ஜாலி பிட்ஸ்!


Image result for 100 peso



பிட்ஸ்!

சில்லறை டார்ச்சர்!

சீனாவின் புடியன் நகரிலுள பிஎம்டபிள்யூ டீலர் ஆபீஸ் மாலை திடீரென மூடப்பட்டுவிட்டது பலருக்கும் ஷாக். காரணம் சீனரின் கார் வாங்கும் ஆசைதான். காரில் விலையான 11 ஆயிரம் டாலர்களை பத்து பெட்டிகளில் சில்லறையாக கொண்டுவந்துவிட்டார். கடை ஊழியர்கள் ஷட்டரை இறக்கி, கைகளில் ரத்தம் கசிய சில்லறைகளை எண்ணியிருக்கிறார்கள்.

அதிபர் இல்லாத கரன்சி!

பிலிப்பைன்ஸ் சென்ட்ரல் பேங்க், புதிதாக அச்சிட்ட 100 பெசோ கரன்சி நோட்டுக்களை திரும்ப பெற உள்ளது. ஏன்? அதிபர் மானுவேல் ரோக்ஸாஸின் முகம் நோட்டின் பிரிண்டிங்கில் மிஸ்ஸானதே காரணம். இதனை இணையத்தில் எர்லா அன்னே என்ற பெண் பதிவிட்டு பிலிப்பைன்ஸ் அரசின் மானத்தை வாங்கிவிட்டார்.

காக்பிட்டில் பறவை!

அமெரிக்காவின் மிச்சிகனிலிருந்து கிளம்பிய ஜார்ஜியா விமானம் வேகமாக கீழிறங்கும் சூழ்நிலை. பாமா?, கடத்தலா? ம்ஹூம் காக்பிட்டில் பறவை என்ட்ரியானதுதான் காரணம். மீண்டும் டெட்ராய்டில் கீழிறக்கப்பட்டு உள்நுழைந்த ஹம்மிங்பேர்ட்டை விரட்டி விமானத்தை ஸ்டார்ட் செய்து பறந்திருக்கிறார்கள்.

தடைக்கு எதிராக தீவு!

நியூசிலாந்தின் தைருவாவைச் சேர்ந்த குடிமகன்கள் அரசின் புத்தாண்டு மதுதடைக்கு எதிராக என்ன செய்தார்கள் தெரியுமா? கடலில் மணல்திட்டை கிரியேட்டிவாக உருவாக்கி ஏழு நண்பர்களும் உற்சாக பானம் அருந்தி அரசை வம்புக்கு இழுத்துள்ளனர். மது அருந்தி தகராறு ஏற்படுவதால்தான் தடை அமுலானது.


நன்றி: குங்குமம்
தொகுப்பு: கோமாளிமேடை டீம்