ஒரு படம் ஒரு ஆளுமை!

லோகோ: திலீப் பிரசாந்த்


குங்குமத்தின் சீனியர் சப் எடிட்டர் த.சக்திவேல் முத்தாரம் இதழில் குழந்தைகள் சினிமா, சிறந்த குழந்தை செயல்பாட்டாளர் ஒருவரைப் பற்றியும் வாராவாரம் அறிமுகப்படுத்தி 16.3.2018 முதல் இனிய தொடராக எழுதவிருக்கிறார். 

குங்குமம்  வார இதழில் குழந்தைகள் பள்ளி, நாடக கலைஞர், குழந்தைகள் எழுத்தாளர் பற்றி கட்டுரைகளை பேரார்வமுடன் எழுதுபவர் நண்பர் சக்திவேல். சமூகத்தில் புறக்கணிக்கப்பட்டவர்கள் குறித்து அவர் எழுதிய மறுபக்கம் என்ற தொடர் பலருக்கும் நினைவிருக்கலாம். குங்குமம் தோழி இதழில் பெண்கள் மைய சினிமா எழுதி வந்ததை வாசித்து விட்டு அவரிடம் கருத்து கூறும்போது எதேச்சையாக "முத்தாரம் இதழில் ஏதாவது குழந்தைகள் தொடர்பாக எழுதலாமா?" என்று கேட்டார். ஆனால் அவர் கேட்டசமயத்தில் இடம் ஒதுக்கி கொடுக்க முடியாத நெருக்கடி.

முதன்மை ஆசிரியரிடம் அனுமதி பெற்று இதோ இப்போது சக்திவேலின் ஆசையை நிறைவேற்றியாயிற்று. அவருக்கு முதலில் ஒருபக்கம் தரவே நினைத்தோம் என்றாலும் குழந்தைகளைச் சுற்றி அவர்களின் வானை விரிவாக்கும் ஆளுமைகளைப் பற்றி எழுதினால் என்ன என்று யோசனை. உடனே இருபக்கம் ஒதுக்கியதும் சக்திவேலுக்கு அவ்வளவு மகிழ்ச்சி. எப்போது கொடுக்கவேண்டும் என்பதுதான் அவரது முதல்கேள்வி. இவ்வகையில் குழந்தைகளுக்கும் பெரியவர்களின் உருவத்திலுள்ள குழந்தைகளையும் இப்பகுதி உற்சாகப்படுத்தும் என நம்புகிறோம்.  

ச.அன்பரசு
முத்தாரம் உதவி ஆசிரியர்