அறிவியல் பக்கங்கள்!






கொசுக்களை ஒழிக்கும் ட்ரோன்!

விபத்துக்களால் ஏற்படும் மரணத்தை விட கொசுக்களால் ஏற்படும் தொற்றுநோய் மரணங்கள் அதிகம். மலட்டுத்தன்மை கொண்ட கொசுக்களை ட்ரோன் மூலம் பரப்பும் திட்டத்தின் மூலம் கொசுக்களின் உற்பத்தியை தடுக்கும் திட்டம் செயல்படவிருக்கிறது என்கிறார் பிபிசியின் செய்தியாளர் கிறிஸ் ஃபாக்ஸ்.


உலகில் கொசுக்கள் ஆண்டுதோறும் 700 மில்லியன் மக்களை தாக்கி மலேரியா,டெங்கு, ஜிகா உள்ளிட்ட நோய்களை பரப்புகிறது. கொசுக்களை அழிக்கும் முயற்சி நடக்கும் இடம் மனிதர்களும் செல்ல அனுமதி இல்லாத பாதுக்காப்பட்ட பகுதி என்பதால் WHO இம்முயற்சியை சங்கடத்துடன் கவனிக்கிறது. வீரோபாடிக்ஸ் நிறுவனம் 2018 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மத்திய அமெரிக்காவில் ட்ரோன் சோதனையை நடத்தவுள்ளது.  "4 -8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் ஆண் கொசுக்கள் எடுத்து செல்லப்படவிருக்கின்றன. அடிபடாமல் அதேசமயம் மயக்கநிலையில் எடுத்துச்செல்லும் கட்டாயம் உள்ளது" என்கிறார் ஸ்பெக்ட்ரம் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளரான கிளாப்டாக்ஸ்.

2

சீனாவின் ஏஐ போலீஸ்!

சீனா அண்மையில் மனிதர்களின் உதவியற்ற ஏஐ போலீஸ் ஸ்டேஷன்களை நாட்டின் முக்கிய நகரங்களில் அமைக்கவிருப்பதாக கூறியுள்ளது. இதில் லைசென்ஸ் எடுக்கும் தேர்வுகள் மற்றும் ரெஜிஸ்ட்ரேஷட் விஷயங்களை செய்துகொள்ள முடியுமாம்.
 ஸ்டேஷனுக்கு உள்ளே வருபவரின் முகத்தை ஸ்கேன் செய்து கிரிமினல் வரலாற்றையும் தோண்டும் திறன் கொண்ட ஏஐ ரோபோக்கள் உருவாக்கப்பட இருக்கின்றன. ஹைடெக் ஸ்டேஷன்கள் வரவேற்று பெற்றால் பிற இடங்களில் அமைக்கும் திட்டத்தை சீன அரசு செயல்படுத்தும். "சமூகங்கள் விரைவில் விழிக்காவிட்டால் சமநிலை தவறும்போது ஏற்படும் விளைவுகளை சமாளிக்கவேண்டி வரும்" என்கிறார் ரோபோடிக்ஸ் வல்லுநர் இராக்கிலி பெரிட்ஸ். 2013 ஆம் ஆண்டு ஆக்ஸ்ஃபோர்டு செய்த ஆய்வுப்படி 20 ஆண்டுகளில் ஆட்டோமேஷன் தொழில்நுட்பம் உலகை ஆளும் என்ற நிலையில் சீனாவின் அறிவிப்பு இதனை உண்மையாக்கி உள்ளது.
 3
புதிய பிட்கரன்சி ஈதிரியம்!

அரசியல் பிரச்னைகள் கொண்ட நாடுகளில் தன் சொத்துக்களை பாதுகாப்பாக முதலீடு செய்ய ஏற்றவை பிட் கரன்சிகளே. அதில் புதிதாக ஈதிரியம் எனும் கரன்சி சந்தையில் என்ட்ரி ஆகியுள்ளது.

2013 ஆம் ஆண்டு வைட்டாலிக் புடெரின் மற்றும் கெவின் வுட் ஆகியோரினால் உருவாக்கப்பட்டது ஈதிரியம் டிஜிட்டல் கரன்சி. ETH/BTC, ETC/BTC, ETC/ETH, ETH/USDT ஆகிய முறைகளில் பயன்படுகிறது.

