அறிவியல் அறிவோம்!






செவ்வாயில் வீடு!

செவ்வாயில் வசிப்பதற்கான வீட்டின் டிசைன்களுக்காக மார்ஸ் சிட்டி டிசைன் நிறுவனம் ஆண்டுதோறும் நடத்தும் போட்டியில் இந்த ஆண்டு Redwood Forest தலைப்பிலான எம்ஐடியின் டிசைன் வென்றுள்ளது.

எம்ஐடியைச்சேர்ந்த 9 மாணவர்களின் டீம், கைட்லின் முல்லர் வழிகாட்டுதலில் செவ்வாய் டிசைன் வீடுகளை வடிவமைத்து முதல்பரிசு வென்றுள்ளனர். 10 ஆயிரம் பேர் தங்கும் வசதி கொண்ட இந்த வடிவமைப்பில் வசதிகளோடு தக்க பாதுகாப்பு வசதிகளும் உண்டு. "செவ்வாயைப் பொறுத்தவரை பனி,நீர்,மண், சூரியன் என அனைத்தையும் பயன்படுத்திக்கொள்ளும்படி உருவாக்கியுள்ளோம்" என்கிறார் ஆராய்ச்சியாளரான சுமினி. இதன் வடிவமைப்புக்கு சொந்தக்காரர், பிஹெச்டி மாணவரான ஜார்ஜ் லார்டோஸ்.

 2
டிஜிட்டல் மாத்திரை!

அமெரிக்காவின் எஃப்டிஏ, நோயாளிகளுக்கான முதல் டிஜிட்டல் மாத்திரைக்கு அனுமதி வழங்கியுள்ளது. Abilify MyCite எனும் இம்மாத்திரை குறிப்பிட்ட சென்சாரை தன்னுள் கொண்டுள்ளது. இதன் விழுங்கிவிட்டு மாத்திரையின் விளைவை மொபைலிலுள்ள ஆப் மூலம் கண்காணித்து தகவல்தளத்தில் பதிவேற்றி மருத்துவரிடம் ஆலோசனை பெறலாம். ஸிப்ஸோபெரெனியா, ஆளுமைப்பிறழ்வு, மன அழுத்தம் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு Abilify MyCite முக்கிய மருந்து.

சிலிகான்,காப்பர்,மெக்னீசியம் ஆகியவற்றால் சென்சார் உருவாக்கப்பட்டுள்ளது. வயிற்றுக்குள் உள்ள அமிலம் பட்டவுடன் சென்சார், எலக்ட்ரிக் சிக்னல்களை அனுப்பத் தொடங்கும். இதயத்துடிப்பு, வயிற்றின் செயல்பாடு, செரிமானம் ஆகியவற்றை சென்சார் பதிவு செய்யும். தவறான மருந்து பயன்பாட்டு அளவு 200 பில்லியன்(2012). எஃப்டிஏ அனுமதி கொடுத்துவிட்டாலும் இன்னும் டிஜிட்டல் மாத்திரைக்கு கட்டணம் நிர்ணயிக்கப்படவில்லை.
3
ஆராய்ச்சி செலவு!

டெக் நிறுவனங்களில் ஆப்பிள் 2014 ஆம் ஆண்டு மட்டும் 6 பில்லியன் டாலர்களை ஆராய்ச்சிக்காக செலவழித்துள்ளது.

நூல், ஆன்லைன் கடை ஆகியவற்றுக்கான க்ளவுட் அமைப்பை டெவலப் செய்ய சராசரியாக 10 பில்லியன் டாலர்களை அமேஸான் நிறுவனம் செலவழிக்கிறது.

தானியங்கி கார்கள், சர்ச் எஞ்சின், இன்டர்நெட் பலூன்,ஏஐ,ஸ்மார்ட்போன்கள் என கிடைத்த இடத்திலெல்லாம் பிஸினஸ் செய்யும் கூகுள் ஆராய்ச்சிக்கு செய்துவரும் தோராய செலவு, 10.5 பில்லியன் டாலர்கள்.

