அறிவியல் சூழ் உலகு!




நம்பினால் நம்புங்கள்!

நீர்நாயின் பற்கள் ஆரஞ்சு நிறமாக இருக்க காரணம், அதிலுள்ள இரும்புச்சத்துதான். பற்கள் சொத்தை ஆகாமல் இருக்க உதவும் கவசமும் இதுதான்.

டெர்ரி டேவிஸ் என்ற ஸிஸோபெரெனிக் பாதிப்பு கொண்ட பொறியாளர், கடவுளுடன் பேசுவதற்கான கம்ப்யூட்டர் ஓஎஸ் கண்டுபிடிக்க செலவிட்ட காலம் எவ்வளவு தெரியுமா? 10 ஆண்டுகள்.

தன் கால் எலும்பை தானே உடைத்து அதனை நகங்களாக பயன்படுத்தி தாக்குதல் நடத்தும் தவளைக்கு Wolverine Frog என்று பெயர்.

கட்டிட டிசைனரான பக்மின்ஸ்டர் ஃபுல்லர் 1915-1983 ஆம் ஆண்டு வரை தன் வாழ்வை டைரியில் பதிந்தார். 14 ஆயிரம் காகிதங்களைக் கொண்ட தொகுப்பின் பெயர் Dymaxion Chronofile.

ஸ்காட்லாந்து மன்னரான நான்காம் ஜேம்ஸ், மக்கள் வாசமே இல்லாத தீவுக்கு வாய் பேசமுடியாத பெண்ணையும் இரு குழந்தைகளையும் அனுப்பினார். எதற்கு? இயற்கையாக மனிதர்களின் மொழி எது என அறியத்தான்.





2
வருங்கால கோடிங் மொழிகள்!

எதிர்காலத்தில் முக்கியமாக தொழில்நுட்ப உலகில் ஒருவர் அவசியம் கற்கவேண்டிய கணினி மொழிகள் இவை.

Java
இணையத்தில் ஏ டூ இசட் பணிகளுக்கு அவசிய மொழி. 1995 ஆம் ஆண்டு மே 23 அன்று சன் மைக்ரோசிஸ்டத்தைச் சேர்ந்த ஜேம்ஸ் கோஸ்லிங் என்பவரால் உருவாக்கப்பட்டது. 2016 ஆம் ஆண்டுப்படி, ஜாவா மொழி சார்ந்த பணிகளில் 9 மில்லியன் டெவலப்பர்கள் பணியாற்றுகின்றனர். கடந்த செப்டம்பர் 2017 இல் ஜாவா 9 ரிலீசாகியுள்ளது.

Python
1991 ஆம் ஆண்டு  பைத்தான் சாஃப்ட்வேர் பவுண்டேஷனைச் சேர்ந்த Guido van Rossum என்பவரால் உருவாக்கப்பட்டு இணையத்தில் பொதுவான பயன்பாட்டுக்கு பயன்படும் கட்டற்ற மொழி இது. சிம்பிளான இதன் மொழியில் சிக்கலான இணையதளங்களை உருவாக்க முடியும். டீன்களுக்கு ஏற்ற கணினி மொழி. அக்.17 இல் பைத்தான் வெர்ஷன் 3.6.3 ரிலீசாகியுள்ளது.

Ruby
1995 ஆம் ஆண்டு Yukihiro Matsumoto என்பவரால் உருவாக்கப்பட்ட கட்டற்ற பொதுப்பயன்பாட்டு மொழி இது. ட்விட்டர் ஏர்பிஎன்பி ஆகிய இணையசேவைகளில் ரூபியின் பயன்பாடு உண்டு. செப்.2017 இல் ரூபியின் 2.4.2 வெர்ஷன் வெளியாகியுள்ளது.
3
அமேசிங் பிட்ஸ்!

பார்க்,பீச்,தெரு என எங்கும் வாத்து உங்களை உற்றுப்பார்ப்பது போல் தோன்றுகிறதா? அப்படியென்றால் உங்களுக்கு Anatidaephobia இருக்கிறது என்று அர்த்தம்.

பாபிலோனை ஆண்ட ஆறாவது மன்னர் ஹமுராபி(கி.மு.1792 to கி.மு 1750) தன் ஆட்சிகாலத்தில், மதுபானத்தில் நீர் கலந்தவர்களுக்கு  மரணதண்டனை விதித்தார்.

1964 ஆம் ஆண்டு ஸ்வீடனில் ஓவியக்கண்காட்சி நடந்தது. அதில் பலரும் பாராட்டிய 4 ஓவியங்களை(Pierre brassau என்ற பெயரில்) வரைந்தது நான்கு வயதான பீட்டர் என்ற சிம்பன்சி.

அமெரிக்கா 20 ஆம் நூற்றாண்டில் பயன்படுத்தியதை விட சீனா 2011-2013 ஆண்டுகளில் பயன்படுத்திய சிமெண்டின் அளவு அதிகம்.

ஈரானில் ஐஸ்கட்டிகளை பாதுகாக்க கட்டப்பட்ட இடத்தின் பெயர், Yakhchals  

4
உகாண்டாவில் மார்பர்க் வைரஸ்!

உகாண்டாவில் மார்பர்க் வைரஸ் தாக்கி மூன்று பேர் பலியானதோடு, நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதை அரசு ஒப்புக்கொண்டுள்ளது. நோயின் முதிர்வுக்காலம் 21 நாட்கள் என்பதால் நகம் கடித்தபடி காத்திருக்கிறது அரசு.

