ஏன்?எதற்கு?எப்படி? -Mr.ரோனி

Related image


ஏன்?எதற்கு?எப்படி?

விமானத்தில் பயணிக்கும்போது ஜெட் லாக் ஏன் ஏற்படுகிறது?

ஜெட் லாக் என்பது உடலின் உயிரியல் கடிகாரத்தோடு பகல்,இரவு ஆகிய காலச்சூழல்கள் ஆகியவை பொருந்தாமல் ஏற்படுத்தும் முரண்பாடு.
இதனால் உடல் உறக்கமிழந்து களைப்படையும். விமானத்தில் பறக்கும்போது ஜெட்லாக் ஏற்படும். லாஸ் ஏஞ்சல்ஸ் செல்லும் எட்டு நேரமண்டலங்கள் இடையில் வருவதால், உடல் அதனை புரிந்துகொள்ள முயன்று தடுமாறும். இங்கிலாந்து டூ தென் அமெரிக்கா செல்லும்போது நேர வித்தியாசம் இல்லை என்பதால் ஜெட் லாக் ஏற்படுவதில்லை. மனிதர்கள் மட்டுமல்ல தாவரங்கள், விலங்குகள்,பாக்டீரியாக்களுக்கும் கூட உயிரியல் கடிகாரம் உண்டு. சிலருக்கு ஜெட்லாக் தாக்குதல் தீவிரமாக இருப்பதன் காரணத்தை ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர்

2

ஏன்?எதற்கு?எப்படி?

பாம்புகள் தம் விஷத்தை எப்படி தயாரிக்கின்றன?

பாம்புகளின் தம் விஷத்தை உமிழ்நீர் சுரப்பி மூலம் தயாரித்துக்கொள்கின்றன. சாதாரணமாக எச்சிலில் உணவை செரிமானம் செய்வதற்கான என்சைம்கள் மட்டுமே இருக்கும். ஆனால் பாம்புகளின் உமிழ்நீரில் நச்சு என்சைம்கள் கூடுதலாக இணைந்துள்ளன.

ராஜநாகத்தின் உமிழ்நீரிலுள்ள புரத நச்சு பிற உயிரிகளின் புரதத்தை விட பெருமளவு மாறுபட்டது. இரையின் உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தியை முறியடிக்கும் வகையில் 50-100 என்ற அளவில் பாம்பின் உடலில் புரதம் உற்பத்தி ஆகிறது. இதனால் இரையை செரிக்கும்போது உடலில் ரத்த அழுத்தம், உடல் வெப்பநிலை, ரத்தம் உறைதல் ஆகிய பிரச்னைகள் ஏற்படுவதில்லை


3

ஏன்?எதற்கு?எப்படி?

ஜன்னல் கண்ணாடி வழியாக வரும் சூரிய ஒளியில் வைட்டமின் டி பெற முடியுமா?

சர்வ நிச்சயமாக நோ. சூரிய ஒளி நேரடியாக உடலின் தோலில் பட்டு வேதிமாற்றங்கள் நிகழ்ந்து வைட்டமின் டி உருவாகிறது. இதற்கு சூரிய ஒளியிலுள்ள புற ஊதாக்கதிர்களின் உதவி தேவைப்படுகிறது. ஜன்னல் கண்ணாடி இதனை தடுப்பதால், அதில் ஊடுருவி நமது உடல் மீது படும் சூரிய ஒளி மூலம் வைட்டமின் டி கிடைப்பதில்லை. எனவே மீன் அல்லது பால் சார்ந்த பொருட்களை சாப்பிடும் தேவை அதிகரிக்கிறது

4

ஏன்?எதற்கு?எப்படி?

எமல்ஷன் பெயிண்டில் என்ன இருக்கிறது?

எமல்ஷன் பெயிண்டில் சிறிய பாலிமர் மூலக்கூறுகள் நிறைந்துள்ளன. இவையே பெயின்ட் சுவரில் பூசப்படும்போது நீரால் பாதிக்கப்படுவதிலிருந்து பாதுகாப்பு கவசம் போல செயல்பட்டு சுவரை காப்பாற்றுகிறது.
வெள்ளை(டைட்டானியம் டைஆக்சைடு), மஞ்சள்,சிவப்பு,பழுப்பு(அயர்ன் ஆக்சைடு),பச்சை(குரோமியம் ஆக்சைடு),கருப்பு(கார்பன்) ஆகியவை 25% பெயிண்டில் பயன்படுகின்றன. நீரின் பங்கு 45% சதவிகிதம். சுவரில் சரியானபடி பெயிண்ட் பரவ அக்ரலிக் அல்லது எபோக்ஸி பாலிமர் உதவுகின்றன. கூடுதலாக சேர்க்கப்படும் வேதிப்பொருட்கள் பூஞ்சைகள்,பாசிகளை சுவரில் வளரவிடாமல் தடுக்கின்றன

நன்றி: முத்தாரம்
தொகுப்பு: ரோனி ப்ரௌன்

பிரபலமான இடுகைகள்