ஜாலியாக படிங்க!



Image result for vennela kishore

கரப்பான்பூச்சி கடத்தல்!

அரிய ஆமைகள், வண்ண மீன்கள்,வைரம், தங்கம் ஏன் விசா கிடைக்காத மகனைக்கூட கடத்த ட்ரை செய்து ஏர்போர்ட்டில் வசமாக மாட்டும் ஆட்களுண்டு. ஆனால் கரப்பான்பூச்சியை யாராவது கடத்துவார்களா?


சீனாவின் குவாங்டாம் நகரிலுள்ள பையூன் விமானநிலையம். லக்கேஜ்களை செக் செய்த கஸ்டம்ஸ் அதிகாரிகளுக்கு வயதான தம்பதிகளின் குறிப்பிட்ட கேரிபேக்கில் டவுட். பின்னே பேக்கிலுள்ள பொருள் நகர்கிறதே என கேட்டு பிரித்த பெண் ஆபீசர், ஐயோ என அலறி விட்டார். பேக் முழுக்க 200 கரப்பான் பூச்சிகள். "கரப்பான் பூச்சியை எதுக்கு கடத்தறீங்க?" என்று கேட்டதற்கு, "மனைவியின் தோல் ட்ரீட்மெண்ட்" என கணவர் பதில் சொன்னார். பூச்சிகளை உயிருடன் கொண்டு செல்ல விமானத்தில் பர்மிஷன் கிடையாது என்பதால் கரப்பான்பூச்சிகளுக்கு பிரியாவிடை சொல்லி விமானம் ஏறியிருக்கிறது சீனியர் சிட்டிசன் தம்பதி. கரப்பான்பூச்சியில் பிசினஸ் ஐடியா கிடைச்சிருச்சே!

2

ஆப்கானிஸ்தானில் தீரன்! -ரோனி

மக்களின் உயிர் காக்கும் ராணுவத்தில் பிழைப்புக்காக சிலரும், சாதிக்க சிலரும் தன்னை இணைத்துக்கொள்கிறார்கள். இதில் இரண்டாவது பிரிவினர், எப்போதுமே சூப்பர் ஸ்பெஷல் என்பதற்கு ஆப்கனில் நடந்த சம்பவமே சாட்சி.

ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலில் பரபரப்பாக அரசியல் கூட்டம் நடந்துகொண்டிருந்தது. திடீரென கூட்டத்தை நோக்கி மர்ம மனிதர் வேகமாக நகர்வதை பார்த்து டவுட்டான பாதுகாப்பு அதிகாரி சயீத் பசாம் பாச்சா, உடனே அந்நபரைத் தாக்கி கிடுக்குப்பிடியாக பிடித்து ஸ்பாட்டை விட்டு அப்புறப்படுத்த துணிந்தார். ஆனால் அதற்குள் அம்மனிதர் வயிற்றில் கட்டியிருந்த குண்டை வெடிக்க வைத்துவிட்டார். பலியான 14 பேர்களில் 7 போலீசாரும்,6 மக்களும் அடக்கம். " மக்கள் கூட்டத்தில் நுழைய முயன்ற தீவிரவாதியை சயீத்,  தன் உயிரை தியாகம் செய்து தடுத்திருக்கிறார். அப்பாவி மக்களைக் காப்பாற்றிய சயீத் லெஜண்ட் ஹீரோ" என நெகிழ்ச்சியாகிறார் சக போலீஸ்காரர் பஷீர் முஜாஹெத்.

3

சிக்கிம் பெண் சிங்கம்! -ரோனி

பெண்கள் பல்துறையிலும் தம் ஆளுமையை நிரூபித்து சாதனை படைப்பது இந்நூற்றாண்டின் பெருமை. அதிலும் தன் வழிகாட்டுதலின்றி தன் மன உறுதி மூலமே லட்சியத்தை அடைவது பெருமைதானே! சிக்கிம் அபராஜிதா ராய் அப்படி ஒருவர்தான்.

எட்டு வயதிலேயே வனத்துறை அலுவலரான தன் தந்தையை இழந்த அபராஜிதா ராய், ஆசிரியையான தாய் ரோமாவின் உதவியுடன் B.A LLB படித்தவர் பின் யுபிஎஸ்சி தேர்வை(2010) கனவுடன் எழுதினாலும் முதலில் கிடைத்தது தோல்விதான். பின் விடாமுயற்சியோடு தேர்வெழுதி(2012) அசத்தலான மார்க்குடன் கூர்க்கா பெண்களில் மாநிலத்திலுயே முதல் ஐபிஎஸ் ஆபீசராக உருவாகி பெண்களுக்கு உதாரணமாக நிமிர்ந்து நிற்கிறார் அபராஜிதா ராய். விரைவில் மேற்கு வங்காளத்தின் ஹூக்ளியில் பணிபுரியவிருக்கிறார் அபராஜிதா.  
 4
செல்ஃபீ கோபம்!