ஈதிரியம் என்ற பெயர் World of Warcraft (WoW) என்ற வீடியோ கேமிலிருந்து பெறப்பட்டது. தொடக்கத்தில் 200ETH என BTCக்கு எதிராக விலை நிர்ணயிக்கப்பட்டது. ஈதிரியத்தின் மதிப்பு 1200 டாலர்களை தாண்டிவிடும் என்பது டெக் மனிதர்களின் எதிர்பார்ப்பு.

ஈதிரியத்தோடு பார்க்லேய்ஸ்,யுபிஎஸ் உள்ளிட்ட புகழ்பெற்ற 11 வங்கிகள் இணைந்துள்ளன. முதலில் வெளியான ஈதிரியத்தின் பெயர், ப்ரான்டியர்(2015). பிட்காயின்போல அனைத்து பிஸினஸ்களுக்கும் பயன்படும் டிஜிட்டல் கரன்சி ஈதிரியம் அல்ல; சில பயன்பாட்டு வரம்புகளைக் கொண்டது.  


 4
ஆப்பிரிக்க அமெரிக்க கண்டுபிடிப்பாளர்கள்! -கா.சி.வின்சென்ட்

THOMAS L. JENNINGS (1791-1859)

அமெரிக்காவில் பிறந்த தாமஸ் எல் ஜென்னிங்ஸ், ஆப்பிரிக்க அமெரிக்கர்களில் தன் கண்டுபிடிப்புக்காக முதன்முதலில் காப்புரிமை பெற்றவர். நியூயார்க்கில் டெய்லராகவும், ட்ரை க்ளீனராகவும் பணியாற்றியவர், "dry scouring" எனும் தனது புதிய முறைக்காக 1851 ஆம் ஆண்டு பேடன்ட் பெற்றார். பாரீசைச் சேர்ந்த  டெய்லரான ஜீன் பாப்டிஸ்டே வெளுக்கும் முறையை கண்டறிவதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பே தாமஸ் கண்டுபிடித்து சாதித்த சாதனை இது. எதிர்ப்புகள் கிளம்பினாலும் பேடன்ட் மூலம் கிடைத்த பணத்தை அடிமை முறையை எதிர்க்கவும் குடும்பத்தை வறுமையிலிருந்து மீட்கவும் செலவழித்தார்.


MARK E. DEAN

ஐபிஎம் கம்ப்யூட்டரை பயன்படுத்தி இருந்தால் நீங்கள் மார்க் இ. டீன் என்பவருக்கு தேங்க்ஸ் சொல்ல வேண்டும். 1957 ஆம் ஆண்டு பிறந்த மார்க், கம்ப்யூட்டர் எஞ்சினியர். ஐபிஎம்மில் பணியாற்றிய மார்க்கின் டீம்தான் பிரிண்டர்,மோடம்,கீபோர்ட் ஆகியவற்றை பயன்படுத்துவதற்கான வன்பொருளை ISA Bus வடிவமைத்தது. இதன் பின்தான் கம்ப்யூட்டர் ஆபீஸில் பயன்பாட்டுக்கு வந்தது. கலர் மானிட்டருக்கான ஆராய்ச்சிலும் டீனின் பங்குண்டு. அன்று ஜிகாஹெர்ட்ஸ் சிப் உள்ளிட்ட 20 பேடன்டுகளை மார்க் டீன் வைத்திருந்தார். தற்போது டென்னிசி பல்கலையின் பேராசிரியராக பணிபுரிகிறார் மார்க் டீன்.


DR. SHIRLEY JACKSON

தற்போது நியூயார்க்கில் பணிபுரியும் தியரெட்டிகல் இயற்பியல் ஆராய்ச்சியாளரான ஷிர்லி, ஏடி&டி பெல் ஆய்வகத்தில் பணிபுரிந்தபோது, எளிதில் கையாளும் ஃபேக்ஸ், சோலார் செல்,ஃபைபர் ஆப்டிக் கேபிள்கள்,காலர் ஐடி,வெயிட்டிங் ஆகியவை அம்மணியின் அரிய கண்டுபிடிப்புகள். எம்ஐடியில் பிஹெச்டி படித்தவரும்,  அமெரிக்காவின் அணு ஆயுத ஆலோசனைக்குழுவின் உறுப்பினராக இடம்பெற்ற ஒரே கருப்பினப் பெண்ணும் ஷிர்லிதான்.

