ஜஸ்ட் அறிவியல்


Related image




ஏஐ கண்டுபிடித்த புதிய கோள்கள்!
நாசா மற்றும் கூகுள் ஏஐ ஆகிய இருநிறுவனங்களும் இணைந்து இரண்டு புதிய கோள்களை கண்டுபிடித்துள்ளனர். இதற்கு முன்பே கெப்ளர் விண்வெளி டெலஸ்கோப் மூலம் 2,525 கோள்களை கண்டுபிடித்துவிட்டனர்தான். ஆனால் இதில் ஸ்பெஷல் என்ன? இது கூகுள் ஏஐ மூலம் கண்டறியப்பட்டதுதான். 90i,80g ஆகிய கோள்கள் இதில் கவனிக்கத்தக்கன. 90i கோளின் வெப்பநிலை 800 டிகிரி பாரன்ஹீட்.

ஏஐ எப்படி கோள்களை கண்டுபிடிக்கும் அளவு முன்னேறியது? நியூரல் நெட்வொர்க்ஸ் தொழில்நுட்பம் மூலம்தான். கெப்ளர் டெலஸ்கோப் மூலமாக கோள்களை எடுத்த அனைத்து படங்களையும் தொடர்ந்து பயிற்சி செய்த கூகுள் ஏஐ புதிய கோள்களை அந்த அம்சங்களை வைத்து கண்டுபிடித்துள்ளது. "நியூரல் நெட்வொர்க்ஸ் பல்லாண்டுகளுக்கு முன்பே சந்தைக்கு வந்துவிட்டது. ஆனால் இன்றுதான் அவை சக்சஸ்ரேட் காட்டுகின்றன" என்கிறார் கூகுளின் ஏஐ தொழில்நுட்ப எஞ்சினியர் கிறிஸ்டோபர் ஷல்லூ

2
ஹெட்போனை முந்தும் நூராபோன்!

நூராபோனின் தனித்துவமான டிசைன் ஆடோஅகௌஸ்டிக் துல்லியமான இசை அனுபவத்தை தருகிறது. ஹெட்போனைப் பொறுத்தவரை சுற்றுப்புறம் சைலண்டாக இருப்பதோடு ஹெட்போன் காதோடு காதலி போல நெருக்கமாக இருக்கவேண்டும் என்ற கண்டிஷன்கள் உண்டு.

ஆனால் நூரா போனில் உள்காதுமடலில் பாடலை பொழியும் இதன் அசத்தல் டிசைன் வெளிப்புற கூச்சல்களை மறக்கச்செய்வதோடு இதன் Bass இசை கேட்டு சலித்த பாடல்களையும் திரும்ப மேஜிக் மந்திரமாய் கேட்க வைக்கிறது. இசைப்பொழிவு அருவி போன்ற தன்மை கண்முன்னே இசைத்திருவிழாவில் பாடல் பாடப்படுவது போல கிறக்கம் தருகிறது இதன் ஸ்பெஷல். 20 மணிநேர பேட்டரி, யுஎஸ்பி- சி, மைக்ரோ யுஎஸ்பி, ப்ளூடூத் aptX HD வசதிகளைக் கொண்ட ஹெட்போன் விலை 349 டாலர்கள். விலை ரூ.30,248

3

பிட்ஸ்!

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஹம்பேக் டால்பின்கள், தம் காத்ல இணையைக் கவர என்ன செய்யும் தெரியுமா? சிம்பிளாக கடற்பஞ்சு கலெக்சனை தன் பிரிய சகியை நோக்கி ஆக்ரோஷமாக வீசுமாம்.

அமெரிக்காவின் தபால்துறை ஜெனரல், அமெரிக்க அதிபருக்கு அடுத்த நிலையில் உள்ளார். எதில்? சம்பளத்தில்தான்($2,76,840).

யாகன் மொழியைச் சேர்ந்த Mamihlapintapai என்ற வார்த்தைதான் உலகில் மொழிபெயர்க்க மிக கடினமான வார்த்தை. தோராய அர்த்தம், இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். முதலில் யார் பேசுவது என தயக்கத்துடன் இருக்கிறார்கள். 

சினிமா,உணவு,விளையாட்டு,வீடியோகேம் ஆகியவற்றைவிட லாட்டரி டிக்கெட்டுகளை வாங்குவதில் அதிகம் மெனக்கெடுவது யார் தெரியுமா? அமெரிக்கர்கள்.

அமெரிக்காவில் க்ரைம்களில் ஈடுபட்டு போலீஸ் கஸ்டடியில் உள்ள விலங்குகளில் 96% நாய்கள்தான். இதில் பூனைகளின் பங்கு 1% மட்டுமே.

 4
எக்சிடோனியம் கண்டுபிடிப்பு!

இலினாய்ஸ் பல்கலையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் எக்சிடோனியம் எனும் புதிய பொருளை கண்டுபிடித்துள்ளனர். நீர்மமாக,கடத்தியாக பல்வேறு தன்மைகளின் கூட்டிணைவான அம்சங்கள் கொண்ட  எலக்ட்ரானிக் கிரிஸ்டல் போன்ற பொருள் இது.