செல்ஃபீ எடுப்பவருக்கு மகிழ்ச்சி. ஆனால் அருகிலிருப்பவருக்கு அது சந்தோஷத்தை கொடுக்குமா என யோசிக்காமல் கேமராவைக் கிளிக் செய்தால் என்னாகும்? கர்நாடகா அமைச்சர் டிகே சிவகுமார் அதற்கு சூப்பர் சாம்பிள்.

அண்மையில் கர்நாடகாவின் பெல்காமில் நடந்த குழந்தைகள் உரிமைகள் நிகழ்ச்சியில் பங்கேற்றார் அமைச்சர் டிகே சிவக்குமார். அவரும் அரசின் திட்டங்கள் பற்றி புள்ளி,கமா பிசகாது பேசிக்கொண்டிருந்தார். ஆனால் அனைத்தையும் ஒரு செல்ஃபீ மாற்றிவிட்டது. அமைச்சர் சிவக்குமாரின் பின்னால் இருந்த இளைஞர், நானோ செகண்ட் கேப் விடாமல் செல்ஃபீயாக எடுத்து தள்ளுவதை முதலில் ஓகே என கண்டுகொள்ளாதவர், பின் டென்ஷனாகி அவரை அடிக்கப் பாய்ந்ததில் அந்த இடமே ரணகளமானது. அமைச்சரின் ஆக்ரோஷத்தால் இந்த வீடியோ இணையத்தில் ஸ்லீப்பர் ஹிட்டாகி வருகிறது
5
சாக்ஸூக்காக ஜெயில்!-ரோனி

பல்விளக்குவது, குளிப்பது, துணி துவைப்பது எல்லாம் பேசிக் விஷயங்கள். இதையும் சரியாக செய்யவில்லை என்றால் என்னாகும்? இமாச்சலில் பிரகாஷூக்கு நடந்ததுதான் உங்களுக்கும் நடக்கும்.

இமாச்சலப்பிரதேசத்தைச் சேர்ந்த பிரகாஷ் குமார் பஸ் பயணத்தில் அதிரடியாக போலீசாரால் அரஸ்ட் செய்யப்பட்டுள்ளார். எதற்கு? சாக்ஸை துவைக்காததற்குத்தான். டெல்லிக்கு பஸ்சில் வந்தபோது, பிரகாஷின் சாக்ஸ் நாற்றத்தால் டரியலான சக பயணிகள் போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளைண்ட் கொடுத்துவிட்டனர். நாற்றம் பிடித்த சாக்ஸை கழற்றாமல் ஆர்க்யூமெண்ட் செய்து பொது அமைதியை நாஸ்தி செய்த க்ரைமில் லாக்கப்பில் அடைக்கப்பட்டுள்ளார். அங்கேயும் சாக்ஸை கழட்டலியா?
6
பிரியாணி யோகா!-ரோனி

பள்ளியில் கட்டாய யோகா,யோகா தினம் என பிஜேபி அமல்படுத்திய யோகாவை இந்தியர்கள் இவ்வளவு சீரியஸாக எடுத்துக்கொள்வார்கள் அக்கட்சி கூட எதிர்பார்த்திருக்காது. மேட் யோகா, பீர் யோகா என பிரியாணி யோகா ஜூரம் தற்போது செம ஹிட்.

அதென்ன பிரியாணி யோகா? யோகா விரிப்பின் முன்புறம் ஒரு பிளேட் பிரியாணி வைத்துவிட்டு யோகாவை கடகடவென செய்யுங்கள். அம்புட்டுத்தேன். வடிவேலுவின் காமெடி சீன் போல இருந்தாலும் இணையத்தில் இதையும் சீரியசாக ஃபாலோ செய்யும் யோகாசன பக்தாளின் வீடியோக்கள் வைரலாகி டஜன் கணக்கில் உலா வருகின்றன. கொலப்பசி யோகா!

தொகுப்பு: ரோனி ப்ரௌன்
நன்றி: குங்குமம்