ஜாலிபிட்ஸ்!
பிட்ஸ்!
கோலாவுக்கு தண்ணீர்!
ஆஸ்திரேலியாவில்
அடிலெய்டு பகுதியில் சைக்கிள் டூர் சென்றார் மேட் சல்லி. எதேச்சையாக
காட்டுப்பாதையை கவனித்தபோது, அங்கு சிறிய கோலா கரடி தாகத்தில்
தவித்து நின்றது. "உடனே சோர்ந்து நின்ற கோலாவை அணுகி பாட்டிலில்
இருந்த நீரை புகட்டினேன். மலைப்பகுதியில் வெப்பத்தில் நீர் வறண்டுபோயிருக்கலாம்"
என்பவர் பதிவிட்ட மனிதநேய வீடியோ இணையத்தில் கலக்கல் ஹிட்.
பேண்ட்டுக்குள்
மீன்!
அமெரிக்காவின்
ப்ளோரிடாவிலுள்ள மீன் கண்காட்சியகத்தில் கண்ணாடிப்பெட்டியில் நீந்திய மீனைக் காணோம். அப்போது கடையில் இருந்த க்ரஷ் கார்சியா,
கிரிஸ்டல் டிக்ஸன் ஆகிய இரு நண்பர்களும் மீன்களை பேன்டில் போட்டுக்கொண்டு
எஸ்கேப்பாவது பின்னர் பாதுகாப்பு கேமராவில் பார்த்தபோது தெரிந்தது. தற்போது கார்சியா கைதாகினாலும் மீன்களையும்,
டிக்ஸனையும் போலீஸ் தேடிவருகிறது.
பிட்ஸ்!
போலீசுக்கு ராங்
மெசேஜ்!
ப்ளோரிடா போலீசுக்கு
திடீரென ஒரு மெசேஜ்.
உன்னிடம் மரிஜூவானா இருக்கா எனக்கு வேணுமே? உடனே
போலீஸ், கெய்ன்ஸ்வில்லே போலீஸ் பேட்ஜ் படத்தை அவருக்கு அனுப்ப,
ராங் மெசேஜ் மனிதர் பீதியானார். ட்ரக்ஸ் உடல்நலத்திற்கு
கேடு என நற்செய்தியை ஃபேஸ்புக்கிலும் காமெடி பதிவை ரிலீஸ் செ்ய்து சொல்லியிருக்கிறது
கெய்ன்ஸ்வில்லே காவல்துறை.
கின்னஸ் பேஸ்கட்!
ஆப்பிரிக்காவிலுள்ள
லெசோதோ பகுதியின் அருவிக்கு யூட்யூப் வீடியோ ரசிகர்கள் சென்றனர். மெலேசுன்யான்
அருவடெரக் ஹெரோன் என்பவர் பேஸ்கட் பாலை 660 அடி உயரத்தில் இருந்து
கீழேயிருந்த கூடையில் கச்சிதமாக எறிந்தார். எதற்கு? கின்னஸ் சாதனைக்காகத்தான். இதற்கு முன்பு ஸ்விட்சர்லாந்தின்
மாவோய்சின் அணையிலும் இதேபோல சாதனை செய்த டீம் இது.
கடலில் கார் சர்ஃபிங்!
ஆஸ்திரேலியாவில்
மோனா பீச்சில் நடந்தது அந்த மிராக்கிள். எஸ்யூவி காரில் ஜெட்களை செட் செய்து
கடலில் பாய முயற்சித்தது ஒரு குழு. பின் பிளான் சொதப்ப,
காரை கரைக்கு இழுத்து செல்ல முயற்சித்தனர். ஆனால்
மணலில் ஸ்டார்ட் ஆன கார் நகர மறுக்க, திருதிருவென அவர்கள் விழிக்கும்
வீடியோ காமெடி ஆஃப் எரர்ஸ் என இணையத்தில் வெளியாகி மாஸ் ஹிட்டாகிவிட்டது.
சாப்பாட்டு ராமன்
கைது!
அமெரிக்காவைச்
சேர்ந்த தின்பண்ட சக்ரவர்த்தி பிராட்லி ஹர்டிஸன், 2 நிமிஷத்தில் எட்டு டூநட்
தின்று ரெக்கார்ட் செய்தவர். மிச்சநேரத்தில் காரை,கடையை உடைத்து தின்ன ஸ்நாக்சும், பணமும் திருடுவார்.
டூநட் கடையை உடைத்து தின்றதோடு கரன்சியிலும் கை வைத்த கேஸில் சிறையில்
உள்ளார் பிராட்லி. 2014 டூநட் சக்ரவர்த்தி என ஸ்பான்சர்ஷிப்பில்
பட்டம் வழங்கியதே எலிசபெத் நகர போலீஸ்தான்.
தொகுப்பு: கா.சி.வின்சென்ட், ரோனி
நன்றி: குங்குமம்