அறிவியல் ரகசியங்கள்!



Image result for dna



டிஎன்ஏ மருந்து!

ஃப்ளூ காய்ச்சலை குணப்படுத்தாமல் நாம் மண்டையைப் பிய்த்துக்கொள்ள காரணம், வைரஸ் தன் ஷேப்பை தொடர்ந்து மாற்றிக்கொண்டே இருப்பதுதான். வாஷிங்டன் மருத்துவப்பள்ளியைச் சேர்ந்த பேராசிரியர் டெபோரா ஃபுல்லர் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் இதற்கான தீர்வாக டிஎன்ஏ மருந்தை கண்டுபிடித்துள்ளனர்.

"நாங்கள் உருவாக்கிய டிஎன்ஏ மருந்து வைரஸ்களின் உள்ளே ஜெனடிக் கோட்டை புகுத்தி, வைரஸின் புரதத்தை அதாவது ஆன்டிஜென்னை உருவாக்குகிறோம். இதனை கண்டறியும் நமது உடலின் நோய்எதிர்ப்பு சக்தி, இதற்கு எதிராக போராடத் தொடங்கும். இதனால் இன்புளுயன்சா வைரஸ் ஏற்படுத்தும் தொற்றுநோய் பாதிப்பை தடுக்கிறது. நோயைக் கட்டுப்படுத்த டிஎன்ஏ மருந்து மூன்றே மாதங்களில் பயன்தரத்தொடங்கி விடுகிறது. தற்போது டெபோரா டீம், டிஎன்ஏ மருந்தை உடலில் செலுத்த ஜீன் துப்பாக்கியை கண்டுபிடிக்க ஆய்வு செய்துவருகிறது. குரங்குகளிடம் சோதித்து பார்க்கப்பட்ட இம்மருந்து, முழுமையாக தடுப்பூசியாக இன்னும் சில ஆண்டுகள் தேவை.

2

மூளையை படிக்க முடியுமா?

நெட்ஃபிளிக்ஸில் ஒளிபரப்பாகும் பிளாக் மிரர் அறிவியல் தொடர்தான் இக்கட்டுரைக்கு ஆதாரம். வீடியோ வடிவில் ஒருவரின் நினைவுகளை ப்ளே செய்து பார்க்க முடிந்தால் எப்படியிருக்கும்? பிளாக் மிரர் சீரியலிலும் அப்படி ஒரு காட்சி. காதுக்கருகில் மினி சதுர பொருளை பொருத்தி ரீகாலர் எனும் டிவி வடிவ சாதனத்தை பார்க்கிறார். அதில் விசாரிக்கப்படும் நபரின் ஹிஸ்டரியே ஓடுகிறது. இது சாத்தியமா?

பயம்,பதட்டம்,மன அழுத்தம் ஆகியவற்றை கட்டுப்படுத்தும் நரம்பு அமைப்புகளை இம்முறையில் தூண்ட வாய்ப்புள்ளது என்கிறார் கலிஃபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் மார்க் வீலிஸ். "இன்றுவரை பயம், மன அழுத்தம் ஆகியவற்றை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பங்கள் கட்டுப்படுத்தப்படவில்லை. ஆனால் அப்படி கண்டுபிடிக்கப்பட்டால் டிடெக்டிவ் அதிகாரிகளுக்கு பேருதவியாக அமையும்" என்கிறார் வீலிஸ். இப்படி டெக்னாலஜி எவரெஸ்ட்டாக உயரும்போது, நம் ஐடியாக்களை திருடுபவர்கள் அதை மாற்றியமைக்கவும் சான்ஸ் உள்ளதே என்ற அபாயமும் உள்ளது.  

3

நோயறியும் மூக்கு!

பெருங்குடல் தொடர்பான நோய்களை டெஸ்ட் செய்து வெயிட்டிங் லிஸ்டில் உட்கார்ந்து ரிசல்ட்களை பெற்று ்பீதியாகியிருப்போம். ஆனால் இனிமேல் அதற்கு காத்திருக்கவேண்டியதில்லை. மூக்கு போதும். நோய் அறியலாம்.

தற்போது மூசி 32 எனும் செயற்கை மூக்கை ஸ்பெயினைச்சேர்ந்த வாலென்சியா பாலிடெக்னிக் பல்கலைக்கழகமும், டா ஃபே எனும் சுகாதார அமைப்பும் இணைந்து கண்டுபிடித்துள்ளன. ஏறத்தாழ 440 சாம்பிள்களை வைத்து டெஸ்ட் செய்ததில் மூன்றே நிமிடத்தில் குடல்நோய்களை 90 சதவிகிதம் சரியாக சொல்லி சாதித்திருக்கிறது மூசி.

