS
Three Generations. Three Dissidents
edited by Adam Braver & Abby Deveuve
 200pp,UNO Press
ஐம்பது ஆண்டுகளாக சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்களைக் கொண்ட நூல் இது. மூன்று தலைமுறையாக நடந்து வரும் போரின் அவலங்களை துல்லிய துலக்கமாக பேசும் நூலில் சந்திக்கும் நபர்கள் அனைவரும் அதிர்ச்சி அனுபவங்களை நினைவுகளின் சேமிப்பாக கொண்டிருக்கிறார்கள். சிரியா போரின் விளைவுகளை அறிந்தும் இதனை வெறுமனே வேடிக்கை பார்க்கும் உலக நாடுகளையும் இந்நூல் கடுமையாக விமர்சிக்கிறது.

தொகுப்பு: மகராஜன், பாலமுரளி
நன்றி: முத்தாரம்