மார்பர்க் வைரஸின் இறப்பு சதவிகிதம் 88%. முன்பே மார்பர்க், எபோலா ஆகிய வைரஸ் தாக்குதல்களிலிருந்து அரசு மீண்டு எழுந்துள்ளது இதற்கு உதவும். கென்யாவின் எல்லையிலுள்ள க்வீன் மாவட்டத்தில்தான் மார்பர்க் வைரஸ் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. 1967 ஆம் ஆண்டு ஜெர்மனியின் மார்பர்க்கில் ஆராய்ச்சிக்கு கொண்டு வரப்பட்ட குரங்குகளிலிருந்து முதன்முதலாக பரவிய மார்பர்க் வைரஸ் பின் வெவ்வேறு காலகட்டத்தில் மக்களை தாக்கி உலகெங்கும் இதுவரை 400 பேரை காவு வாங்கியுள்ளது.
 5
டிஎன்ஏவில் மாற்றம்!

அமெரிக்காவைச் சேர்ந்த பிரையன் மாடக்ஸ், என்ற மரபணுக்குறைபாட்டு நோயாளிக்கு, டிஎன்ஏவை திருத்தம் செய்து சாதனை புரிந்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். நோயாளியின் உடல்நிலை மேம்பட தொடர்ந்து ஜீன் தெரபி அளிக்கப்பட்டு, நோயிலிருந்து தீர்வு காண முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

'ஹண்டர் சின்ட்ரோம்' என்ற மரபணு பிரச்னையால் பாதிக்கப்பட பிரையனுக்கு தொற்றுநோய்கள், மூச்சுவிடுவதில் சிக்கல் ஏற்பட இதயம் மற்றும் மூளை உள்ளிட்டவற்றில் கடும் பாதிப்புகள் ஏற்பட்டன. கல்லீரலிலுள்ள மூலக்கூறு செல்களில் ஏற்பட்ட பிரச்னைதான் இதற்கு காரணம். எனவே பிரையனின் டிஎன்வை வெட்டி அதில் அவரது உடலுக்கு தேவையான ஜீன்களை வைத்து அறுவை சிகிச்சை செய்துள்ளனர் சாங்காமோ தெரப்டிக்ஸ் மையத்தின் ஆராய்ச்சியாளர்கள். சிகிச்சை ஹிட்டானால் பிரையன் 4 லட்சம் டாலர்களை செலவழித்து செய்யும் என்சைம் சிகிச்சை அவசியமில்லை. "வெகுநாட்கள் காத்திருந்த பெற்ற சிகிச்சை இது" உற்சாகமாக பேசுகிறார் பிரையன்.

 6
பசுமை காவலர்கள்!

ஜிம்பாவேவின் ஹராரேவைச் சேர்ந்த டிக்கி ஹைவுட் அமைப்பைச் சேர்ந்தவர்கள் உலகிலேயே அதிகம் கடத்தப்படும் விலங்கை காப்பாற்ற மெனக்கெட்டு வருகிறார்கள்செதில்களை தன் பாதுகாப்பு கவசமாக கொண்டுள்ள எறும்புதின்னிக்கு பின்னாளில் அதுவே எமன் ஆனது பரிதாபம்தான்.

எறும்பு தின்னி அதன் செதில்கள் மற்றும் இறைச்சிக்காக அதிகம் வேட்டையாடப்படும் விலங்கு. மருத்துவத்திலும் எறும்புதின்னிக்கு மவுசு அதிகம் என்பதால் ஆசியா, ஆப்பிரிக்காவிலுள்ள 8 எறும்புதின்னி இனங்களும் பெருமளவு அழிந்துவிட்டன. "எறும்பு தின்னிகள் வேட்டையாடப்படுவதைத் தடுக்க உணவு தந்து பாதுகாத்து வருகிறோம்." என்கிறார் டிக்கி ஹைவுட் அமைப்பின் தன்னார்வலர் ஒருவர். அறக்கட்டளை நிதிதிரட்ட தன்னார்வலர்களின் பணியை புகைப்படக்காரர் அட்ரியன் ஸ்டைரின் பதிவு செய்து வருகிறார். "அழிவு என்பது முதலில் எறும்பு தின்னிகளுக்கு என்றால் அடுத்து பூமிக்கு என்பதை மக்கள் மறக்க கூடாது" என எச்சரிக்கிறார் அட்ரியன்.

7
சூடான காஃபிக்கு எம்பர் கோப்பை!

மோச்சாவில் நாக்கு பொசுங்க காஃபி குடித்தாலும், எனக்கான சூடு காஃபியில் இல்லையே என கவலைப்படும் ஜீவன்களுக்கென வந்திருக்கிறது எம்பரின் செராமிக் கோப்பை. இதில் 4 சென்சார்களின் மூலம் வெப்பத்தை கன்ட்ரோலாக வைத்துக்கொள்ள முடியும்.

ஸ்டீல் கோப்பை மீது செராமிக் கோட்டிங் செய்யப்பட்டு கோப்பையின் கீழ்,சார்ஜ் செய்யும் பகுதி பேட்டரிகளுடன் உள்ளது. இதிலுள்ள எல்இடி லைட் பளிச்சிட்டால், காஃபி குடிக்கும்போது சரியான வெப்பநிலையில் கப் உள்ளது என தெரிந்துகொள்ளலாம். பல்வேறு நிறங்களையும் நபர்களின் சாய்ஸிற்கேற்ப பயன்படுத்தும் ஆப்ஷன்கள் உண்டு. வெப்பநிலையை போனின் ஆப் மூலம் கண்காணிக்கவும் உள்ள வசதி புதுசு. விலை ரூ.5,224.

தொகுப்பு: ஜார்ஜ் டேவிஸ், எலிசா
நன்றி: முத்தாரம்