இடுகைகள்

தேவாலயம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பாலியல் வல்லுறவை அறிந்து தடுக்க முயன்ற கன்னியாஸ்த்ரீக்கு நேர்ந்த கொடூரம்!

படம்
  சிஸ்டர் கேத்தி பாதிரி ஜோசப் மாஸ்கெல் பாலியல் வல்லுறவை அறிந்து தடுக்க முயன்ற கன்னியாஸ்த்ரீ- மர்மமாக இறந்துபோனவரை ஐம்பது ஆண்டுகளாக தேடும் காவல்துறை   குங்குமத்தில் ஆசிரியர் கே என் சிவராமன் வைக்கும் பெரிய தலைப்பு போல இருக்கிறதா? விஷயம் அந்தளவு நீளமானது.   1969ஆம் ஆண்டு நவம்பர் 7 அன்று கன்னியாஸ்தரீ கேத்தரன் செஸ்னிக் சுருக்கமாக கேத்தி தனது அபார்ட்மென்டில் இருந்து கடத்தப்பட்டார். பிறகு அவரைப் பற்றி எந்த தகவலும் இல்லை. 1970ஆம்ஆண்டு ஜனவரி மூன்றாம் தேதி, இரண்டு வேட்டைக்காரர்கள் குப்பை கொட்டும் இடத்திற்கு அருகில் கடந்த கேத்தியின் உடலை கண்டுபிடித்தனர். காவல்துறையும் உடலைப் பெற்றது. கேத்தியின் சகோதரி, தனது சகோதரி இன்னும் உயிரோடு இருக்கிறாள். அவள் திரும்ப வந்துவிடுவதாக எண்ணிக்கொண்டு வாழ்ந்து வருகிறார். கேத்தி, பெண்கள் படிக்கும் ஆர்ச்பிஷப் கியோஹ் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். அவர் மர்மமாக கொல்லப்பட்ட காரணம், அங்கு பெண் மாணவிகள் மீது நடத்தப்பட்ட பாலியல் வல்லுறவை, சீண்டல்களை அடையாளம் கண்டதுதான் என்று கேத்தியின் சகோதரி மர்லின் செஸ்னிக் ராடாகோவிக் கூறுகிறார். மாணவிகளுக்கு இழை

தெரிஞ்சுக்கோ - நகரங்கள்

படம்
  தெரிஞ்சுக்கோ இந்தோனேஷியாவின் தலைநகரான ஜகார்த்தாவில்,   பதிமூன்று ஆறுகள் ஓடுகின்றன. இந்த நகரம் ஆண்டுக்கு 1-15 செ.மீ என்ற அளவில் கீழே முழுகிக்கொண்டு இருக்கிறது. 1966-1987 காலகட்டத்தில் ஐஸ்லாந்து நாட்டின் ரெய்க்ஜாவிக் நகரில் வியாழக்கிழமை டிவி பார்ப்பதற்கு தடை இருந்தது. சீனாவில்31.18 பெய்ஜிங் நகரில் 699.3 கி.மீ. தொலைவுக்கு இருப்பு பாதையும், 405 ரயில் நிலையங்களும் உள்ளன. தென் ஆப்பிரிக்காவில் மூன்று தலைநகரங்கள் உண்டு. பிரிடொரியா, நாட்டின் தலைநகர். கேப் டவுன், சட்டம் இயற்றப்படும் நகரம், பிளோம்ஃபான்டெய்ன், நீதிமன்றம் இயங்குவதற்கானது. இத்தாலி நாட்டின் தலைநகரான ரோமில்   900 தேவாலயங்கள் உள்ளன. மங்கோலியாவின் உலானபாட்டர் நகரில் பதிவான தோராய ஆண்டு வெப்பநிலை -1.3 டிகிரி செல்சியஸ். 1801-1821 காலகட்டம் வரையில் தென் அமெரிக்காவின் ரியோ டி ஜெனிரோ போர்ச்சுக்கல் நாட்டின் தலைநகராக செயல்பட்டது. அவர் வேர்ல்ட் இன் நம்பர்ஸ் image - pinterest

தொன்மையான இடங்களைக் கொண்ட கோட்டார்!

படம்
  கோட்டார் அமைந்துள்ள இடம் மான்டெனெக்ரோ குடியரசு கலாசார இடமாக அறியப்பட்ட ஆண்டு 1979 என்ன செய்யலாம் கடல் பகுதியில் படகு ஒன்றை வாடகைக்கு பிடித்து ஜாலியாக டூர் செல்லலாம்   கோட்டார், அட்ரியாடிக் கடல்பகுதியில் அமைந்துள்ளது. துறைமுகம் அமைந்துள்ள பகுதி நீங்கள் கனவில் காணும் காட்சி போல அழகாக அமைந்துள்ளதுதான் சிறப்பானது. நீர்பரப்பு அதற்கு அருகில் உயர்ந்துள்ள மலைப்பகுதிகள் என பார்க்க பிரமிக்க வைக்கும் காட்சிகளை இங்கு காணலாம். ரோமன் கால கட்டிடங்கள், அகலமான சாலைகள், மத்திய காலகட்டத்தில் கட்டப்பட்ட சுவர்கள், தேவாலயங்கள் என பார்த்து வியப்பு கொள்ள மகிழ நிறைய இடங்கள் உள்ளன. கோட்டார் பகுதி, பதினைந்தாம், பதினேழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இப்பகுதியின் பரப்பு, 14,600 சதுர கிலோமீட்டராகும். இந்தியாவில் தொன்மையான இடங்களை பாதுகாக்கிறோம் என சங்கர் சிமெண்டை குலைத்து பூசுவார்கள் அல்லவா, அந்த மாதிரி இல்லாமல் உண்மையாகவே தங்களது பாரம்பரிய இடங்களை பாதுகாக்க மெனக்கெடுகிறது அரசு. நகரத்தின் முக்கியமான கட்டிடங்களை சிறப்பாக மறு புனரமைப்பு செய்து பாதுகாக்கிறார்கள். கோட்டார் கடற்புறம் மட்டுமல்லாது அதன்

