ஆசம் அறிவியல்!
பிட்ஸ்!
பழக்கப்படாத இடத்தில்
நாம் தூங்கும்போது மூளையின் ஒரு பகுதி ஓய்வெடுக்கும், மற்றொரு
பகுதி ஆபத்தை எதிர்கொள்ள அலர்ட்டாக இருக்கும்.
ஜப்பானில் 2007 ஆம்
ஆண்டு கிஷி ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டராக பதவியேற்ற டாமா(1999-2015) என்ற பூனை, பயணிகளின் எண்ணிக்கையை 10% உயர்த்தி வருமானத்தை 1.1 பில்லியன் யென்னாக மாற்றியது.
ஓவியர் வான்கா
தன் வாழ்நாளில் விற்றது ஒரே ஒரு ஓவியம்தான்.
ரோம அரசரான டியோகிளெட்டியன்
கி.பி. 305 இல், பதவி விலகியவர் மீதி
வாழ்வை தன் தோட்டத்தில் முட்டைக்கோஸ்களை வளர்ப்பதில் செலவிட்டார்.
1928 ஆம்
ஆண்டில் படகு பந்தய வீரர் பாபி பியர்ஸ் பங்கேற்றார். போட்டியில்
நீரில் பயணித்த வாத்துகளுக்காக காத்திருந்து துடுப்பசைத்தவர் அந்த ரவுண்டில் எட்டு
போட்டியாளர்களை முறியடித்து சாம்பியனானார்.
டொயொட்டாவின் தானியங்கி
கார்!
டொயொட்டா லெக்சஸ் 600hL ஆட்டோமேடிக்
காரை தனது ஆராய்ச்சி மையத்தில் தயாரித்துள்ளது. லைடார் ரேடார்,
கேமரா என வசீகர டிசைனில் டெக் உலகை ஈர்த்துள்ளது. லைடார் எனும் சென்சார்களை கலிஃபோர்னியாவைச் சேர்ந்த லூமினார் எனும் ஸ்டார்ட்அப்
நிறுவனம் உருவாக்கியுள்ளது.
தற்போது 360 டிகிரி
கோணத்தில் 200 மீட்டர் தூரம் வரை தடுமாற்றமின்றி செல்லும் ஆட்டோமேடிக்
கார் இது என டொயொட்டா தனது தயாரிப்புக்கு கேரண்டி தருகிறது. வட
அமெரிக்காவைச் சேர்ந்த டொயொட்டா பொறியாளர்கள் இந்த காரின் வடிவமைப்புக்கு உதவி செய்திருக்கின்றனர்.
டொயொட்டோ நிறுவனத்தோடு பிஎம்டபிள்யூ, ஃபோர்டு,
டெய்ம்லர்,ஜெனரல் மோட்டார்ஸ் ஆகியவையும் தானியங்கி
கார் சந்தையில் குதித்துள்ளன. இவை Waymo, Uber, Lyft ஆகிய நிறுவனங்களோடு
ஒப்பந்தம் செய்துகொண்டு டெஸ்ட்களை மேற்கொண்டு வருகின்றன.
ஜீன்
2.0
கடந்த
ஐந்து ஆண்டுகளில் ஜீன்களை எடிட் செய்யும்
Crispr தொழில்நுட்பம் பெருமளவு முன்னேறிவிட்டது. 2012 ஆம் ஆண்டு மரபணுக்களை வெட்டி மாற்றும் தொழில்நுட்பம்
அமுலானது.
Crispr/Cas9 என்ற ஆர்என்ஏவின் ரிபோபுரதத்தைப்
பற்றி இன்றுவரை 5 ஆயிரம் பக்கங்களுக்கு மேல் ஆராய்ச்சி அறிக்கைகள்
வெளியாகியுள்ளன. தற்போது Crispr தொழில்நுட்பம் புற்றுநோய்,ரத்தசோகை,தாலசீமியா ஆகிய நோய்களை தீர்க்கும் ஆராய்ச்சிகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மரபணுக்களை தவறாக வெட்டிவிட்டால் ஏற்படும் அபாயத்தை தவிர்க்கும் நுட்பம் குறித்த ஆராய்ச்சிகள் இவ்வாண்டு நடைபெறவிருக்கின்றன.
"ஒரு ஜீனை இன்னொரு ஜீனாக மாற்றும் திருகலான ஐடியா என
ஜீன் எடிட்டிங் அறியப்படுவதை நான் விரும்பவில்லை. மரபணுவை தொகுக்கும் தொழில்நுட்பத்தை நாம் என் சமூகத்திற்காக பயன்படுத்திக்கொள்ளக்கூடாது?" என்கிறார் ஹார்வர்ட் பல்கலைக்கழக வேதியியல் ஆராய்ச்சியாளரான டேவிட் லியூ. தற்போது பாக்டீரியாவுக்குள் செலுத்தப்படும் Crispr என்ஸைம் எதிரியான நோய் தாக்குதல் பெற்ற டிஎன்ஏவை தாக்கி அழிக்கவும்,
இதன் வேகத்தை முறைப்படுத்தவுமான பொருட்களைப் பற்றிய ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.
யுசி பெர்க்கிலி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் CasY ,CasX ஆகிய புதிய என்ஸைம்களை ஜீன்களை வெட்டித் தொகுக்க கண்டறிந்துள்ளனர்.

கணினிகளை தாக்கும்
ஸ்பெக்டர்!
உலகெங்குமுள்ள
இன்டல் சிப்களை பயன்படுத்தும் கணினிகள், Meltdown,Spectre எனும் புரோகிராம்களால்
பாதிக்கப்பட்டு வருகின்றன. இணைய ப்ரவுசர்களில் உள்ள ஜாவா கோடிங்கை
க்ளிக் செய்தால் கணினியின் நினைவகப்பகுதியை மேற்சொன்ன இரு ப்ரோகிராம்களும் தாக்கி அழிக்கும்.
சரி, இப்பாதிப்பிலிருந்து
தப்பிக்க என்ன செய்யலாம்?
குரோம் மற்றும்
ஃபயர்பாக்ஸ் ஆகிய ப்ரவுசர்களை உடனே அப்டேட் செய்யுங்கள். விண்டோஸ்
10 கணினியில் KB4056892 என்ற ஃபைலை மறக்காமல் அப்டேட்டி
இன்ஸ்டால் செய்யுங்கள். இவையே கணினியை மேற்சொன்ன இரண்டு நச்சு
ப்ரோகிராம்களிடமிருந்து காப்பாற்றும். ஸ்பெக்டர் ப்ரோகிராமால்
கணினி பாதிக்கப்பட்டால் வன்பொருளான சிப்பை மாற்றவேண்டிய வரலாம் என எச்சரிக்கிறார்கள்
பாதுகாப்பு வல்லுநர்கள்.
தொகுப்பு: விக்டர் காமெஸி, மிருதுளா பழனிச்சாமி
நன்றி: முத்தாரம்