அட்டகாச அறிவியல்!
தூங்கும் ரோபோ
சோம்நாக்ஸ்!
உலகின் முதல் ரோபோவான
சோம்நாக்ஸ்,
வேர்க்கடலையின் ஷேப்பில் தலையணை போல உள்ளது. கை,கால்,மூக்கு என எதுவும் இல்லையென்றாலும் மனிதரைப் போல
மூச்சு விட்டு நல்ல தூக்கத்தை நமக்கு ஏற்படுத்த இந்த சோம்நாக்ஸ் உதவுமாம்.
சோம்நாக்ஸிலுள்ள
முனைப்பிகள் மூச்சுவிடும் நேரத்தையும் நாம் ஃபிக்ஸ் செய்து, அதன் மூச்சுவிடும்
ஸ்டைலை ரசிக்கலாம். 2 கி.கி எடைகொண்ட ரோபோவுடன்
உங்கள் மூச்சு சிங்க் ஆனால் உங்களது மனமும் உடலும் ரிலாக்ஸ் ஆகிறது என்று அர்த்தம்.
"தூங்குவதற்கு இருபது நிமிடங்களுக்கு முன்பாக சில பயிற்சிகளை செய்வது
நல்ல தூக்கத்திற்கான சிறந்த வழி" என்கிறார் தூக்க வல்லுநர்
நிதுன் வர்மா. இதில் அருவி,மழை என வெவ்வேறு
சூழல்களை செட் செய்து ஜம்பமாக தூங்கும் வசதி உண்டு. ரூ.32,022
2
சாக்லெட் ட்ரீட் வேண்டாம்!
சாக்லெட் கேக், சாண்ட்விச்
பிஸ்கட் என வெளுத்துக்கட்டும் வெள்ளச்சாமி வகையறாக்களுக்கு எந்த அலர்ட்டும் இல்லை.
நம் காலடியில் நின்று, பங்காளியாக செல்லச்சண்டையிடும்
பப்பிகளுக்குத்தான் சாக்லெட் ஆகாது என லிவர்பூல் பல்கலைக்கழக ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.
கேக்கில் பயன்படுத்தும்
திராட்சை,
வேதிப்பொருட்களாக ரைசின் ஆகியவை நாயின் கிட்னியை செயலிழக்கச்செய்யும்
என ராயல் கால்நடை கல்லூரி எச்சரித்துள்ளது. நவ.2012-மே 2017 வரை இங்கிலாந்தில் எடுத்த டெஸ்ட்களில் அடிப்படையில்
சாக்லெட்களை உணவாக சாப்பிட்ட நாய்களின் தியோபுரோமைன் அளவு 60% எட்டியிருந்தது. மேலும் வாந்தி,இதயத்துடிப்பு ஆகிய பிரச்னைகளை ஏற்பட்டிருந்தன. எனவே
நாய்களுக்கு சாக்லெட் கலந்த உணவுகளை தவிர்ப்பது அதன் உடல்நலனுக்கு நல்லது.
3
மரிஜூவானா ஒயின்!
அமெரிக்காவின்
சில மாநிலங்களில் மரிஜூவான சட்டப்பூர்வமாகியுள்ளது. இதன் விளைவாக மரிஜூவானா
தொழில்துறை 2026 ஆம் ஆண்டில் 50 பில்லியன்
டாலர் மதிப்புடையதாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது
அவ்வகையில் மரிஜூவானா கொண்ட ஆல்கஹால் இல்லாத Sauvignon Blanc மதுவகை தயாரிக்கப்பட்டுள்ளது.
கலிஃபோர்னியா மாநிலத்தில்
மரிஜூவானாவை லீகலாக பயன்படுத்தலாம் என்றாலும் ஆல்கஹாலுடன் அதனை சேர்க்க தடையுள்ளது. சோனோமா
பகுதியைச்சேர்ந்த ரெபல்கோஸ்ட் வைனரி நிறுவனம் மாற்றி யோசித்த ஐடியாதான் இது.
அந்நிறுவனத்தின் அலெக்ஸ் ஹோவே, சிப் ஃபோர்சைதே
ஆகிய இருவரின் சிம்பிள் ட்ரிக்தான் ஆல்கஹால் நீக்கிய மரிஜூவானா ஒயின்.
