ஆள்மாறாட்ட கோல்மால்!

Image result for thomas castro case





வரலாற்று சுவாரசியங்கள் 2

ஆள்மாறாட்ட கோல்மால்!
 
ரா.வேங்கடசாமி


தனது தாயிடமிருந்து ஆண்டிற்கு ஆயிரம் பவுன்கள் பயணப்படியாக பெற்ற கேஸ்ட்ரோ இங்கிலாந்துக்குத் திரும்பி, தனது டிச் போர்னே எஸ்டேட்டுக்கு இயல்பாக உரிமை கொண்டாடினார்.

ரோஜரின் குடும்ப விவகாரங்களைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொண்டவர், அறிமுகமான எல்லோரையும் நுணுக்கமாக ஏமாற்றியது மட்டுமின்றி, தான்தான் ரோஜர் என்று பகிரங்கமாகவே சொல்லத் தொடங்கினார்.

அதற்கு ஸ்டோரி வேண்டுமே? உயிர் தப்பியதை லாஜிக் நழுவாத கதையாக மாற்றி எல்லோரிடமும் சொன்னார் காஸ்ட்ரோ. கடலில் விழுந்து தத்தளித்துக்கொண்டிருக்கும்போது, ஆஸ்திரேலியா கப்பல் தன்னைக் காப்பாற்றியது; கவனக்குறைவால் தான் பிழைத்ததை வீட்டாருக்கு சொல்லவில்லை என கூசாமல் பொய் சொன்னார். இங்கிலாந்து போகும்போதுதான் காதலியோடு நெருங்கியதால் அவள் கர்ப்பிணியாகி விட்டதாகவும் கதை கட்டினார். இதுதொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடுப்பதற்கு நான்கு ஆண்டுகள் ஆனது. எஸ்டேட் நிலங்களை பகுதியாகப் பிரித்து 100 பவுன்கள் வீதம் விற்றதால் காஸ்ட்ரோ ஏராளமாக் கரன்ஸி பார்த்துவிட்டார். போலியான ஒரு நபரிடம் நில விஷயமாக ஒப்பந்தம் போடுகிறோம் என நிலம் வாங்கியவர்கள் அறியவில்லை.

வாரிசு வழக்கு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டபோது 90 சாட்சிகள் ஆஜராயினர். வீட்டுவேலை செய்த ஆயா, ஆபீசர் கமிஷனில் வேலை செய்தபோது இருந்த முன்னாள் ஆபீசர்கள் எல்லோரும் காஸ்ட்ரோ உண்மையான ரோஜர் என்று சாட்சி சொன்னார்கள்.

உண்மையில் 1834-ஆம் ஆண்டு, லண்டன் ஈஸ்ட்எண்ட் பகுதியில் பிறந்த ஆர்தர் ஆர்டன் என்றும் சொன்னார்கள். முடிவாக ஒரு சந்தேகம் எழுந்தது. உண்மையான ரோஜர் தனது பெயரில் முன் எழுத்துக்களை, கையில் பச்சை குத்தி இருந்தார். காஸ்ட்ரோ மற்றும் ஆர்டன் என்று சொல்லப்பட்ட இருவர் கையிலும் இந்த அடையாளம் இல்லை. எனவே காஸ்ட்ரோவின் வாரிசுரிமை செயலிழந்தது. ஆள்மாறாட்ட வேலைக்காக காஸ்ட்ரோ சிறையில் தள்ளப்பட்டார். பிறகு ஜாமீனில் விடுதலையானவர், அடுத்த ஓராண்டு அவன் இங்கிலாந்து முழுக்க சலிக்க சலிக்க சுற்றித்திரிந்தார்.
ரோஜர் டிச்போர்னே பிரபு’’ என்கிற டூப் பெயரோடு, எமோஷனலாக பொதுக்கூட்டங்களில் பேசி, தனது வழக்கை வாதாட நிதி சேர்த்தார். நியாயமாக வாதாடிய அரசு வக்கீல்களை சென்டிமென்ட்டுக்கு பிறவி அடிமையான மக்கள் கடுமையாக விமர்சித்தனர். போலீஸ் காவலோடுதான் வக்கீல்கள் கோர்ட் படி ஏறும் சூழல். இங்கிலாந்தில் 188 நாட்கள் ஜவ்வாய் இழுத்த வழக்கு தாமஸ் கேஸ்ட்ரோ வழக்குதான்! காஸ்ட்ரோ சார்பில் வாதாடிய வக்கீல் முன்னுரைக்காக 21 நாட்கள் செலவிட்டார். அவரது வாதங்களை தயாரித்து சொல்ல 23 நாட்கள் எடுத்துக் கொண்டார். இதில் நீதிபதியின் கணக்கு, 20 நாட்கள். காஸ்ட்ரோ சார்பில் 300 சாட்சிகள். அரசு தரப்பில் ஆஜரான 210 சாட்சியங்களில் காஸ்ட்ரோவை டுபாக்கூர்என்று சொன்ன சாட்சிகள்தான் மேக்சிமம்.

காஸ்ட்ரோ பொய்யாக பிரபுவின் பெயரைச் சொல்லி நாடகமாடினார் என்பது தெளிவாகவே நிரூபிக்கப்பட்டு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. 1884-ஆம் ஆண்டு சிறையிலிருந்து விடுதலையானார். தன் அனுபவங்களை ஒரு பத்திரிகைக்கு எழுதி விற்க முயற்சித்து அதிலும் படுதோல்வி. பிறகு நாடகங்களில் நடித்த்தோடு,  உண்மையான வாரிசு என்று பிரசாரம் செய்தும் பயனில்லை. ஏழ்மை பகல் வெளிச்சமாய் சூழ, நோய்வாய்ப்பட்டு, சுமார் ஓட்டல் அறையில் தனது 64 வயதில் காஸ்ட்ரோ உயிர் துறந்தார். ஆண்டு 1898.

டைரி எழுதும் பழக்கமுள்ள காஸ்ட்ரோ, தனது அன்றாட நிகழ்ச்சிகளை டைரியில் எழுதி வைப்பது வழக்கம். அதுவே அவனது வீழ்ச்சிக்கு முக்கிய காரணமானது.

‘‘தாமஸ் காஸ்ட்ரோ ஆகிய நான் ரோஜர் சார்லஸ் டிச்போர்னே பிரபுவாக மாறுவேன் என்பது என் நம்பிக்கை.பணபலமுள்ள மூளையற்ற மனிதர்கள், அதிபுத்திசாலிகளுக்காகவே படைக்கப்பட்டவர்கள்’’ என்று எழுதி வைத்திருந்தான் தனது டைரியில்!