அறிவியல் கற்போம்!

Image result for micro cow

மைக்ரோ பசுக்கள் வந்தாச்சு!

இங்கிலாந்தின் ஹியர்ஃபோர்ட்ஷையர் ஜே பிரிட்டைன் மினி பசுக்களை உருவாக்கி வளர்த்து வருகிறார். பசுக்களின் அதிகபட்ச உயரம் 36 இன்ச்தான்.

Zebus எனப்படும் இந்த மைக்ரோ பசுக்கள் இலங்கையை பூர்வீகமாக கொண்டவை. "மினியேச்சர் பசுககள் குறித்து முன்பே அறிந்தேன் என்றாலும் அதை வளர்க்கும் வாய்ப்பு இப்போதுதான் கிடைத்துள்ளது" என பெருமிதப்படுகிறார் பிரிட்டைன்.

சாதாரணமாக ஆறு அடி வளரும் இந்த மைக்ரோ மாடுகள் அமெரிக்காவில் பெட் விலங்குகளாக மாறியுள்ளன. அமெரிக்காவின் ஐயோவாவில், டஸ்டின் பில்லார்டு மைக்ரோ பசுக்களை வளர்த்து அதன் இனத்தை பெருக்கி வருகிறார். 1992 ஆம் ஆண்டு பத்து ஏக்கர் நிலம் வாங்கி மூன்று மைக்ரோ பசுக்களை வாங்கி பண்ணை தொடங்கியிருக்கிறார். "சிறிய பசுக்கள் என்பதால் உடல்நல பிரச்னையெல்லாம் ஏற்படவில்லை. ஆரோக்கியமாக வளர்ந்து வருகின்றன" என்கிறார் டஸ்டின் பில்லார்டு.
space:none'> 

கம்யூனிச தலைவரான லெனினின் ஆங்கிலப்பேச்சில் ஐரிஷ் நாட்டு உச்சரிப்பு முறை தூக்கலாக இருக்கும்.

 2
புது காரின் வாசம்! -விக்டர் காமெஸி

புத்தாண்டில் புதுகார், பைக், எலக்ட்ரிக் என வாங்கி குவிக்க லிஸ்ட் ரெடி செய்திருப்பீர்கள். புதிதாக வாங்கிய காரின் வாசனைக்கு என்ன காரணம் என யோசித்திருக்கிறீர்களா?

பெயிண்டில் உள்ள விஓசி எனப்படும் Volatile Organic Components பொருட்களே உற்சாக போல்ட் மணத்துக்கு காரணம். இவற்றை அதிகநேரம் உள்ளிழுக்கும்போது ஆபத்துக்கு காலிங்பெல் அடிக்கிறீர்கள் என்று அர்த்தம்.

பிறந்த குழந்தையின் வாசம், பேக்கரியின் வெனிலா வாசனை,மண்வாசம்,காஃபி,சாக்லெட் ஆகிய மணங்கள் மனதில் உற்சாகம் உள்ளிட்ட உணர்வுகளை தூண்டுகின்றன. காரின் லெதர் பொருட்களிலும் மணம்பரப்பும் வேதிப்பொருட்களை கலந்து தயாரிப்பது இன்றைய ட்ரெண்ட். அரோமாதெரபி எனப்படும் இதனை 2013 ஆம் ஆண்டு நிசான் கார் நிறுவனம் ஓர் கண்காட்சியில் க்ரீன் டீ சென்ட் மூலம் அறிமுகப்படுத்தியது. இதனை கான்செய் முறை  எனலாம்.

2014 ஆம் ஆண்டு ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் குளித்து ஃப்ரெஷ்ஷாக பவுடர் அடித்த குழந்தையின் நறுமணத்தை டைம்ஸ் ஆஃப் இந்தியா பேப்பரில் பயன்படுத்தியது. இன்று அகர்பத்தி விளம்பரங்களும் அப்படி சில சமயங்களில் வசீகரிக்கின்றன.

ஆடி,ஃபோர்டு உள்ளிட்ட முன்னணி கார் நிறுவனங்களில் வாசனைகளை டிசைன் செய்வதற்கென அதிநுட்ப துப்பறியும் சாம்பு மூக்குகளோடு குழுக்கள் உண்டு. 2015 ஆம் ஆண்டு போர்டு கம்பெனி செய்த ஆய்வில், ஓரு வாரத்தில் பனிரெண்டு மணிநேரத்திற்கு அதிகமாக இந்தியர்கள் தமது காரில் பயணித்திருப்பது தெரிய வந்திருக்கிறது. இது சீனா, ஆஸ்திரேலியா,தாய்லாந்து ஆகிய நாட்டினரைவிட ஒப்பீட்டில் அதிகம்.