பார்க்க வேண்டிய இடம் - மான்ட் செயின்ட் மிச்செல் , பசிபிக் கடலில் ஏற்படும் மாசுபாடு

படம்
  மான்ட் செயின்ட் மிச்செல் பிரான்ஸ் நாட்டில் நார்மாண்டியில் அமைந்துள்ள தீவு. மத்திய காலத்தில் உருவாக்கப்பட்ட கட்டுமானங்கள் தீவுக்கு அழகு சேர்க்கின்றன. பெரும்பாலான கட்டிடங்கள் எல்லாமே கிரானைட்டில் உருவாக்கப்பட்டவை. அனைத்தும் மலைமீது அமைக்கப்பட்டுள்ளன. இங்கு ஜாலி சுற்றுலா செல்ல நினைத்தால் காலையில் நேரமே எழுந்தால் சூரியக் கதிர்கள் உங்கள் மீது படும்போது புகைப்படம் எடுக்கலாம். அதை இன்ஸ்டாகிராமில் பதியலாம். நேரம் ஆனால் நீங்கள் மட்டுமல்ல, பிறருக்கும் தூக்கம் கலைந்துவிடும். எனவே நிறைய பேர் வந்துவிடுவார்கள். நெரிசலில் புகைப்படம் எடுத்து நமது வரலாற்றை நிரப்பவேண்டியிருக்கும். கார்களை இரண்டு கி.மீ. தூரத்தில் நிறுத்திவிடவேண்டிய நிபந்தனை உண்டு. தொன்மை கட்டுமானங்களை மக்களின் புகைப்பட பரவசத்திலிருந்து காப்பாற்றவே இந்த ஏற்பாடு. ஆண்டுக்கு 3 மில்லியன் சுற்றுலா பயணிகள் இங்கு வந்து போகிறார்கள். மான்ச் செயின்ட் மிச்செலில் அற்புதமாக கட்டப்பட்ட தேவாலயம் உண்டு. அடுத்து, இங்கு பாறைகளை பிளந்து உருவாக்கப்பட்ட இடம், போர்க்காலத்தில் மக்கள் ஒளிந்துகொள்ள பயன்பட்டது. பிறகு மக்களை சிறை வைக்கும் சிறையாகவும் பயன்பட

தாவரங்களை ஆராய்ச்சி செய்வதற்காக தன் வாழ்வை அர்ப்பணித்துக்கொண்டவர்! கிரிஸ்டியன் கான்ராட் ஸ்பிரேங்கல்

படம்
  கிரிஸ்டியன் கான்ராட் ஸ்பிரேங்கல் ( Christian konrad sprengel 1750 -1841) ஜெர்மனியின் பிராண்டன்பர்க் நகரில் பிறந்தார். பெற்றோர், எர்னஸ்ட் விக்டர் ஸ்ப்ரேங்கல், டோரோதியா ஞாடன்ரெய்ச்.  1770ஆம் ஆண்டு ஹாலே பல்கலைக்கழகத்தில் இறையியல், மொழியியல் பாடங்களைப் படித்தார். 1780ஆம் ஆண்டு பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றிக்கொண்டிருந்தார். கிடைத்த ஓய்வு நேரத்தில், தாவரவியல் பற்றி படித்துக்கொண்டிருந்தார். தாவரங்களில் நடைபெறும் மகரந்தச்சேர்க்கையை மேம்படுத்த முயன்றுகொண்டிருந்தார். கல்விப்பணி மற்றும் மத ரீதியான செயல்பாடுகளை தாவரங்களை ஆராய்ச்சி செய்வதற்காக குறைத்துக்கொண்டார்.  1793ஆம் ஆண்டு கான்ராட் வெளியிட்ட தாவரவியல் நூலில் 461 தாவர இனங்களைப் பற்றி குறிப்பிட்டிருந்தார். இதில் 1000க்கும் மேற்பட்ட பூக்களின் ஓவியங்கள் இருந்தன. 1794ஆம் ஆண்டு பள்ளி நிர்வாகம், கான்ராடை  ஆசிரியர் பணியிலிருந்து நீக்கியது. அறிவியலாளர்கள் கான்ராடின் ஆராய்ச்சியை பெரியளவு அங்கீகரிக்கவில்லை. 1841ஆம் ஆண்டு சார்லஸ் டார்வின், கான்ராடின் ஆராய்ச்சியை ஏற்றுக்கொண்டார். பின்னரே அறிவியலாளர்கள் கான்ராடை ஏற்று அங்கீகரித்தனர்.  https://www.encycl