டிவி,போன்கள்,ஏசி,ப்ரிட்ஜ் என அத்தனை எலக்ட்ரானிக்ஸ் பொருட்களையும் அசகாயமாக தயாரித்து No.1 இடத்தில் தன்னை தக்கவைத்துக் கொள்ளும் சாம்சங்கின் தோராய ஆராய்ச்சி செலவு, 12.6 பில்லியன் டாலர்கள்.
 4
இரவில் ஒளிரும் பொருட்கள்!

உங்கள் செல்லக்குழந்தையின் ரூமில் ஒட்டிவைக்கும் ஸ்டார்கள், ஏக் ருப்பீ சூயிங்கத்தின் ஸ்டிக்கர்கள் முதற்கொண்டு இரவில் பளீரென ஒளிவிடுவது பெரும் ஆச்சர்யமாக இருக்கும். இது எப்படி சில பொருட்களில் மட்டும் சாத்தியமாகிறது?

ப்ளோரசென்ட் பொருட்களை சூரியன் அல்லது டார்ச் வெளிச்சத்தில் காட்டினால் அவை புற ஊதாக்கதிர்களை ஈர்த்துக்கொண்டு வெளிவிடுகின்றன. சலவைத்தூள் புற ஊதாக்கதிர்களை உள்ளிழுத்து நீல நிறத்தில் வெளிப்படுத்துகின்றன. சில ஒளி உமிழும் பொருட்கள் மெதுவாக செயல்படும் தன்மையுடையன என்பதால்தான், குழந்தைகளின் சுவர்களிலுள்ள ஸ்டார்கள் விளக்குகளை ஆஃப் செய்து சில நிமிடங்களுக்கு பிறகு ஷைனிங்காக மின்னுகின்றன.
none;mso-layout-grid-align:none;text-autospace:none'> 

டிவி,போன்கள்,ஏசி,ப்ரிட்ஜ் என அத்தனை எலக்ட்ரானிக்ஸ் பொருட்களையும் அசகாயமாக தயாரித்து No.1 இடத்தில் தன்னை தக்கவைத்துக் கொள்ளும் சாம்சங்கின் தோராய ஆராய்ச்சி செலவு, 12.6 பில்லியன் டாலர்கள்.
 5
ரப்பரில் மின்சாரம்!

ஸ்விட்சர்லாந்தின் எம்பா ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ள புதிய ரப்பர் ஃபிலிமில் மின்சாரத்தை உருவாக்கும் முறையை கண்டுபிடித்திருக்கிறார்கள். மெல்லிய, ஆர்கானிக்,நெகிழ்வான ரப்பர் ஃபிலிமை நீளச்செய்தால்,சுருக்கினால் மின்சாரம் உண்டாகிறது என்பதுதான் இந்த ஆச்சரிய கண்டுபிடிப்பு.உடைகள்,ரோபோக்கள்,கட்டுப்பாட்டு பொத்தான்கள் முறையில் இந்த ரப்பரை அமைத்து மின்சாரத்தை உருவாக்க முடியும். .கா.பேஸ்மேக்கர்.

அனலாக் பிளேயர்களில் சிறிய ஊசி குறிப்பிட்ட அழுத்தத்தை இசைத்தட்டில் உருவாக்கி பின்னர் அது ஒலியாக மாற்றப்படுவது இந்த ரப்பர் ஃபிலிமுக்கு ஒரு உதாரணம். இந்த ரப்பரை பயன்படுத்தி பிரஷர் சென்சார்களை உருவாக்க முடியும். இம்முறையில் உருவாக்கப்படும் கன்ட்ரோல் பட்டன்களின் அழுத்தத்தை எளிதில் ரோபோக்கள் உணரும். "ரப்பர் ஃபிலிமை உடையாக மாற்றினால் உடலை மிகச்சரியாக கண்காணிக்கலாம். விரைவில் மாற்று இதயத்தின் மூலமாக மின்சாரம் சேமிக்கும் காலம் வரும். இதனால் உடலில் பொருத்தப்பட்ட சாதனங்களுக்கு பேட்டரி மாற்றும் அவசியமில்லை" என்கிறார் ஆய்வாளரான ஆப்ரிஸ்.

 தொகுப்பு: கோமாளிமேடை டீம்
நன்றி:முத்தாரம்