பொது பயன்பாட்டுக்கு மூசி வரும் முன்பு, இதன் அல்காரிதம் பல்வேறு நோய்களை கண்டுபிடிக்கும்படி மாற்றும் தேவையுள்ளது. பழத்தில் நுண்ணுயிரிகள் கலப்படம், கனிந்த பழங்கள் ஆகியவற்றை கண்டறியவும் எதிர்காலத்தில் பயன்பட வாய்ப்புள்ளது.

4

சீராகும் ஓசோன் படலம்!

ஓசோன் படலத்தின் ்ஓட்டைப் பற்றி மயிலை டைம்ஸ் வரை எழுதிவிட்டார்கள். 1980-90 ஆண்டுகளில் அனலடித்த பிரச்னை இது. நாசாவின் புதிய ஆய்வு, ஸ்ட்ராடோஸ்பியர் அடுக்கில் ஓசோன் படலம் மெல்ல தன் நிலையிலிருந்து மீண்டு வருவதை ஆய்வு செய்து உறுதிபடுத்தியுள்ளது.

 குளோரோஃப்ளோரோ கார்பன்(CFC) பாதிப்பால் ஏற்பட்ட கேடுகளால், புற ஊதாக்கதிர்களின் பாதிப்பு அதிகரித்து வந்தது. 2000 ஆம் ஆண்டில் இதன் அளவு 4 மில்லியன் ச.கி.மீ. Microwave Limb Sounder (MLS) எனும் சாட்டிலைட் மூலம் ஓசோன் படலத்தின் துளை மெல்ல சுருங்கி வருவதை ஆய்வாளர்கள்  கண்டுபிடித்துள்ளனர். 1987 ஆம் ஆண்டு செய்த மான்ட்ரியல் புரோடோகால் மூலம் நாடுகள் சிஎஃப்சி பயன்படுத்துவதை கட்டுப்படுத்தியதன் விளைவு இது. "குளோரின் கட்டுப்படுத்தப்பட்டதன் விளைவாக ஓசோன் துளை 20% அளவு குறைந்துள்ளது. துல்லியமதிப்பு தெரியவில்லை. CFC யின் வாழ்நாள் நூறு ஆண்டுகள் என்பதால் 2060 ஆம் ஆண்டில்தான் இதன் விளைவை அறிய முடியும்" என்கிறார் ஆய்வாளர் சூசன் ஸ்ட்ராஹன்.

5

காற்றாடிகளில் மூன்று பிளேடுகள் பொருத்தப்பட்டிருப்பது ஏன்?

மின்சாரம் தயாரிக்கும் காற்றாடிகளில் மூன்று பிளேடுகள் பொருத்தப்படுவது சுழற்சியின் தடையைத் தவிர்க்கத்தான். இரண்டு பிளேடுகள் மட்டுமே இருக்கும்போது அதில் ஒ்ன்று மேலே ஒன்று கீழே என சுழலும்போது சமநிலை தவறி சுழற்சி சீர்கெடும். மூன்று பிளேடுகளை அமைக்கும்போது அவை முக்கோண ஷேப்பில் இருப்பதால், சுழலும்போது பிளேடுகள் சமநிலை தவறாமல் குறிப்பிட்ட கோணத்தில் சுழற்சி சமநிலையாக இருக்கும்.

6

பிட்ஸ்!

பசிபிக் கடலிலுள்ள பாய்ண்ட் நீமோ என்ற பகுதிக்கு நிலப்பரப்பு வழியாக சென்றால் 2,700 கி.மீ. பயணிக்க வேண்டும். ஆனால் இதே இடத்தை சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து சென்றடைந்தால் 416 கி.மீ பயணித்தால் போதும்.

ஐசக் நியூட்டன் ஈர்ப்புவிசை பற்றி கண்டறிய உதவிய அவரின் குடும்பத்திற்கு சொந்தமான ஆப்பிள் மரம் 350 ஆண்டுகளுக்கு மேல் இன்றும் பூத்து காய்க்கிறது.

Siamese எனும் பூனை இனத்தில் மிகவும் சென்சிடிவ்வான உடலைக் கொண்டது. வெப்பநிலை மாறும்போது உடல் பாகங்களில் குளிர்ந்த பகுதி கருப்பாகவும், வெம்மையான பகுதி, மென்நிறத்திலும் மாறும். வயதாகும்போது உடல் முழுவதும் கருப்பாகிவிடும்.

சூயிங்கம் மென்றால் உடலில் ஒரு மணிநேரத்தில் 11 கலோரி ஸ்வாஹா ஆகும்.

1557 ஆம் ஆண்டு வெல்ஸ் கணிதமேதை ராபர்ட் ரெக்கார்டே என்பவரால் = கண்டறியப்பட்டது.   

 தொகுப்பு: கா.சி.வின்சென்ட்
நன்றி: முத்தாரம்


  

பிரபலமான இடுகைகள்