கிறிஸ் காஸ்ட்ரோ - பசுமை பொருளாதார சூழலியலாளர்
தலைவன் இவன் ஒருவன் 8
கிறிஸ் காஸ்ட்ரோ
பகதூர் ராம்ஸி
அமெரிக்காவின் ஆர்லாண்டோ நகரைச்சேர்ந்த கிறிஸ் காஸ்ட்ரோ
பசுமை ஆற்றல் சார்ந்த பொருளாதாரத்தை நகரங்களில் பரப்பிவரும் சூழலியலாளர்.
அமெரிக்காவின ஃப்ளோரிடாவில் பிறந்த கிறிஸ் காஸ்ட்ரோ
பனைமர விவசாயிகளின் குடும்பத்தில் பிறந்தவர். பின்னாளில் சூழலியல்
அறிவியலில் பட்டம் பெற்ற காஸ்ட்ரோ, இயற்கை விவசாயமுறையை தன்னார்வமாக
மக்களுக்கு பிரசாரம் செய்யும் பசுமை ஒருங்கிணைப்பாளர். ஆர்லாண்டோ
நகரின் பசுமை திட்டங்களுக்கான இயக்குநர்.
நேர்மையான சூழலியல் என்பது பேச்சைக் கடந்து செயலுக்கு
மடைமாற்றியதில் கிறிஸ் காஸ்ட்ரோவின் பங்கு முக்கியமானது.
IDEAS for us எனும் தன்னார்வ அமைப்பை 2008 ஆம்
ஆண்டு தொடங்கி வீட்டில்
தோட்டம் அமைக்கும் Fleet Farm இயற்கை விவசாய முறைகளை பயிற்றுவித்து
மக்களுக்கு வழிகாட்டி வருகிறார். "அரசோடு இணைந்து தன்னார்வ
அமைப்புகள் சமூக அமைப்புகள் இணைந்தால் மட்டுமே சமூகத்தில் மாற்றங்களை சாத்தியப்படுத்த
முடியும்" என்று உற்சாகமாக பேசுகிறார் கிறிஸ் காஸ்ட்ரோ.
ஆர்லாண்டோ நகர கவுன்சிலில் பணிபுரியும் கிறிஸ் காஸ்ட்ரோ
மக்கள் தம் வாழ்வில் முடிந்தளவு எளிமையான சூழலை மாசுபடுத்தா பொருட்களை பயன்படுத்தும்
இயற்கை நேய வாழ்வுக்கு பயன்படுத்தவேண்டும் என்று பேசுவதோடு அதற்கான முயற்சிகளையும்
இடையறாது செய்துவருகிறார். "நாட்டின் பொருளாதாரத்தை சூழலுக்குகந்தபடி
உருவாக்கி மக்களுக்கு பயன் கிடைக்கும்படி செய்யவேண்டும் என்பதே லட்சியம்"
என ஆர்லாண்டோ கவுன்சில் இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது இவரின் முயற்சிகளுக்கு
சாட்சி.
ஆர்லாண்டோவின் வருமானம் பெருமளவு சுற்றுலாவை நம்பியே
உள்ளது.
இங்கு ஆண்டுதோறும் 48 மில்லியன் மக்கள் சுற்றுலாவுக்கு
வருகின்றனர். ஆர்லாண்டோ நகருக்கு பிரச்னை வருவது வெப்பநிலை உயர்வினால்தான்.
கடல்நீர் தொடர்ந்து உயர்ந்து நகருக்குள் உட்புகுவது, புயல்கள், குடிநீர்சிக்கல்கள் என பல்வேறு பிரச்னைகளுக்கு
இயற்கைநேய தீர்வுகளை தேடிக்கண்டுபிடிக்க முயற்சிக்கிறார் கிறிஸ் காஸ்ட்ரோ. 6.8
மில்லியன் ச.அடி கொண்ட ஆர்லாண்டோ அரசு கட்டிடங்களில்
சோலார் பேனல்கள் நிறுவப்பட்டுள்ளன. PACE எனும் திட்டப்படி கட்டிடங்களில்
ஆற்றல் சேகரிக்கும் பல்வேறு முயற்சிகளை கிறிஸ் காஸ்ட்ரோ ஈடுபட்டிருக்கிறார்.
"மக்களின் ஆதரவு இருந்தால்தான் எதுவும் சாத்தியம். இத்திட்டத்திற்கு மக்களிடம் ஆதரவுள்ளது" என தீர்க்கமாக
பேசுகிறார் காஸ்ட்ரோ. தற்போது ஒரு மனிதர், ஒரு மரம் என பசுமை திட்டத்தை தற்போது செயல்படுத்திவருகிறார். பசுமை ஆற்றல் முறையில் ஆர்லாண்டோ நகரம் 2007 ஆம் ஆண்டிலிருந்து
இதுவரை சேமித்துள்ள தொகை 1 மில்லியன் டாலர்கள்.
தொகுப்பு: அரசு கார்த்திக், தேசிங்கு மூர்த்தி
நன்றி: முத்தாரம்