தலைவன் இவன் ஒருவன்! -சமூக தொழில்முனைவோர் தொடர்!
தலைவன் இவன் ஒருவன் 7
கரினா கேஸ்டில்டோ
பகதூர் ராம்ஸி
வகுப்பில் நீங்கள் என்னவாக விரும்புகிறீர்கள் என்பது
கேஷூவல் கேள்வி. அதற்கும் அப்போது மண்டையில் தோன்றியபடி,
எஞ்சினியர் ஆவேன், டாக்டர் ஆவேன், நாசா விஞ்ஞானி ஆவேன், போயிங் பைலட் ஆவேன் என அப்போதைய
உயர்ந்த ஆசையை மாணவர்களும் குட்பாய் என்று பெயர் வாங்க ஒப்பிப்பார்கள். ஆனால் கரினா தயங்கவேயில்லை. நான் புயல் கணிப்பாளர் ஆகப்போகிறேன்
என்றார். இன்று தன் சமூகத்தினருக்கான வாழ்வை வடிவமைப்பில் உதவுவது
அவரின் லட்சிய ஆசைதான்.
அமெரிக்காவின் ப்ளோரிடா மாநிலத்திலுள்ள மியாமியில்
பிறந்த கரினா, மியாமி பல்கலையில் இரண்டு மீட்டராலஜி பட்டங்களைப்
பெற்றவர். அவசரகால உதவிகளை அளிக்கும் அலுவலகத்தில் பணியாற்றிய
அனுபவங்களை கொண்டவர் கரினா. "நான் வெறுமனே கம்ப்யூட்டருக்கு முன்னே அம்மர்ந்து கொண்டு புரோகிராம் எழுத விரும்பவில்லை.
நான் எனது பணி மூலம் மக்களின் தினசரி வாழ்க்கை பிரச்னை எதிலாவது தீர்வு
கொண்டுவர நினைத்தேன்" என ஆச்சர்ய பதில் தருகிறார் கரினா. கரினா வசிக்கும் கடற்கரைக்கு
அருகிலுள்ள குடியிருப்பில் கடல் அடிக்கடி எல்லைதாண்டி உள்ளே வருவது சூழல் குறித்து
கரினாவை அறிந்துகொள்ள தூண்டியது. "எங்கள் லத்தீன் மக்களின்
வாழ்வில் இயற்கைக்கு முக்கிய இடமுண்டு.
தன்னைவிட தன் குழந்தைகளைப்
பற்றி பேசும்போதுதான் பெண்கள் சூழல் பற்றிய அக்கறையே வருகிறது." என மக்களின் நாடி பிடித்து பேசுகிறார் கரினா.
மதர் க்ளீன் ஏர்ஃபோர்ஸ் என்ற பெயரில் காற்று மாசுக்கான
மக்கள் பேரணி நிகழ்வை ஒருங்கிணைத்தார் கரினா. 1 லட்சம் உறுப்பினர்களை
அதில் இணைத்து பல்வேறு கொள்கைகள், ஊடக விழிப்புணர்வு,
பிரசாரம் உள்ளிட்டவைகளை அர்ப்பணிப்போடு செய்துவருவதுதான் கரினாவை பசுமை
தலைவர்களின் ஒருவராக உலகளவில் அங்கீகரிக்கப்பட முக்கிய காரணம்.
மியாமி பீச் பகுதியில் உள்ள கட்டுமான நிறுவனங்கள்
அடிக்கடி கடல்மட்டம் உயர்ந்து தெருக்களில் நீர் தேங்குவதால், அதனை சமாளிக்க கட்டிடத்தையும் தெருவையும் உயர்த்தி கட்டினார்கள்.
"பிரச்னையை முழுமையாக புரிந்துகொள்ளாததன் வெளிப்பாடு இது.
கடல்நீர் உயரும் பிரச்னையை ஆழ புரிந்துகொண்டு கட்டிடங்களை உருவாக்கவேண்டும்"
நகரத்தின் கட்டுமானத்துறை தலைவரான சூஸி டோரியன்ட்.
நகர அமைப்பிடம் மியாமி கடற்கரை நீர் உயர்வுக்கேற்ப கட்டிடங்களை கட்டுவது,
வெப்பநிலை உயர்வது தொடர்பான விழிப்புணர்வு என கரினா அனைத்திலும் முன்னுதாரண
தலைவர்தான்.
நன்றி: முத்தாரம்
தொகுப்பு: பகதூர் ராம்ஸி, கா.சி.வின்சென்ட்