அறிவியல் பிட்ஸ்!
பிளாஸ்டிக் மாசுபாடு!
2010 ஆம்
ஆண்டுப்படி கடலில் கடந்துள்ள பிளாஸ்டிக்குகளின் அளவு 12 மில்லியன்
மெட்ரிக் டன்கள். இதன் மூலம் பூமியின் மொத்த கடற்புறங்களையும்
மூட முடியும். இந்த ஆண்டின் பிளாஸ்டிக் தயாரிப்பு 266
மில்லியன் மெட்ரிக் டன்கள்.
2014 ஆம்
ஆண்டு ஆய்வுப்படி, கடலில் 2 லட்சத்து
70 ஆயிரம் டன் எடையில் 5.25 ட்ரில்லியன் பிளாஸ்டிக்
பொருட்கள் கடலில் பெறப்பட்டிருக்கின்றன.
ஒரு க்யூபிக் மீட்டர்
நீரில்
2800 மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள்(62um-1mm) கிடப்பதாக
கடல் ஆய்வுகள் தகவல் தெரிவிக்கின்றன.
தற்போது கண்டறியப்பட்டுள்ள
பிளாஸ்டிக்குகளின் அளவு
46% என்பதால், கடலின் அடியில் பிளாஸ்டிக்குகள்
கிடக்கும் வாய்ப்புண்டு.
மேக்ரோபிளாஸ்டிக்
அளவு
1-5mm, மைக்ரோபிளாஸ்டிக் அளவு 62um-1mm
2
ரியலா? ரீலா?
ரீல்:தேரைகளைத்
தொட்டால் மருக்கள் ஏற்படுமா?
ரியல்: தேரைகளை
தொடக்கூடாது என்பதற்காக ஹமாம் அம்மாக்கள் சொல்லிவைத்து பொய் அது. தவளைகள்,தேரைகள் பொதுவாக ஈரப்பதமான இடத்தில் வாழ்பவை.
தேரைகளின் தோலில் உள்ள மரு அமைப்புகள் வறட்சியான சூழலை தாக்குப்பிடித்து
வாழ உதவுகின்றன.
ரீல்:சிலந்திகளில்
அதிக விஷத்தன்மை கொண்டது Daddy longlegs என்ற வகை.
ரியல்: Daddy longlegs என்ற சிலந்திகள் கடித்த மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதாக எந்த அறிவியல் பதிவும்
இல்லை என்பதே நிஜம்.
ரீல்: நெருப்புக்கோழிகள்
தலையை மண்ணில் புதைத்துக்கொள்ளும்.
ரியல்: நெருப்புக்கோழிகள்
உணவை டைஜஸ்ட் செய்ய கூழாங்கற்களையும் மண்ணையும் தின்னும் நிஜத்தை டெவலப் செய்த வதந்தி இது. தலையை
மண்ணுக்குள் புதைத்தால் எப்படி மூச்சுவிடமுடியும்? என்ற லாஜிக்கை
உணர்ந்தால் ரீலை கண்டுபிடித்துவிடலாம்.
3
நோயை
மறக்காது உடல்!
புதிதாக
நோய் வரும்போது அதனை சரிசெய்ய ஆகும் நேரம் அதிகம்.
பின்னாளில் அதேநோய் சரியாக மிகச்சிலநாட்களே தேவை. ஏன் இந்த மாற்றம்?
நோய் எதிர்ப்பு சக்தியின் நோய்களை நினைவு கொள்ளும் தன்மைதான் இதற்கு காரணம்.
கலிஃபோர்னியா மற்றும் பெர்க்கிலி பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்களின் நோய் எதிர்ப்பு சக்தி குறித்து ஆய்வு செய்தனர்.
அதில் வெள்ளை அணுக்களில் செலுத்தப்பட்ட ஹைட்ரஜன் ஐசோடோப் மூலம், உடலைத் தாக்கும் வைரஸ், பாக்டீரியாக்களை பற்றிய தகவல்கள் திரட்டப்பட்டுள்ளதை கண்டறிந்து வியந்துள்ளனர். "CD8+T செல்களின் முக்கிய பணியே நோயைத் தடுப்பதும்,
அது குறித்த தகவல்களை சேமித்து வைப்பதும்தான்" என்கிறார் மார்க் ஹெல்லர்ஸ்டெய்ன். ஏறத்தாழ டி
செல்களின் பணி முன்னாள் போர்வீரர்கள் போலத்தான்.
மஞ்சள் காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் மீண்டும் மீண்டும் தோன்றும்போது அதற்கான முன்னேற்பாடுகளை நோய் எதிர்ப்பு சக்தி முன்கூட்டியே பிளான் செய்துவிடுகிறது. இது நோய்களுக்கான தடுப்பூசிகளை உருவாக்க ஆராய்ச்சியாளர்களை ஊக்குவிக்கிறது.
4
பிட்ஸ்!
முதல் உலகப்போரில்
இறந்த குதிரைகளின் எண்ணிக்கை ஒரு மில்லியனுக்கு அதிகம்.
முழுநாளும் பெப்ஸ்
பெட்டில் உடல் விலகாமல் படுத்து தூங்கவேண்டும் என்று நினைப்பதற்கு கிளினோமேனியா என்று
பெயர்.
1820 ஆம்
ஆண்டு ஜூன் 28 அன்று, அமெரிக்காவின் நியூஜெர்சியில்
தக்காளி கோர்ட் படியேறியது. தக்காளி விஷம் என கூறிய ராபர்ட் ஜான்சன்
மக்கள் முன்னிலையில் தக்காளியைத் தின்றார். சாவார் என எக்சைட்மெண்ட்
ஆன மக்கள் கரகோஷம் எழுப்பியும் ராபர்ட் சாகவில்லை.
1325 ஆம்
ஆண்டு மாடனா மற்றும் போலோக்னா ஆகிய இரு நகரங்களுக்கிடையே ஏற்பட்ட கடுமையான போரில்
2 ஆயிரம் பேர் இறந்தனர். போருக்கு என்ன காரணம்?
போலோக்னா நகரிலிருந்த பக்கெட்டை மாடனா நகர்வாசி திருடியதுதான்.
கம்யூனிச தலைவரான
லெனினின் ஆங்கிலப்பேச்சில் ஐரிஷ் நாட்டு உச்சரிப்பு முறை தூக்கலாக இருக்கும்.
தொகுப்பு: கா.சி.வின்சென்ட், ரூபா சுக்லா
நன்றி: முத்தாரம்