பதப்படுத்தப்பட்ட உணவின் வரலாறு!



Image result for frozen food


பதப்படுத்தப்பட்ட உணவின் வரலாறு!


பதப்படுத்தப்பட்ட உணவுத்துறையின் தந்தை Birdseye. இன்று உலகளவில் இதன் மார்க்கெட் மதிப்பு 240 பில்லியன் டாலர்கள். மனிதர்கள் பல்வேறு பூமிப்பரப்புக்கு இடம்பெயர தொடங்கியவுடன் பதப்படுத்த உணவுகள் உருவாகத்தொடங்கின. அதோடு கெடாமல் உணவுப்பொருட்களை பாதுகாக்கும் தொழிலும் வளரத்தொடங்கின. "பேர்ட்செயே, உணவு பதப்படுத்துதல் துறையை நவீனமாக்கியதோடு உலகளவிலும் அதனை மேம்படுத்தினார்" என்கிறார் மார்க் குர்லான்ஸ்கி.


Image result for clarence birdseye invented frozen food
பேர்ட்செயே தன் இளமையில் லேப்ராடர் என்ற மிஷனரி மருத்துவமனையில் வேலைக்கு சேர்ந்தார். அங்கு கடல் உயிரிகள்,விலங்குகள் ஆகியவற்றை கெடாமல் பாதுகாக்கும் டெக்னிக்கை அறிந்துகொண்டார். அறை வெப்பநிலை 30 டிகிரிக்கும் குறைவு என்பதால் உப்பிடுவது,காயவைப்பது. உறைதல் ஆகிய முறைகளை நன்கு கற்றார். ஐஸ் கிரிஸ்டல்களின் சைஸ்களை மாற்றி இறைச்சியை கெட்டுவிடாமல் பக்குவப்படுத்துவதை அரிச்சுவடியாக படித்தார்.

பின் உணவுகளை பேக்கேஜ் செய்தாலும் உணவு உறைதல் குறைந்தவுடன் கசிவது குறையவில்லை. 1923 ஆம் ஆண்டு ஐஸ்க்ரீம் கம்பெனியை தாஜா செய்து அங்கு சோதனை செய்ய பர்மிஷன் வாங்கி, ஜெனரல் சீஃபுட் கம்பெனியைத் தொடங்கினார். அம்மோனியா பயன்படுத்திய மெட்டல் தட்டுகள், இரண்டு இன்ச் தடுமன் கொண்ட அட்டைகள்,பல்வேறு அட்டைத் தடுப்புகள் என ஏராளமான இன்வென்ஷன்களை நிகழ்த்தினார். டுபான்ட்டின் தயாரிப்பான செல்லோபேன் தாளை மீனை பேக்கேஜ் செய்ய பயன்படுத்தியவர் பேர்ட்செயேதான். பின்னர் இதனை சிகரெட் கம்பெனிகள் வாங்கினர். பின்னர் செல்லோபேன் அனைத்து பொருட்களிலும் பயன்படுத்தப்பட தொடங்கியது.

1927 ஆம் ஆண்டில் இவர் நிறுவனம் பேக்கேஜ் செய்த கடல் உணவு மட்டும் 1.6 மில்லியன் பவுண்டுகள். 1928 ஆம் ஆண்டு கடல் உணவுகளை பாதுகாக்கும் ப்ரீஸர்கள் சூப்பர் மார்க்கெட்டுகளில் வைக்கப்படத் தொடங்கின. பிறகென்ன, காய்கறி டூ இறைச்சி வரை சீசனில் கிடைக்காத மாம்பழம் எங்கள் நிறுவனத்திடம் கிடைக்கிறது என விளம்பரம் செய்தார்கள். ஆனால் பிசினஸ் பிக்கப் ஆனது இரண்டாம் உலகப்போருக்கு பின்னால்தான். இன்று அமெரிக்கா ஃப்ரிட்ஜ் மற்றும் ஃப்ரீஸர் சேல்சில் உலகிலேயே நம்பர் 1 ஆக இருக்கும் ரகசியம் புரிகிறதா?

தொகுப்பு: கோமாளிமேடை டீம்
நன்றி: முத்தாரம்


பிரபலமான இடுகைகள்