அறிவியல் புதுசு!




உலகில் அதிகரிக்கும் முஸ்லீம்கள்!

ஐரோப்பிய நாடுகளில் முஸ்லீம்களின் மும்மடங்கு(6.3%-16.7% ) பெருகியுள்ளதாக ஆய்வுகளில் தெரியவந்திருக்கிறது. ஜெர்மனி அரசு, அகதிகளை நமஸ்தே சொல்லி வரவேற்பதால் 2050 ஆம் ஆண்டில் 19.7% முஸ்லீம்கள் நாட்டின் சொத்தாக இருப்பார்கள் என்கிறது அமெரிக்காவின் வாஷிங்டனைச் சேர்ந்த Pew நிறுவனத்தின் ஆய்வறிக்கை.


ஐரோப்பிய யூனியனிலுள்ள 28 நாடுகளிலும் 2016 ஆம் ஆண்டில் அகதியாக உள்நுழைந்த முஸ்லீம்களின் விகிதம் 4.9%(25.8 மில்லியன்) 2010 இல் இந்த எண்ணிக்கை 19.5 மில்லியன். 2014 ஆம் ஆண்டிலிருந்து சிரியா,இராக்,ஆஃப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு உள்நாட்டு போர் காரணமாக இடம்பெயரத் தொடங்கினர். சைப்ரஸ்(25.4%), பிரான்ஸ்(12.7%),ஸ்வீடன்(20.5%),பின்லாந்து ஆகிய நாடுகள் இடம்பெயரும் அகதிகளின் சொர்க்கமாக மாறிவருகின்றன.

2
இளவரசருக்கு கெட்டிமேளம்!

இங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் திரைப்பட நடிகை மேகன் மார்கெல் இருவருக்கும் வரும் ஆண்டில் கெட்டிமேளம் முழங்கவிருக்கிறது. மேகனுக்கு ஹாரி அணிவித்திருக்கும் மோதிரம் டயானாவின் இரண்டு வைரங்கள் பதிக்கப்பட்டது.

வேனிடி ஃபேர் இதழின் கவர் ஸ்டோரியில்  ஹாரி பற்றியும், தங்களின் காதல் பற்றிய சீக்ரெட்ஸையும் புட்டு புட்டு வைத்துள்ளார் மேகன். இங்கிலாந்தின் ராயல் குடும்பத்து மருமகளாகும் யோகம் கொண்டிருக்கும் மேகன் பற்றிய புரொபைஃல் இதோ:

கலப்பின பெண்!
மேகன் ராயல் குடும்பத்தில் மருமகளாக நுழைவதற்கு பெரும் தடையாக இருந்த விஷயம் இதுதான்.

கத்தோலிக் காரிகை!

2015 ஆம் ஆண்டு வரையும் கூட கத்தோலிக்க குடும்ப சம்பந்தம் ராயல் குடும்பத்தில் நடக்குமா என்று பலருக்கும் டவுட். காலம் மாறுகிறதே? ஹாரி கத்தோலிக்கரான மேகனை மணந்து முந்தைய ஹிஸ்டரியை மாற்றுகிறார்.

மேட் இன் அமெரிக்கா!

இங்கிலாந்து அரச குடும்பத்தில் நுழையும் பெண் மேகன் மார்கெல். இவரின் அம்மா, ஆப்பிரிக்கா-அமெரிக்க பாரம்பரியம் கொண்டவர்.

விவாகரத்து பெண்மணி!

2011 ஆம் ஆண்டு மார்கெல் திரைப்பட தயாரிப்பாளரான ட்ரெவர் இங்கல்சனை மணம் செய்த மேகன், இரண்டு ஆண்டுகளில் அவரை டைவர்ஸ் செய்து சுதந்திரப் பறவையானார். விவாகரத்து பெற்ற பெண்ணை மணப்பது புதிதான புரட்சி ஒன்றுமில்லை. 1936 ஆம் ஆண்டு எட்டாம் எட்வர்ட், இருமுறை விவாகரத்து பெற்ற அமெரிக்க பெண்மணியான வாலிஸ் சிம்ப்ஸனை போராடி மணந்த வரலாறு அரசகுடும்பத்தில் உண்டு.

ஜூலை 2016 ஆம் ஆண்டு ஹாரி - மேகன் உறவு ஊடகங்களுக்கு கசிந்தது. ஜாலி கிசுகிசு எழுதிய பத்திரிகைகளை படித்த ஆக்ரோஷமான ஹாரி அப்பத்திரிகைகளை பகிரங்கமாக கண்டித்தது விஷயத்தை அதிகாரப்பூர்வ உண்மையாக்கியது. "நான் யார், எங்கிருந்து வந்தேன் என்பது பற்றி எனக்கு பெருமையான உணர்வுதான் உள்ளது. இது பற்றியெல்லாம் நான் பெரிதாக கவனம் கொள்வதில்லை" என்பதுதான் இனரீதியான பத்திரிகைகளின் என்கொயரிகளுக்கு மேகன் மார்கெலின் கூல் பதில்.  
 3
நாசாவின் புதிய டயர்!

நாசாவின் எஞ்சினியர்கள் கல்லும் முள்ளும் கொட்டிக்கிடக்கும் வேற்று கோள்களின் ரஃப் பரப்புக்கு ஏற்ற புதிய டயரை கண்டுபிடித்துள்ளனர். இரும்பு வீல்களில் ஸ்பிரிங்குகளுடன் என்பதுதான் டயர் கான்செப்ட். தற்போது  இதில்  நிக்கல்-டைட்டானிய மிக்ஸ் கலந்துள்ளது.

