செம போதை ஆகாது! -ரோனி



Image result for alcohol





செம போதை ஆகாது!

செம போதை கூடாது என என்பதல்ல. அப்படி ஆனால் பார்ட்டி எவ்வளவு பதட்டமான ஸ்பாட்டாக மாறும் என்பதற்கு அமெரிக்கச் சம்பவமே ரியல் உதாரணம்.


அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரைச்சேர்ந்த புகழ்பெற்ற வக்கீலான ஆன்டனி பஸ்பீ, தனது வீட்டில் நடைபெற்ற புத்தாண்டு விருந்துக்கு லிண்டி லூ லேமேன் என்ற கோர்ட் நிருபரை அன்போடு அழைத்தார். அவரும் ஆசையாக கண்காட்சிக்கு வந்தவர், ஒவியங்களைவிட ஒயின் ரகங்களை லிட்டர் கணக்கில் உள்ளிறக்கினார். பின் என்ன? ரவுசு ஸ்டார்ட். சொடக்கு போட்டு தகராறு செய்தவர், ஆன்டனியின் வீட்டிலிருந்த ஓவியங்களின் மீது ஒயினை வீசியதோடு, சிற்பங்களை தூக்கியெறிந்து உடைத்த வகையில் ஆன்டனிக்கு 1.5மில்லியன் டாலர்கள் நஷ்டம்.  லேமேன் மீது வழக்கு தொடரப்பட்டு தற்போது ஜாமீனில் ரிலீஸாகி சுற்றிவருகிறார். ஒயின் லூட்டி!

செல்லோகிராஃபிட்டி மேஜிக்!

கலைகளிலும் புத்தம் புதிதாக உருவாக்கினால்தானே உலகில் நம்மை ஸ்பெஷல் மனிதராக அடையாளப்படுத்தி வீராப்பு காட்டமுடியும். அந்தவகையில் ரஷ்யாவைச் சேர்ந்த எவ்கெனி செஸ் சமர்த்தான ஐக்யூ மனிதர்தான்.

பிளாஸ்டிக் செல்லோபேனில் உருவங்களை வரைந்து இரு மரங்களுக்கிடையில் கட்டி உலகை ஈர்க்க முடியுமா? ரஷ்யாவின் மாஸ்கோவைச் சேர்ந்த கலைஞர் செஸ் செல்லோகிராஃபிட்டி என்ற பெயரில் விலங்குகளை வரைந்து தள்ளி இணையத்தில்  விசேஷ விஐபி ஆகியுள்ளார். டைனோசர், துருவக்கரடி என செஸ்ஸின் படைப்புகள் சூப்பர் ரியலிஸ்டிக்காக இருப்பதால் அதைப் பார்த்து மக்கள் பலருக்கும் ஷாக்காகி நடப்பது தினசரி காட்சியாகிவிட்டது. சக்கைபோடு போடு ராஜா! 

ஐந்து ரூபாய்க்கு சோறு!

புதிய இந்தியா கனவிலும் சோறு என்பது இந்தியாவில் பலருக்கும் வாழ்நாள் லட்சியமாக இருக்கிறது. அனலாக கொதிக்கும் ஏழைகளின் வயிற்றை அன்ன தாதாவாக மாறி சாந்தி செய்கிறார் நொய்டாவைச் சேர்ந்த அனூப் கன்னா.

தினசரி ஐநூறு பேருக்கு "Dadi Ki Rasoi' என்ற பெயரில் ஐந்து ரூபாய்க்கு அன்னமிடுகிறார் இந்த அதிசய மனிதர். சாப்பாடு,பருப்புக்குழம்பு,ரொட்டி, காய்கறிகள் என வெரைட்டி விருந்தை கடந்த இரண்டு ஆண்டுகளாக 'மக்களுக்காகவே நான்' என செய்துவருகிறார் அனூப் கன்னா. "என் அப்பா சுதந்திரப்போராட்ட தியாகி. காந்தி,ஜின்னா ஆகியோருடன் சமூக செயல்பாடுகளில் அவர் காட்டிய ஈடுபாடு என்னை இந்த ஹோட்டலை தொடங்க வைத்தது.மக்கள் பிச்சைக்காரர்களல்ல என்பதால் ஐந்து ரூபாய் கட்டணம்" என்கிறார் அனூப். ரூ.30 ஆயிரத்தில் தொடங்கிய ஹோட்டல் காலை 10-மதியம் 2 மணி வரை செயல்படுகிறது. துணிகள்,புத்தகங்கள்,ஷூக்கள் ஆகியவற்றை வழங்கும் சத்பவனா ஸ்டோரையும் இவர் நடத்தி வருகிறார். மக்கள் மனுஷர்
  
 கிராமத்துக்கு பர்த்டே!

இதுவும் ஆதார் அட்ராசிட்டிகளில் ஒன்றுதான். வீட்டிலுள்ள ஜிம்மியையும் ஆதாரில் இணைக்கவேண்டுமா என பலருக்கும் டவுட் வரும் நேரத்தில் இந்த செய்தி. மத்திய பிரதேச கிராமத்தில் நடந்த குளறுபடி உலகையே சிரிக்க வைத்துள்ளது.

.பியிலுள்ள பல்சோடா,தேவ்புரா,படா நகர்,ஜெட்புரியா ஆகிய கிராமங்களில் ஆதார் விவரங்களை கிடுகிடு வேகத்தில் பதிவு செய்து மக்களுக்கு ஆதாரை அஞ்சலில் அனுப்பிவைத்தனர் அதிகாரிகள். பிரித்து பார்த்தால், கிராமத்தில் பலருக்கும் ஒரே பர்த்டே. ஏறத்தாழ 5 ஆயிரம் பேருக்கு(80%) பிறந்த நாள் ஜனவரி 1 என ஆதாரபூர்வமாக ஆதாரில் பதிவாகிவிட்டது. பிறந்தநாள் இடத்தை நிரப்பாதபோது, சாப்ட்வேர் தானாகவே அதனை ஜன.1 என நிரப்பிக்கொள்ளும் டிசைனால் ஏற்பட்ட குளறுபடி இது. வரும் ஆண்டு முதல் ஆதாரில் இணைக்காத சர்டிஃபிகேட்கள் எதுவும் செல்லுபடியாகாது என்ற நிலையில் இந்த தொழில்நுட்ப கோளாறு, மக்களுக்கு கிடைக்கும் மானிய உதவிகளுக்கும் வேட்டு வைத்துள்ளது.

தொகுப்பு: ரோனி ப்ரௌன்
நன்றி: குங்குமம்

பிரபலமான இடுகைகள்