"ஆல்கஹாலின் ஹேங்ஓவர் பிரச்னைகளின்றி மரிஜூவான கலந்த ஒயினை நீங்கள்
குடிக்கலாம்" என தைரியம் தருகின்றனர் அலெக்ஸ் மற்றும் சிப்.
ரூ.3,840.
4
என்ன செய்யும்
ஆல்கஹால்?
நம் மூளையிலுள்ள
அனைத்து செயல்பாடுகளுக்கும் அடிப்படை நியூரோ ட்ரான்ஸ்மிட்டர்கள்தான். மூளையிலுள்ள
செல்கள் பல்வேறு வேதிப்பொருட்களின் வழியே தமக்குள் தொடர்பு கொள்பவை.
சில செல்களில்
இச்செயல்பாடு அதிகரிக்கும்போது பிற செல்களின் செயல்பாடு குறைந்துவிடும். உடலை ரிலாக்ஸாக்க
மூளை சுரக்கும் வேதிப்பொருள் GABA. பாரில் உடலை கூலாக்க ஆல்கஹாலை
குவார்ட்டர்,ஹாஃப் என உள்ளிறக்கும்போது, மூளையில் GABA எக்கச்சக்கமாக சுரக்கும். இதனால் நம் மனம், உடல் இரண்டுமே இறுக்கம் தளர்ந்து நெகிழ்வாகிறது.
நியூரோ ட்ரான்ஸ்மிட்டரான குளூடமேட்டின் அளவையும் குறைப்பதால்,
நரம்பு அமைப்புகளின் செயல்படும் திறன் குறைகின்றன. இறுதியாக மகிழ்ச்சி உணர்வை ஏற்படுத்தும் டோபமைன் அளவை அதிகரிப்பதால்,
முதலில் ஜாலிக்காக குடிப்பவர்கள் பின்னாளில் குடிநோயாளிகளாகிறார்கள்.
சூப்பர் கேம்ஸ் 2017!
சூப்பர் கேம்ஸ் 2017!
Resident Evil 7: Biohazard
ஏழாவது பார்ட் கேம்,
முழுக்க சர்வைவல் விஷயங்களுக்கே முக்கியத்துவம் கொடுத்துள்ளது.
சாதாரண ஒருவர், குறைந்த ஆயுதங்களுடன் அறை முழுவதும்
உள்ள அரக்க மனிதர்களை சமாளிப்பதுதான் கேமின் சவால். கேப்காம்
தயாரிப்பு. கதை மற்றும் ஓவியம், Richard Pearsey ,Tomonori Takano
Toshihiko Tsuda,
Hiroyuki Chi
Horizon Zero Dawn
உலகம் அழிவதற்கு முன்பு வாழ்ந்த மார்க்கண்டேய ரோபாட் டைனோசர்களோடு அலோய்
என்ற போராளியின் வாழ்வா,சாவா போராட்டம்தான் கதை. கேமின் சில காட்சிகளை ஸ்க்ரீன்ஷாட்டாக
சேமிக்கும் அளவு அழகு கொஞ்சுகிறது. சிம்பிளான வடிவமைப்பில் பல்வேறு
சவால்களும் நுணுக்கமாக உருவாக்கப்பட்டுள்ளன. கொரில்லா கேம்ஸ்
தயாரிப்பு. கதை மற்றும் ஓவியம், Jan-Bart van Beek
John Gonzalez.
Legend of Zelda:
Breath of the Wild
ஹீரோ லிங்க், ஹைரூல்
அரசை வீழ்த்த முயலும் கனோன் என்ற வில்லனை வீழ்த்துவதுதான் கதை. ஹீரோ வில்லனை அழிக்க அசரீரி உதவுகிறது. ஹெச்டி தரத்தில்
திறந்தவெளி இடங்கள் அசத்துகின்றன. நின்டென்டோ நிறுவனம் மார்ச்
2017 இல் ரிலீஸ் செய்த ஹிட் கேம் இது.

தொகுப்பு: ராஜேஷ் படிப்பள்ளி, ரீது
நன்றி: முத்தாரம்