அலாய் டயர்கள் அழுத்தத்திற்கு உட்பட்டு வடிவம் மாறுவது தற்காலிகம்தான். உடனே தன் இயல்பான வடிவத்திற்கு மாறிவிடும் என்பதால் இதற்கு மெமரி அலாய் என்று பெயர். பங்க்ச்சர் அற்ற டயர்களான  இவை எதிர்காலத்தில் இன்னும் பல்வேறு புதிய அம்சங்களுடன் விற்பனைக்கு வர வாய்ப்புள்ளது. முன்னணி டயர் தயாரிப்பு நிறுவனமான, மிச்செலின், தற்போது 3டி டயர்களை தயாரிக்கும் முயற்சியில் உள்ளது
்கமாக மாறிவருகின்றன.

4
 பிடிவாத விஞ்ஞானி!

குழந்தை அடம்பிடித்தால் கமர்கட்,குச்சிமிட்டாய் வாங்கிக்கொடுத்து சமாதானம் செய்யலாம் ஆனால் உலகம் தட்டை என நிரூபித்தே தீருவேன் அமெரிக்க விஞ்ஞானி உதட்டை கடித்தபடி அடம் பிடிக்கிறார்.

கலிஃபோர்னியாவைச் சேர்ந்த மைக் ஹூயூகெஸ், வேஸ்ட் இரும்பில் நீராவியில் பறக்கும் ராக்கெட்டை தயாரித்துள்ளார். பிரச்னை அதல்ல. 20 ஆயிரம் டாலர்கள் செலவில் தயாரித்துள்ள ராக்கெட்டில் பறக்க பர்மிஷன் கொடுத்தால் உலகம் தட்டை என நிரூபிக்கிறேன் தில் பேட்டி கொடுப்பதுதான் சர்ச்சை சரவெடி. "வானில்  1,800 அடிக்கு மேல் பறக்க அரசின் அனுமதி தேவை. நானும் மூன்று ஆண்டுகளாக பர்மிஷன் கேட்டும் அரசு அனுமதிக்க மறுக்கிறது"என கண்ணை கசக்குகிறார் மைக் ஹியூகெஸ். பச்ச புள்ள விஞ்ஞானி!

 5
பரஸ்பரம் பளார்

பஸ், ஷேர் ஆட்டோ தகராறுகள் இன்று சற்றே அப்டேட்டாகி ஃப்ளைட்களில் நடக்கின்றன. அமைச்சர் விமான ஸ்டாஃபை செருப்பால் அடித்தது, பிளைட் பணியாளர் பயணியை புரட்டி எடுத்தது என்ற லிஸ்டில் பரஸ்பரம் பளார் கொடுத்த விவகாரம் புத்தம் புதுசு.

டெல்லி இந்திராகாந்தி ஏர்போர்ட்டில் டெல்லி டூ அகமதாபாத் செல்லும் ஏர் இந்தியாவில் பயணிக்க பெண்மணி ஓடோடி வந்தும் லேட். விமானம் கிளம்பும் நிலையில் செக் இன் கவுண்டரில் ஆமைகளாக ஆபீசர்கள் வேலை செய்ய, டென்ஷனில் நெற்றியில் நாக்குப்பூச்சி புடைக்க பொங்கியெழுந்த பயணி, ஏர் இந்தியா டூட்டி மேனேஜரை யோசிக்காமல் அறைந்தார். அவரும் சுதாரித்து அகமதாபாத் பெண்ணுக்கு சுடச்சுட பளார் விட்டார். அப்படியும் ஆக்ரோஷம் குறையாத அகமதாபாத் அம்மணி, 100க்கு போன் செய்ய போலீஸ் வந்துவிட்டது. பின் இருவரும் கூட்டிக்கழித்து பார்த்து மன்னிப்பு கேட்டபின்தான் போலீஸ் ஸ்டேஷனே மூச்சு விட்டது.

6
Firefox Quantum!

சற்றே தேங்கியிருந்த ஃபயர்ஃபாக்ஸ் கடந்த நவ.14 அன்று தன் புதிய க்வாண்டம் பிரவுசரை ரிலீஸ் செய்துள்ளது. ஸ்லீக் டிசைனில், கண்ணுக்கு குளிர்ச்சியான கிராஃபிக் என கூகுள்,சஃபாரி,ஓபரா என சலித்திருந்தவர்களுக்கு புதிய பிரவுசிங் அனுபவம் தருகிறது க்வாண்டம்.

போட்டான் ப்ராஜெக்ட் மூலம் நவீன பிரவுசருக்கான ஆல் இன் ஆல் அம்சங்களிலும் தூள் கிளப்புகிறது க்வாண்டம். சதுர டிசைன் டேப், நீட் அனிமேஷன்,அனுசரணையான மெனு என க்வாண்டத்தில் எக்சைட்மெண்ட் ஆக அனைத்தும் உண்டு. நவீன சிப்களுக்கேற்ற தயாரிப்பு என்பதால் நேரம்,நினைவகம் எதுவும் வீணாவதில்லை. இன்றைய நிலவரப்படி டெக்னிக்கலாக பிற பிரவுசர்களை விட வேகமானது க்வாண்டம்தான். இன்டர்நெட் வேகம், கம்ப்யூட்டரின் சிப்,ப்ரோசஸர் என பலவிஷயங்கள் பிரவுசர் வேகத்தோடு தொடர்புடையது என்பதால் க்வாண்டம், யூசர் ப்ரெண்ட்லி மற்றும் RAM மிச்சப்படுத்துவதில் கெட்டிக்காரன்தான்.


 தொகுப்பு: ரோனி, கயல்விழி பாமா



பிரபலமான இடுகைகள்