பாக்ஸ் 1
My Shaldan Lemon
60 நாட்கள் தாங்கும் சிட்ரஸ் நறுமண சென்ட். 500 பழங்களிலிருந்து எடுக்கப்படும் லைமோனன் ஆயில் உள்ளது.சோம்பல் மற்றும் மன அழுத்தம் போக்கும். விலை ரூ.272.
Godrej aer Twist
60 நாட்கள் நீடித்து நிற்கும். ஜெல் டெக்னாலஜியில் 5 க்கும் மேற்பட்ட வல்லுநர்களின் தரமான நறுமணங்கள் உண்டு. ரூ.379
Involve Your Senses IONE01 Musk Organic
அம்மோனியா இல்லாத சென்ட். எஸ்யூவிக்களுக்கான ஸ்பெஷல் தயாரிப்பு. ரூ.350
Areon Wish Gel Air Freshener
நறுமண ஆயில்களைக் கொண்ட ஜெல். 8 வாரங்கள் நறுமணம் வீசும். ரூ.269

 3

 4

புற்று செல்களை அழிக்கும் ரோபோ ஸ்பெர்ம்!

ஜெர்மனியைச் சேர்ந்த லெய்ப்னிஷ் இன்ஸ்டிடியூட், கர்ப்பபை வாய் புற்றுநோயை கீமோதெரபி மூலம் அழிப்பதற்கான புது டெக்னிக்கை கண்டுபிடித்துள்ளனர்.

காளையின் விந்தணு செல்களை(doxorubicin) சிறிய புற்றுநோய் கட்டிகளை அழிக்க பயன்படுத்தலாம் என ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தருகின்றனர். விந்தணுக்கள் இரும்பு மூலம் வழிகாட்டப்பட்டு புற்றுநோய் செல்களை கண்டறிந்து அவற்றை அழிக்கின்றன. இவ்வகையில் 87 சதவிகித புற்றுசெல்களை அழிக்கமுடியும். அமெரிக்காவில் இந்தாண்டு மட்டும் 12,820 பெண்கள் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 4,210 பெண்களுக்கு இறப்பு உறுதியாகிவிட்டது. கீமோ மருந்தோடு விந்தணு செல்களை அனுப்பி புற்றுசெல்களை அழிப்பது இறப்பு சதவிகிதத்தை எதிர்காலத்தில் குறைக்க உதவும் என்கிறார் ஆய்வுக்குழு தலைவரான ஹாய்ஃபெங் சூ. காளையின் விந்தணுக்கு பதில் மனித விந்தணு பயன்படுத்த முயற்சிகள் தொடங்கியுள்ளன. இதற்கு மாற்றாக புற்றுசெல்களை அழிக்க ட்யூக் பல்கலையினர் கண்டறிந்த எத்தனால் ஜெல்லை உடலில் செலுத்துவதும் மற்றொரு ஐடியா

 5

பயோடெக் கண்டுபிடிப்புகள்!

Amazing Androids

ஸ்பெஸ் ஒடிஸி,டெர்மினேட்டர்களில் ரோபோக்களை பார்த்திருப்பீர்கள். ஆனால் இன்று அச்சு அசலாக நம்மைப்போலவே ஆண்ட்ராய்ட்ஸ்களை உருவாக்க முடியும்.ஜப்பான் பொறியாளர் ஹிரோஷி இஷிகுரோ, தன்னைப்போன்றே ஆண்ட்ராய்ட் ரோபோவை 2013 ஆம் ஆண்டே உருவாக்கிவிட்டார்.

Brain-Computer Interface

மூளையையும் கணினியையும் இணைப்பது மூளை,தண்டுவடம் பாதிக்கப்பட்ட மனிதர்கள் பேசுவதை புரிந்துகொள்ள, கருத்துக்களை பகிர உதவுகிறது. பெரும்பாலும் நினைவுகளை சேகரித்து வைக்கும் பணிக்கு மூளை-கணினி இன்டர்ஃபேஸ் பயன்படுகிறது. கலிஃபோர்னியா மற்றும் பெர்க்கிலியைச் சேர்ந்த ஜோஸ் கார்மெனா,மைக்கேல் மகார்பிஷ் ஆகியோர் இன்டர்ஃபேஸை வயர்லஸ் ஆக்கி சாதித்தனர்.

Bionic Limbs

கைகளை விபத்தில் இழந்தவர்களுக்கு செயற்கை ரோபோட்டிக் கைகள் பொருத்தப்படுவது இன்று சாதாரணம். அறிவியல் கண்காட்சியில் நைஜெல் ஆக்லாண்ட், பெபயோனிக் 3 என்ற செயற்கை கைகளை காலில் உள்ள ஜாய்ஸ்டிக் கட்டளைகளுக்கு ஏற்ப செயல்படுகிறது. மேலும் சில கைகள் நேரடியாக மூளையுடன் இணைக்கப்பட்டும் செயல்படுகிறது.

 தொகுப்பு: விக்டர் காமெஸி, விக்டர் ட்யூடர்
நன்றி: முத்தாரம்

பிரபலமான இடுகைகள்