ஒரு பொருளிலிருந்து எலக்ட்ரான்கள் இன்னொரு நிலைக்கு தப்பிச் செல்லும்போது ஏற்படுத்தும் துளைகளில் நேர்மறை மின்னோட்டம் ஏற்படுகிறது. இது எதிர்மறை எலக்ட்ரானை ஈர்க்கிறது. dichalcogenide titanium diselenide (1T-TiSe2) என்ற பொருளிலிருந்து எலக்ட்ரான்கள் சோதனை செய்யப்பட்டு எக்சிடோனியம் கண்டறியப்பட்டுள்ளது. 1960 ஆம் ஆண்டு எக்சிடோனியம் பற்றிய தியரியை பெர்ட் ஹால்பெரின் முன்பே அறிமுகப்படுத்தினார்.  
span>. 

சினிமா,உணவு,விளையாட்டு,வீடியோகேம் ஆகியவற்றைவிட லாட்டரி டிக்கெட்டுகளை வாங்குவதில் அதிகம் மெனக்கெடுவது யார் தெரியுமா? அமெரிக்கர்கள்.

அமெரிக்காவில் க்ரைம்களில் ஈடுபட்டு போலீஸ் கஸ்டடியில் உள்ள விலங்குகளில் 96% நாய்கள்தான். இதில் பூனைகளின் பங்கு 1% மட்டுமே.

 5
குட்நைட் கேட்ஜெட்ஸ்!

Philips Hue White & Colour Starter Kit

பிலிப்ஸின் டிஸ்கோ கலர் பல்புகள் இரவுத்தூக்கத்தை தூண்டும் வகையில், காலையில் அலாரத்தொல்லைகள் இல்லாமல் எழவும் உதவும். 16 மில்லியன் நிறங்களை ரங்கோலியாய் பொழியும் இந்த லைட்டை அலெக்ஸா, கூகுள் ஹோம் உடன் இணைத்து உங்கள் குரலால் அதட்டி மிரட்டி லைட் செட் செய்யலாம். விலை ரூ.14,673.

SensorWake Olfactory Alarm Clock

அலாரம் வைத்து பதட்டத்துடன் எழுந்திரிப்பதில் என்ன சுவாரசியம்? சென்ஸார்வேக், காலையில் உங்களை விதவிதமான சென்ட் மணத்துடன் எழுப்பும். சாக்லெட்,லாவெண்டர் என வாசனை உங்கள் சாய்ஸ். இனி ஒவ்வொரு மார்னிங்கும் புத்தம்புது காலை என ராஜா பாட்டோடு இன்ட்ரஸ்டாக விடியும். விலை ரூ.8630

Homni

உங்கள் உறக்கத்தை கண்காணிக்கும் மினி ரோபாட். ஸ்மார்ட் போனோடு இணைத்து பல்வேறு தகவல்களை சேமிக்கலாம். அதோடு உறக்கத்திற்கு தேவையான லைட்டிங்,பாடல்களையும் இதில் கேட்கமுடியும். ப்ளூடூத் வசதி பிளஸ். விலை ரூ.17,177


6
கச்சா எண்ணெய்க்கு லோன் கட்!

2019 ஆம் ஆண்டுக்குள் கரிம எரிபொருட்களை அகழ்ந்தெடுக்கும் திட்டங்களுக்கு கடன் உதவிகளை நிறுத்திக்கொள்ள உலகவங்கி முடிவெடுத்துள்ளது. வளர்ந்துவரும் நாடுகளுக்கு உலகவங்கி பல்வேறு தொழில்முயற்சிகளுக்கு கடனுதவியை வழங்கிவருகிறது. தற்போது One Planet மாநாட்டில் இனி அந்த உதவி கரிம எரிபொருள் நிறுவனங்களுக்கு கிடைக்காது என்று உறுதியாக கூறிவிட்டது.

2020 ஆம் ஆண்டில் பருவச்சூழல் மாறுபாட்டுக்காக உலகவங்கி 28% நிதியை செலவழித்து திட்டங்களை செயல்படுத்தி வந்தது. தற்போது உலகமே புதுப்பிக்கும் ஆற்றல் கருவிகளுக்கு நகர்ந்துவரும் நேரத்தில் உலகவங்கியின் இந்த அறிக்கை சூழலியலாளர்களை உற்சாகம் கொள்ள வைத்திருக்கிறது. உலகவங்கியின் இந்த அதிரடி முடிவுக்கு பாரீஸ் ஒப்பந்தமும் முக்கிய காரணம். அமெரிக்க அதிபர் சூழல் ஒப்பந்தத்திலிருந்து வெளியேறிய அதேசமயம் இரு ஆண்டுகள் நிறைவைக் கொண்டாடிய விழா ஒன் பிளானட் ஆகும்.



Homni

உங்கள் உறக்கத்தை கண்காணிக்கும் மினி ரோபாட். ஸ்மார்ட் போனோடு இணைத்து பல்வேறு தகவல்களை சேமிக்கலாம். அதோடு உறக்கத்திற்கு தேவையான லைட்டிங்,பாடல்களையும் இதில் கேட்கமுடியும். ப்ளூடூத் வசதி பிளஸ். விலை ரூ.17,177


தொகுப்பு: கா.சி.வின்சென்ட், ஆலன் வான்கா
நன்றி: முத்தாரம்