இதோ இதோ அறிவியல் !

Image result for elephant illustration


நிஜமா? பொய்யா?

யானைகள் எதையும் மறப்பதில்லை.

பொய்யல்ல; உண்மை. விலங்குகளில் பெரிய மூளை கொண்டதோடு அதை சீரியஸாக பயன்படுத்தும் விலங்கும் யானைதான். யானை தன் குட்டியை பிரிந்து 23 ஆண்டுகள் பிறகும் அடையாளம் கண்டுகொள்ளும் புத்திசாலித்தனம் யானைக்குண்டு. உணவுக்கு செல்லும் பாதையையும் காம்பேக்டாக அமைத்து கூட்டமாக வாழும் பேருயிர் யானை மட்டுமே.

லெமிங்க்ஸ் தற்கொலை செய்துகொள்ளுமா?

நிச்சயம் இல்லை. 1530 களில் ஆய்வாளர் புயலில் வானிலிருந்து லெமிங்க்ஸ்(ஆர்க்டிக் பகுதி உயிரி) விழுகின்றன என வதந்தி பரப்பினார். இடம்பெயர்வின்போது லெமிங்க்ஸ் நீரில் குதித்து வேறிடம் செல்லும் பயணத்தில் அவை சில இறக்கின்றன. 1958 ஆம் ஆண்டு ரிலீசான டாகுமெண்டரியில் இடம்பெற்ற தவறான செய்தி இது.


கோழிகளுக்கு பற்களுண்டா?

கிடையாது. கற்காலத்தில் வாழ்ந்த பாட்டன் பூட்டன் கோழிகளின் முன்னோர்களுக்கு பற்கள் இருந்திருக்க சான்ஸ் உண்டு. இன்று பரிணாம வளர்ச்சியடைந்துள்ள கோழிகளுக்கு பற்கள் கிடையாது. அப்படி பற்கள் இருந்தால் அவை அசைபோட்டு சாவகாசமாக சாப்பிட முடியுமே!


 2

மோடி விமானம் ரெடி!

 புதிய விஷயங்களை உருவாக்குவதுதானே கண்டுபிடிப்பு. மும்பையைச் சேர்ந்த இளைஞர் தன் வீட்டை விற்று அரும்பாடுபட்டு தானே விமானத்தை உருவாக்கியுள்ளார்.

மும்பையைச் சேர்ந்த அமோல் யாதவ், தன் வீட்டை விற்று நான்கு கோடி ரூபாய் திரட்டி, தன் ஆசைக்கனவான ஆறு பேர் அமர்ந்து செல்லும் விமானத்தை உருவாக்கியிருக்கிறார்.அதோடு விமானத்துக்கு விக்டர் டாங்கோ நரேந்திர மோடி தேவேந்திர என்றும் பெயர்சூட்டி நெகிழ்ச்சியில் நெஞ்சம் விம்மியிருக்கிறார். பின் விமானத்துக்கு சான்றிதழையும் மகாராஷ்டிரா முதல்வர் பட்னாவிசிடம் பெற்று சாதித்துள்ளார். பத்தொன்பது ஆண்டு தயாரிப்பிலிருந்து விமானம் TAC-003 வைத் தயாரித்த அமோல் யாதவ், ஜெட் ஏர்வேஸின் முன்னாள் பைலட். 2011 ஆம் ஆண்டு விமானம் ரெடியானாலும் சர்டிஃபிகேட் கிடைக்க  ஆறு ஆண்டுகள் வெயிட் செய்திருக்கிறார். பொறுமை நல்லது!

3
பிட்ஸ்! பிட்ஸ்!

1986 ஆம் ஆண்டு நாசா விண்ணில் செலுத்திய சேலஞ்சர் நடுவானில் வெடித்து சிதறியது. இதனை முன்கூட்டியே யூகித்த தயாரிப்பு எஞ்சினியரின் எச்சரிக்கையும் மீறி குளிர்வானிலையில் ராக்கெட்டை செலுத்தியதால் ஏற்பட்ட விளைவு இது.

எடிசன் நடத்திய நேர்காணல்களில், ஒரு கப் சூப் தேர்வாளர்களுக்கு வழங்கப்படும். சூப்பை டேஸ்ட் பார்க்கும் முன்பே உப்பு அல்லது மிளகு சேர்த்து பிறகு  பருகினால் வேலை கிடையாது. ஆராய்ச்சி மனநிலை அவசியம் என்பதற்கான தேர்வு இது.

ஆண்ட்ரே ஸ்டாண்டர் என்ற தென் ஆப்பிரிக்க போலீஸ்காரர், திடீரென அரஸ்ட்டானார். ஏன்? லஞ்ச் பிரேக்கில் வங்கிகளை கொள்ளையடித்துவிட்டு கமுக்கமாக கடமை செய்த விஷயம் லீக்கானதுதான் காரணம்.

500 டன்களுக்கு மேல் சரக்குகளை ஏற்றிச்சென்றால் அதனை கப்பல் என அழைக்கலாம். படகுகளை கப்பலில் ஏற்றிச்செல்லலாம்.

இரண்டாம் உலகப்போரில் ஒரு அமெரிக்கருக்கு பதினொரு ரஷ்ய வீரர்கள் என்ற விகிதத்தில் காயம்பட்டு இறந்தனர்.

நன்றி: முத்தாரம், குங்குமம்
தொகுப்பு: ரோனி, கா.சி.வின்சென்ட் 

பிரபலமான இடுகைகள்