இடுகைகள்

விருது - ஸ்வாதி சதுர்வேதி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

விருது வென்ற புலனாய்வு பத்திரிகையாளர்!

படம்
புலனாய்வில் சாதனை! தி வயர் இதழின் புலனாய்வு செய்தியாளர் ஸ்வாதி சதுர்வேதி, RSF(Reporters Without Borders) விருதினை அண்மையில் வென்றுள்ளார். “புலனாய்வு செய்தியாளராக பணியாற்ற விரும்புகிறேன். நான் எழுதும் கட்டுரைகளை ஆட்சியில் இருக்கும் எந்த கட்சியும் விரும்பமாட்டார்கள் என்பது உண்மை. ஆனால் பாஜக அரசு(மோடி) போல விமர்சித்த பத்திரிகையாளர்களை யாரும் கொன்றழித்தது கிடையாது” என உறுதியாக பேசுகிறார் ஸ்வாதி சதுர்வேதி. ஜெயின் கமிஷன், ரஃபேல் ஒப்பந்தம் என ஸ்வாதி எழுதிய கட்டுரைகள் அரசியல்வாதிகளின் தூக்கத்தை தொலைத்தது உண்மை. இந்துஸ்தான் டைம்ஸில் எழுதிய கட்டுரைக்காக பாக்கிலிருந்து தாவூத் போனில் மிரட்டியது, ஜெயின் கமிஷன் கட்டுரை வெளியாக ஐ.கே.குஜ்ரால் அரசு கவிழ்ந்தது வரை ஸ்வாதிக்கு விருதுகளை விட விரோதிகள்(அரசு அதிகாரிகள், மாஃபியாக்கள், ரவுடிகள், அரசியல்வாதிகள்) அதிகம். இருபது ஆண்டுகளாக பல்வேறு ஊடக நிறுவனங்களில் புலனாய்வு நிருபராக செயல்பட்டவர் ஸ்வாதி. “மோடி அரசு, பத்திரிகையாளர்களின் விமர்சனத்தை விரும்புவதில்லை. சியர்ஸ்லீடர்ஸ் போல பத்திரிகைகள் செயல்பட விரும்புகிறார்” என கண்டக்குரல் எழுப்பி