CHARLES RICHARD DREW (1904-1950)

அமெரிக்காவிலுள்ள ரத்த வங்கிகள் உருவாக்கத்தின் பிரம்மா இவர்தான். இரண்டாம் உலகப்போரின்போது நியூயார்க் மருத்துவமனையில் ரத்த பிளாஸ்மாக்களை பெற்று ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பி வீரர்களின் உயிரைக்காப்பாற்ற உதவினார் சார்லஸ். ராணுவத்தின் நிறவெறியால் பணிவிலகிய மருத்துவர் சார்லஸ், பின்னாளில் மருத்துவராகவும் பேராசிரியராகவும் பணிசெய்தார்.
 5
எரிபொருளாகும் காஃபி!

காஃபி குடித்தபின் பில்டரில் வீணாகும் காஃபித்தூளை எரிபொருளாக பயன்படுத்தமுடியும் என பயோபீன் நிறுவனம் சத்தியம் செய்கிறது. பயோபீன், ஷெல் நிறுவனத்தோடு இணைந்து இந்த பயோஃப்யூல் ஐடியாவை மேம்படுத்த உள்ளது.

"லண்டனிலுள்ள பஸ்களில் காஃபியிலிருந்து எடுக்கும் காஃபி ஆயில் மற்றும் மினரல் ஆயில் ஆகியவற்றை எரிபொருளாக பயன்படுத்தவிருக்கிறது." என்கிறது ஷெல் நிறுவனம். லண்டனில் மட்டும் ஆண்டுக்கு 2 லட்சம் டன்கள் காஃபித்தூள் கழிவுகள் உருவாகின்றன. இதிலிருந்து உருவாகும் மீத்தேன் கார்பன் டை ஆக்சைடைவிட தீங்கானது. இங்கிலாந்தில் குவித்து வைக்கப்படும் கழிவு, குப்பைகளுக்கும் வரி உண்டு. "B20 என்ற பெயரில் காஃபி ஆயில் மற்றும் பிற ஆயில்களை பயன்படுத்தி எரிபொருளை தயாரிக்கிறோம்" என்கிறார் பயோபீனின் நிறுவனர் ஆர்தர் கே. 15% கார்பன் வெளியீட்டை இந்த எரிபொருள் பயன்பாடு தடுக்கிறது. உடனடியாக கடைகளில் கிடைக்காவிட்டாலும் முயற்சி பாராட்டத்தக்கதுதானே!
6
கிரிப்டோ கரன்சிக்கு டெபிட் கார்டு!
பிட்காயின், ஈதர் ஆகிய கிரிப்டோ கரன்சிகள் சாதாரண கரன்சிகளைக் காட்டிலும் பாதுகாப்பு விஷயத்தில் பலபடி மேல் என்பது கண்டிஷன் அப்ளை கஷ்டங்களும் கிடையாது. ஆனால் என்ன சேட்டா கடையில் டீ வித் பட்டர்பிஸ்கட் வாங்க பிட்காயினை பயன்படுத்த முடியாது.
தற்போது லண்டன் பிளாக் எக்ஸ்சேஞ்ச் என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம் ப்ரீபெய்டு விசா டெபிட் கார்டை(டிராகன் கார்டு), கிரிப்டோ கரன்சிகளை பயன்படுத்தும்படி ரிலீஸ் செய்துள்ளது. சென்ட்ரா கார்டு,டோக்கன் கார்டு ஆகிய கிரிப்டோ கார்டுகளின் வரிசையில் விசா கிரிப்டோ கார்டும் இணைந்துள்ளது. இதில் மாற்று கரன்சி முறையை ஏற்கும் கடைகளில் இந்த டெபிட் கார்டை பயன்படுத்தி கிரிப்டோ கரன்சிகளை சிதறவிடலாம். இதில் LBX எக்சேஞ்ச் வாங்கும் பொருட்களுக்கு பணத்தை பவுண்டுகளில் செலுத்திவிட்டு அத்தொகையை உங்களது கிரிப்டோகரன்சி வாலட்டில் இருந்து சார்ஜ் செய்யும் வசதி அறிமுகமாகிவிட்டது. இங்கிலாந்தில் விரைவில் சேல்ஸ்க்கு வரும் டிராகன் கார்டின் விலை 20 பவுண்டுகள்.

தொகுப்பு: கா.சி.வின்சென்ட், விக்டர் காமெஸி
நன்றி: முத்தாரம்